இந்த ஆண்டு முதலீடு செய்ய சிறந்த டாப் 10 கிரிப்டோகரன்சிகள்!

2022ம் ஆண்டில் இந்த சிறந்த பத்து கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்வது லாபகரமானதாக கருதப்படுகிறது.

Written by - RK Spark | Last Updated : May 19, 2022, 07:03 PM IST
  • 2022ல் முதலீடு செய்ய உகந்த சிறப்பான டாப் 10 கிரிப்டோகரன்சிகள்.
  • தற்போது பல கிரிப்டோகரன்சிகள் இணையத்தில் உள்ளது.
  • கிரிப்டோகரன்சிகள் வாங்குவபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு முதலீடு செய்ய சிறந்த டாப் 10 கிரிப்டோகரன்சிகள்! title=

2022ம் ஆண்டில் இந்த சிறந்த பத்து கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்வது லாபகரமானதாக கருதப்படுகிறது.

1) ஈத்ரியம் :

2022ல் முதலீடு செய்வதற்கான சிறந்த கிரிப்ட்டோக்களில் இது ஒரு சிறப்பான தேர்வாகும், ஏனெனில் இது நீண்ட காலத்திற்கு மற்ற எவ்வித முதலீட்டுகளையும் மிஞ்சக்கூடியதாக இருக்கிறது.  2016 முதல் 2022ம் ஆண்டின் முற்பகுதிய் வரை இதன் விலை $10 முதல் $3,550 வரை யறிந்து 32,000%க்கும் அதிகமாக இருந்தது.

2) ஏப்காயின் :

இது 2022ல் முதலீடு செய்வதற்கான சிறந்த கிரிப்ட்டோக்களில் மற்றொரு சிறப்பான தேர்வாகும்.  இது 10,000 என்எஃப்டிக்களால் உருவாக்கப்பட்ட தளமாகும், இந்த காயின்களை வாங்கும்போது சிறந்த ஆல்ட்க்காயின்ஸ்களையும் வழங்குகிறது.  இதன் விலை ஆரம்பத்தில் $6.40 ஆக இருந்து பின்னர் சில மணி நேரங்களில் ஒரு டோக்கனுக்கு $42 ஆக உயர்ந்தது.

மேலும் படிக்க | இந்த ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்: 14% அகவிலைப்படி அதிகரிப்பு

3) பிட்காயின் :

ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் வாங்குவதற்கான சிறந்த தேர்வு பிட்காயின்.  2022ம் ஆண்டின் தொடக்கத்தில் $27,000 - $34,000 ஆக இதன் மதிப்பு இருந்தது.  ஆனால் இதன் மதிப்பு இந்த ஆண்டின் இறுதிக்குள் $74,000 மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4) பைனான்ஸ் காயின் :

பைனான்ஸ் காயின் ஆனது வர்த்தகம் மற்றும் சில வாடிக்கையாளர்கள் தொடர்பான உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி ஆகும்.  இதன் பரிமாற்றத்தின் போது வாடிக்கையாளர்கள் குறைந்த கமிஷன்களை செலுத்தி பயனடையலாம்.  ஈத்ரியம், பிட்காயின் போன்றவற்றையும் இதில் பரிமாறிக்கொள்ளலாம்.

5) யூனிஸ்வேப் :

மூன்றாம் தரப்பினர் இல்லாமல் டிஜிட்டல் நாணயங்களை வாங்கவும், விற்கவும் வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் ஒரு சிறந்த தளமாகும்.  இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதன் மதிப்பு $5.70ஐ மிஞ்சியது, இந்த நாணயம் ஒரு டோக்கனுக்கு $18ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6) சொலனா :

இது பிளாக்செயின் தொழிநுட்பத்தை அனுமதியுடன் நிதி தீர்வுகளை வழங்குகிறது.  கடந்த ஆண்டில் வேகமாக வளர்ந்து வரும் கிரிப்டோ டோக்கன்களில் இதுவும் ஒன்றாகும் 2022ம் ஆண்டின் இறுதிக்குள் 440% அதிகரித்து ஒரு டோக்கனுக்கு $450க்கு மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7) டாகிகாயின் :

கடந்த ஆண்டு மிகவும் பிரபலமாக வாங்கப்பட்ட க்ரிப்ட்டோக்களில் இதுவும் ஒன்றாகும், இந்த நாணயத்தை பற்றி அடிக்கடி எலன் மஸ்க் ட்வீட் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.  இது ஐந்து மாதங்களில் 19.000% ஐ எட்டியது, இதில் முதலீடு செய்வது மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8) கார்டானோ :

இந்த கிரிப்டோ ஆனது ஒரு பிரபலமான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பிளாக்செயின் தொழில்நுட்பமாகும், மேலும் இது பாதுகாப்பானதாகவும், நிலையானதாகவும் கூறப்படுகிறது.  இந்த கிரிப்டோ நாணயங்கள் கணிசமாக உயர்ந்து அதிக லாபத்தை தரக்கூடியதாக கூறப்படுகிறது.

9) டெர்ரா :

இது முதலில் ஸ்டேபிள்காயின்களை மாற்றுவதற்க்காக வடிவமைக்கப்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்பமாகும், இது அமெரிக்க டாலர் மதிப்பிலான டோக்கன் விலையை பராமரிக்கிறது.  2022ல் டெர்ரா நாணயம் 300% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10) அவலாஞ்சி :

அவலாஞ்சியில் முதலீடு செய்வது அதிக லாபத்தை தரும், இதில் முதலீடு செய்த பலரும் அதிகப்படியான லாபத்தை ஈட்டியுள்ளனர்.  ஜூலை 2020 முதல் ஏப்ரல் 2022 வரை இந்த நாணயத்தின் விலை $4.13 லிருந்து  $98.58 ஆக 2,200%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

(மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் பரிந்துரைகள் மட்டுமே.  முதலீடு செய்வது முழுக்க முழுக்க உங்களது சொந்த விருப்பம்)

மேலும் படிக்க | தினசரி ரூ.167 முதலீடு செய்தால் ஓய்வு காலத்தில் கோடியில் அள்ளலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News