டாப் 5 உணவு வணிக ஐடியாக்கள்: கை நிறைய சம்பாதிக்க, எந்த தொழிலை தொடங்கலாம்?

Business Ideas 2024: இந்தியா மட்டுமல்ல, உலகளவில் உணவுக்கும் உணவு வணிகத்திற்கும் எப்போதும் லாபம் இருந்து கொண்டே இருக்கும். அப்படி நீங்கள் லாபம் ஈட்ட ஏதவுான சில தொழில் ஐடியாக்கள் இதோ. 

Written by - Yuvashree | Last Updated : Feb 5, 2024, 04:06 PM IST
  • உணவு தொழிலில் பல லட்சம் லாபம் பார்க்கலாம்.
  • டாப் 5 பிசினஸ் ஐடியாக்கள்.
  • இது குறித்த முழு விவரம்!
டாப் 5 உணவு வணிக ஐடியாக்கள்: கை நிறைய சம்பாதிக்க, எந்த தொழிலை தொடங்கலாம்?  title=

உலகளவில், தொழில் தாெடங்குவதற்காக முயற்சிகள் மேற்கொள்பவர்களின் மனதில் முதலில் உதயமாகும் யோசனை, “உணவு தொழில் ஆரம்பிக்கலாமா?” என்பதுதான். மாத வருமானம் வாங்குபவர்கள் கூட, ஒரு கட்டத்தில் “பேசாமா டீ-கடை போட்டுவிடலாமா?” என்று யோசிப்பர். காரணம், இந்த தொழிலில் குறைந்த முதலீட்டுடன் நல்ல லாபம் பார்க்கலாம் என்பதுதான். 

டீக்கடையை உணவு வணிகத்தின் ஒரு மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் லாபம் பார்க்கலாம் எனும் போது, உணவு தொடர்பான பிற வணிகங்களில் அதிக லாபம் எடுக்க முடியாதா? அப்படி, உங்களுக்கு அதிக வருவாயை ஈட்டித்தர வாய்ப்புள்ள 10 உணவு வணிக ஐடியாக்களை இங்கு பார்ப்போம் வாங்க. 

1.க்ளவுட் கிச்சன்:

க்ளவுட் கிச்சனை ஆரம்பிக்க, பெரிய இடம் வேண்டும்-நிறைய வணிகர்கள் வேண்டும், அதிக முதலீடு வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக ட்ரெண்டிங்கிள் இருக்கும் தொழில் இது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் இது பிரபலமாகி வருகிறது. வரும் 2026ல், இதன் வருவாய் அதிகரிக்க இருப்பதாகவும் ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. நீங்கள் இதனை ஆரம்பிக்கும் இடத்தையும் சமையல் வகையையும் வைத்து இதன் முதலீடும் லாபமும் வேறு படலாம். சராசரியாக ஒரு சிறிய க்ளவுட் கிச்சன் ஆரம்பிக்க 5 முதல் 6 லட்சம் வரை ஆகலாம் என கூறப்படுகிறது. 

2.உணவு ட்ரக்:

மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமான தொழிலாக இருக்கிறது, ஃபுட் ட்ரக். இது, மெல்ல மெல்ல இந்தியாவிற்குள்ளும் வர ஆரம்பித்து விட்டது. கடல் உணவு, ஸ்நாக்ஸ் வகை உணவுகள், இரவு உணவுகளுக்கு என தனி ஃபுட் ட்ரக்குகள் கடற்கரைகளுக்கு அருகே அமைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். நம்ம ஊரில் இதன் மினி வர்ஷனாக இருப்பவைதான் தள்ளு வண்டி கடைகள். இந்த ஃபுட் ட்ரக் தொழிலிற்கும் இந்தியாவில் நல்ல எதிர்காலம் உள்ளது. இந்த டர்க்கலியே சமைக்கலாம், வேண்டும் என கேட்பவர்களுக்கு உணவும் எடுத்து கொடுக்கலாம். சிறிய பட்ஜெட்டில் ஆரம்பித்தாலும் நன்கு லாபத்தை அள்ளிக்கொடுக்கும் தொழில் இது. இதை ஆரம்பிக்க, 8 முதல் 10 லட்சம் வரை ஆகலாம். ஆனால் இதிலிருந்து 20 லட்சம் வரை லாபம் பார்க்கலாம் என தரவுகள் தெரிவிக்கின்றன. 

3.ஹெல்தி ஸ்நாக்ஸ்:

பொறித்த உணவுகள், துரித உணவுகள் நல்ல லாபத்தை பார்த்து வந்தது அந்த காலம். ஆனால் சமீபத்திய காலங்களில் பலர் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக இந்தியாவில் இருக்கும் பலர் மாடி தோட்டம், ஆர்கானிக் உணவுகள் ஆகியவற்றிற்கு மாறி வருகின்றனர், அதனால் ஹெல்தியான ஸ்நாக்ஸ் தொழிலுக்கும் நல்ல வருமானமும் எதிர்காலமும் உள்ளது. இதன் வருமானமும், நீங்கள் கொடுக்கும் முதலீடு மற்றும் வணிகம் செய்ய தேர்ந்தெடுக்கும் இடத்தை பொறுத்து மாறுபடும். 

மேலும் படிக்க | சில ஆயிரம் முதலீடு-லட்சக்கணக்கில் லாபம்! ‘இந்த’ தொழில் செய்து பாருங்கள்..

4.பேக்கரி:

இப்போது, கேக் பேக்கிங் என்பது தனியான துறையாகவே கற்றுத்தரப்படுகிறது. நல்ல பேக்கிங் உணவுகளின் சுவையை அறிந்தவர்கள், தேடித்தேடி சென்று இது சம்பந்தமான உணவுகளை ருசித்து வருகின்றனர். பிஸ்கட்டுகள், கேக், பேஸ்ட்ரி, பிரெட் என பேக்கிங் தொழில் மூலமாக பல உணவுகளை தயார் செய்து விற்பனை செய்யலாம். இதை ஒரு பிராண்டாக மாற்றினால் இன்னும் பன்மடங்கு வருமானம் கன்ஃபார்ம். இந்த தொழிலை ஆரம்பிக்க உபகரணங்களுடன் சேர்த்து 5 முதல் 10 லட்சம் வரை செலவாகலாம். 

5.கேட்டரிங் தொழில்:

கல்யாண வீடு, பிசினஸ் மீட்டிங், காது குத்து, பிறந்தநாள் விழா என வீட்டு விழாக்கள் முதல் அரசு விழாக்கள் வரை அனைத்திலும் உணவு விநியோகம் கேட்டரிங் தொழிலாளர்களால் செய்யப்படுகிறது. இந்தியாவில் மிகவும் பிரபலமான தொழிலாக இருக்கும் இதில் பன்மடங்கு லாபமும் பார்க்கலாம். பெரிய முதலீடு கையில் இல்லை என்றால், இருப்பதை வைத்து, சின்ன சின்ன விழாக்களுக்கு வீட்டிலிருந்தே சமைத்து கொடுக்கலாம். ஒரு உணவிற்கு ஒரு விலை என்று நிர்ணயித்து இதனை செய்யலாம், அல்லது எத்தனை பேருக்கு சமைக்க வேண்டுமோ அதற்கு ஏற்றவாறு விலையை நிர்ணயிக்கலாம். 

மேலும் படிக்க | வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம்! ‘இந்த’ வியாபாரத்தை செய்து பாருங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News