சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. பெரோல் விலை குறைவு.. லிட்டர் ரேட் இதுதான்

Today Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்று உயர்ந்திருந்த நிலையில் தற்போது இன்று பெட்ரோல் டீசல் விலையில் சற்று குறைந்துள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 19, 2024, 11:00 AM IST
  • இந்தியாவைப் போன்று வளர்ந்து வரும் நாட்டுக்கு எரிபொருள் என்பது மிகவும் அவசியமானது.
  • கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, பெட்ரோல் டீசல் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ.102.63-க்கு விற்பனையாகி வருகிறது.
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. பெரோல் விலை குறைவு.. லிட்டர் ரேட் இதுதான் title=

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சிரமப்பட்டு வரும் மக்களுக்கு ஒரு நல்ல செய்தி. அதன்படி தற்போது இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகளும் குறைந்துள்ளது.

இந்தியாவைப் போன்று வளர்ந்து வரும் நாட்டுக்கு எரிபொருள் என்பது மிகவும் அவசியமானது. ஆனால் பெட்ரோல்,டீசல் விலை கடந்த சில நாட்களாகவே சற்று உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, பெட்ரோல் டீசல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் நிர்ணயிக்கப்பட்டுகிறது. இதனால் அதன் விலை ஏற்ப பெட்ரோல் டீசல் விலை (Petrol - Diseal Today Price) எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. ஆனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. எனவே அதன் தற்போதைய விலையின் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர். 

சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, நொய்டா, குருகிராம் ஆகிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை: 
இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.09 காசுகள் குறைந்து ரூ.102.63-க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 0.08 காசுகள் சரிந்து ரூ.94.24-க்கு விற்பனையாகி வருகிறது. 
பெங்களூரு: பெட்ரோல் விலை: லிட்டருக்கு ரூ.101.94, டீசல் விலை: லிட்டருக்கு ரூ.87.89.
கொல்கத்தா: பெட்ரோல் விலை: லிட்டருக்கு ரூ.106.03, டீசல் விலை: லிட்டருக்கு ரூ.92.76.
மும்பை: பெட்ரோல் விலை: லிட்டருக்கு ரூ.106.31, டீசல் விலை: லிட்டருக்கு ரூ.94.27.
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 96.72, டீசல் விலை லிட்டருக்கு ரூ 89.62.
நொய்டா: பெட்ரோல் விலை: லிட்டருக்கு ரூ.96.58, டீசல் விலை: லிட்டருக்கு ரூ.89.76.
லக்னோ: பெட்ரோல் விலை: லிட்டருக்கு ரூ.96.57, டீசல் விலை: லிட்டருக்கு ரூ.89.76.
குருகிராம்: பெட்ரோல் விலை: லிட்டருக்கு ரூ.97.03, டீசல் விலை: லிட்டருக்கு ரூ.89.90.
சண்டிகர்: பெட்ரோல் விலை: லிட்டருக்கு ரூ.96.20, டீசல் விலை: லிட்டருக்கு ரூ.84.26.

மேலும் படிக்க | AI: பங்குச் சந்தையிலும் பட்டையைக் கிளப்பும் செயற்கை நுண்ணறிவு! ஒரு நாளில் பில்லியனராகலாம்!

இதனிடையே சென்னையைத்தவிர அரியலூர், கோயம்புத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. அதேபோல் சென்னையைத்தவிர அரியலூர், அரியலூர், கோயம்புத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டங்களில் டீசல் விலை உயர்வுடன் விற்பனையாகி வருகிறது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட பொதுத் துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் சர்வதேச தரநிலை விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலையை மாற்றியமைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மிஸ் பண்ணிடாதீங்க.. FDல் அதிக வட்டியை அள்ளித்தரும் வங்கி, டபுள் வருமானம் நிச்சயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News