Twitter பயனர்களின் நெடுநாள் எதிர்பார்ப்பான Undo அம்சம் விரைவில்... ஆனால், ஒரு நிபந்தனை!

சமூக வலைதளமான ட்விட்டர், பயனர்களின் நெடுநாளாக எதிர்பார்த்து வரும் ஒரு புதிய அம்சத்தை விரைவில் கொண்டு வர உள்ளது. அதன் மூலம் இனி பயனர்கள் தாங்கள் பதிவு செய்த ட்வீட்டுகளை திருத்தலாம் என கூறப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 21, 2021, 12:39 PM IST
  • விளம்பரத்திற்கு அப்பால் வருவாய் ஆதாரங்கங்களை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
  • இப்போதைக்கு கட்டண சந்தாவாக மட்டுமே பயன்படுத்த முடியும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.
  • இதன் மூலம் அந்நிறுவனத்துக்கு வருவாயும் அதிகரிக்கும் என தெரிகிறது.
Twitter பயனர்களின் நெடுநாள் எதிர்பார்ப்பான  Undo அம்சம் விரைவில்... ஆனால், ஒரு நிபந்தனை! title=

சமூக வலைதளமான ட்விட்டர், பயனர்களின் நெடுநாளாக எதிர்பார்த்து வரும் ஒரு புதிய அம்சத்தை விரைவில் கொண்டு வர உள்ளது. அதன் மூலம் இனி பயனர்கள் தாங்கள் பதிவு செய்த ட்வீட்டுகளை திருத்தலாம் என கூறப்படுகிறது.

இந்த புதிய அம்சம் மூலம் பிரபலங்கள் தங்களது ட்வீட்டில் செய்யும் பிழைகளை திருத்திக் கொள்ள உதவும் என்பதால் வரவேற்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ட்விட்டரில் (Twitter) இந்த புதிய அம்சம் பயனர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

செயலி ஆய்வாளர் ஜேன் மஞ்சுன் வோங் (Jane Manchun Wong) மார்ச் 19 அன்று ஒரு படத்தை ட்வீட் செய்துள்ளார். அதில் இது சமூக ஊடக தலமான ட்விட்டரில்,  “Undo” அதாவது, ட்வீட்டுகளை திருத்தும் அம்சம் குறித்து கூறப்பட்டுள்ளது. இது கட்டணத்துடன் வழங்கப்படும்  சேவை இருக்கும்.

"Undo Tweet" போன்ற கட்டணம்  அல்லது சந்தாவுடன் கிடைக்கும் அம்சங்களை கொண்டு வருவது குறித்து ட்விட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது, "என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

ALSO READ | WhatsApp, Facebook, Instagram சேவைகள் முடங்கியதன் காரணம் என்ன..!!!

அது இப்போதைக்கு கட்டண சந்தாவாக மட்டுமே பயன்படுத்த முடியும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்துக்கு வருவாயும் அதிகரிக்கும் என தெரிகிறது. 

ட்விட்டர் தலைவர் ஜாக் டோர்சி, திருத்த்துவதற்கு, எடிட் செய்வதற்கான விருப்பம் சாத்தியமில்லை என்று தோன்றுவதால், அதற்கு அடுத்த படியான சிறந்த தேர்வான undo என்னும் அம்சத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

"இந்த அம்சம் சோதனை கட்டத்தில் இருப்பதாகவும், சோதனை கட்டத்திற்கு பிறகு இதனை உறுதிப்படுத்த முடியும்" என்று ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார்.

இந்த அம்சம் டிலீட் என்னும் நீக்குதல் அம்சத்திற்கு கூடுதலாக இருக்கும்.

விளம்பரத்திற்கு அப்பால் வருவாய் ஆதாரங்கங்களை விரிவுபடுத்துவதற்கான  நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது, மேலும் 2020 ஆம் ஆண்டில் 192 மில்லியன் என்ற அளவுடன் ஒப்பிடும்போது, 2023 ஆம் ஆண்டில் 315 மில்லியன் என பயனர்களை அதிகரிக்கும் நோக்கில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ | WhatsApp புதிய தனியுரிமைக் கொள்கையை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும்: மத்திய அரசு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News