புதுடெல்லி: லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தியைக் கொடுத்த மத்திய அமைச்சரவை, ஒன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு, அகவிலைப்படியில் கொடுப்பனவு (DA) மற்றும் போக்குவரத்து படிகள் (டிஆர்) ஆகியவற்றை 17 சதவிகிதத்தில் இருந்து 28 சதவீதம் வரை அதிகரித்தது. இதனால் கிட்டத்தட்ட 1.14 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
இரண்டு மாதங்களாக சில்லறை பணவீக்கம் 6 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் காலகட்டத்தில் மத்திய அரசின் இந்த முடிவு வெளிவந்துள்ளது. டி.ஏ. மற்றும் டி.ஆர் அதிகரிப்பு இந்த பயனாளிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் உணவு மற்றும் எண்ணெய் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், ஏழாவது ஊதியக்குழு அமலாக்கம் ஆசுவாசத்தை கொடுத்துள்ளது.
கிராக்கிப்படி உயர்வு ஒய்வுதியம் பெறுபவர்களுக்கும் கிடைக்கும். மேலும். கிராக்கிப்படியில் சுமார் 11 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் அரசு ஊழியர்களுக்குக் சம்பளம் கூடுதலாகக் கிடைக்கும்.
Also Read | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம், இதுதான் காரணம்
இந்த விவரங்களை அளித்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர், டிஏ மற்றும் டிஆரின் புதிய விகிதங்களை அமல்படுத்துவதால் அரசுக்கு 34,401 கோடி ரூபாய் அதிக செலவாகும் என்று தெரிவித்தார். புதிய விகிதங்கள் ஜூலை 2021 முதல் நடைமுறைக்கு வரும்.
மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படியும் இணைக்கப்பட்டுள்ளதால், டி.ஏ. உயர்வு மாதாந்திர வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடை (Gratuity) தொகையும் அதிகரிக்கும். இது தற்போது அரசுத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும்.
ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் வாட்ஸ்அப்பில் ஓய்வூதியம் தொடர்பான தகவல்களையும், விவரங்களையும் பெறுவார்கள். ஓய்வூதியதாரர்களின கணக்கில் வரவு வைக்கப்பட்ட ஓய்வூதியம் தொடர்பாக விவரங்கள், எஸ்.எம்.எஸ், மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக செயலிகளிலும் அனுப்பலாம் என்று மத்திய அரசு, வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ALSO READ | மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பு: இதுதான் ஊதிய கணக்கீடு
இது தொடர்பாக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி, அகவிலைப்படி, டி.ஆர் நிலுவைத் தொகை தொடர்பாக ஓய்வூதியதாரர்களுக்கு இந்த தகவல்கள் தேவைப்படுவதால், இந்த நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 31 க்கு பிறகும் விடுப்பு பயண கொடுப்பனவு (Leave Travel Allowance) கோருவதற்கான பில்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
“விடுப்பு பயண கொடுப்பனவு இறுதி தேதியை நீட்டிக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவிட் -19 காரணமாக இருக்கும் நிலைமை மற்றும் உரிமைகோரல்கள் / பில்களை தாக்கல் செய்வதில் உள்ள சிக்கல்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஆவணங்களை சமர்ப்பிக்க கடைசி நாளான 31.05.2021 என்பதில் இருந்து காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 31.03.2021 அன்று அல்லது அதற்கு முன்னர் செய்யப்பட்ட உரிமைகோரல்கள் / கொள்முதல்களை தொடர்பான ஆவணங்களை நிர்ணயிக்கப்பட்ட தேதியான 31.05.2021 க்கு பிறகு பெற்றாலும் அவற்றை சம்பந்தப்பட்ட அமைச்சகங்களும் துறைகளும் பரிசீலிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் அளித்தது அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR