வேலை நாட்கள் தொடர்பாக வரும் நாட்களில் புதிய நெறிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், நீங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டியிருக்கும். ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பாக மாற்றங்களை கொண்டு வர மத்திய தொழிலாளர் அமைச்சகம் தயாராகி வருகிறது. இதில் ஊழியர்கள் வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இது குறித்த இறுதி விதிகளை விரைவில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது அனைத்து நிறுவனங்களிலும் வாரத்தில் 6 நாட்கள், தினமும் 8 மணிநேரமும் என்ற வகையில் வேலை நேரம் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் வாரத்தில் 48 மணிநேரம் வேலை செய்கிறார்கள். தற்போது, ஒரு வாரத்தில் 1 நாள் விடுப்பு உள்ளது.
புதிய விதியின் கீழ், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும்!
மத்திய தொழிலாளர் நல அமைச்சக (Labour Ministry) செயலாளர் அபூர்வா சந்திரா திங்களன்று, ஊழியர்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 48 மணி நேரம் மட்டுமே பணியாற்றுவதற்கான வரம்பு அவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று கூறினார். அதாவது, ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும், வாரத்தில் நான்கு நாட்களில் 48 மணி நேரமும் பணிபுரிந்தால், மீதமுள்ள மூன்று நாட்களுக்கு அவர் விடுப்பு எடுத்துக் கொள்ளளாம். ஊழியர் வாரத்தில் 5 நாட்கள் அல்லது 6 நாட்கள் வேலை செய்யத் தேவையில்லை என்பதற்கு நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையில் உடனபாடு ஏற்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | பாகிஸ்தான் காலிஸ்தான் தொடர்புள்ள 1178 டுவிட்டர் கணக்குகளை முடக்கவும்: மத்திய அரசு
5 மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியான வேலை இருக்கக் கூடாது
இது தவிர, இது தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள திட்டத்தின் படி, எந்த ஊழியரும் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய கூடாது. ஊழியருக்கு ஒரு அரை மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். 2020 ஆம் ஆண்டில் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறித்தவிதிமுறையின் கீழ் தற்போதைய 10.5 மணிநேரத்திலிருந்து 12 மணி நேரமாக வேலை நேரத்தை அதிகரிக்கக்கூடிய ஒரு திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளதாக தகவல்கள் வந்தன.
நிறுவனங்கள் தங்கள் சொந்த வேலை நேரத்தை அமைத்துக் கொள்ளலாம்
இப்போது ஒரு நிறுவனம் ஒரு வாரத்தில் வேலை நேரத்தை குறைக்க விரும்பினால், அதற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் கிடைக்க வேண்டும். இப்போது வாரத்தில் 6 வேலை நாட்களுக்கு 48 மணி நேரம் என்ற விதி உள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்வது. மத்திய தொழிலாளர் செயலாளர் அபூர்வா சந்திரா கூறுகையில், வேலை நேரத்தை 12 மணி நேரத்திற்கு நீட்டிப்பது குறித்து பல வகையான கேள்விகள், அது குறித்த கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த கவலைகளை நாங்கள் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டோம், நிறுவனங்கள் அவர்களின் தேவைக்கு ஏற்ப ஒரு வாரத்திற்கான வேலை நாட்களை மாற்றலாம் எனவும் கூறினார்.
விதிகளில் செய்யப்படும் சில மாற்றங்களுக்கு நிறுவனம் மற்றும் ஊழியர்கள் இடையே கருத்துதொற்றுமை இருக்க வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நிறுவனம் ஊழியருக்கு 3 நாட்கள் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும். 2020ஆம் ஆண்டின் தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த விதிமுறைகள், அனைத்து நிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும்,
ALSO READ | Vehicle Scrapping Policy: பழைய வாகனங்களை மாற்றுவதற்கான ஊக்க திட்டம் விரைவில்..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR