நாட்டின் ‘பெஸ்ட்’ வங்கிகள் இவைதான், பணம் பத்திரமா இருக்கும்: ஆர்பிஐ வெளியிட்ட லிஸ்ட்

RBI Update: எந்த வங்கியில் பணம் போட்டால் உங்கள் பணம் மிக பாதுகாப்பாக இருக்கும் என்பது  உங்களுக்கு தெரியுமா? பாதுகாப்பான மற்றும் நம்பகமான வங்கிகளின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 29, 2023, 10:51 AM IST
  • நாட்டின் பாதுகாப்பான வங்கிகள்.
  • டி-எஸ்ஐபி வங்கிகள் என்றால் என்ன?
  • ஆர்பிஐ வெளியிட்ட லிஸ்ட்.
நாட்டின் ‘பெஸ்ட்’ வங்கிகள் இவைதான், பணம் பத்திரமா இருக்கும்: ஆர்பிஐ வெளியிட்ட லிஸ்ட் title=

RBI Update: நாட்டில் பல அரசு மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன. ஆனால் எந்த வங்கியில் பணம் போட்டால் உங்கள் பணம் மிக பாதுகாப்பாக இருக்கும் என்பது  உங்களுக்கு தெரியுமா? பாதுகாப்பான மற்றும் நம்பகமான வங்கிகளின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த வங்கிகளின் உங்கள் வங்கிக் கணக்கு இருந்தால் நீங்கள் அச்சப்படத் தேவை இல்லை. ஏனென்றால், இவற்றுக்கான உத்தரவாதத்தை இந்திய ரிசர்வ் வங்கியே (Reserve Bank of India) அளித்துள்ளது. 

நாட்டின் பாதுகாப்பான வங்கிகள் (Safest Banks in India)

நாட்டின் மத்திய வங்கியான ஆர்பிஐ (RBI), பாரத ஸ்டேட் வங்கி (SBI), எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) மற்றும் ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) ஆகியவை உள்நாட்டு அளவில் நிதி அமைப்பின் அடிப்படையில் முக்கியமான வங்கிகளாகத் தொடர்கின்றன என்று தெரிவித்துள்ளது. நாட்டின் நிதி அமைப்பின் மட்டத்தில், இந்த வங்கிகள் கீழ் நோக்கி செல்ல முடியாத அளவிற்கு வலுவான, திடமான பெரிய நிலை வங்கிகளாக இருக்கின்றன. 

ஆகஸ்ட் 2015 முதல், நிதி அமைப்புக்கு முக்கியமான வங்கிகளின் பெயர்கள் பற்றிய தகவல்களை ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் இதே மாதத்தில் வழங்கி வருகிறது. 

விதிகளின்படி, கணினி மட்டத்தில் (SIS) முக்கியத்துவத்தின் அடிப்படையில் இத்தகைய நிறுவனங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். ஐசிஐசிஐ வங்கி கடந்த ஆண்டைப் போலவே அதே வகை அடிப்படையிலான கட்டமைப்பில் உள்ளது என்று மத்திய வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேசமயம் எஸ்பிஐ மற்றும் ஹெச்டிஎப்சி வங்கிகள் உயர் வகைக்கு நகர்ந்துள்ளன.

மேலும் படிக்க | மருத்துவ காப்பீடு எடுக்க போறீங்களா... 2024 ஜனவரி முதல் புதிய விதி அமல்!

எஸ்பிஐ பிரிவு (பக்கெட்) மூன்றில் இருந்து நான்கிற்கு மாறியது. ஹெச்டிஎஃப்சி வங்கி வகை ஒன்றிலிருந்து வகை இரண்டுக்கு மாறியது. இதன் பொருள், ரிஸ்க் வெயிட்டட் அசெட்ஸின் (RWA) சதவீதமாக வங்கிகள் கூடுதல் பொது ஈக்விட்டி பங்கு மூலதனத்தை (அடுக்கு 1) பூர்த்தி செய்ய வேண்டும்.

உள்நாட்டில் முக்கியமான வங்கிகளில் (D-SIB) எஸ்பிஐக்கான கூடுதல் கட்டணம் ஏப்ரல் 1, 2025 முதல் 0.8 சதவீதமாக இருக்கும். அதேசமயம் ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு இது 0.4 சதவீதமாக இருக்கும். எனவே மார்ச் 31, 2025 வரை, SBI மற்றும் HDFC வங்கிக்கான D-SIB கூடுதல் கட்டணம் முறையே 0.6 சதவீதம் மற்றும் 0.20 சதவீதமாக இருக்கும் என்று RBI தெரிவித்துள்ளது.

டி-எஸ்ஐபி வங்கிகள் என்றால் என்ன? (What are D-SIBs?)

மிகப்பெரிய நிலையில், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ள, தோல்வியடைவதற்கான சாத்தியக்கூறுகளே இல்லாத பெரிய வங்கிகள் D-SIB -கள் என்று அழைக்கப்படுகின்றன. 'தோல்வியடைய முடியாத வகையில் மிகப்பெரிய வங்கிகள்' (‘too big to fail’) என்ற கருத்தின் கீழ், அத்தகைய வங்கிகள் ஏதேனும் நெருக்கடியை சந்திக்கும் போது, அரசு அவற்றுக்கு ஆதரவளித்து, மூழ்காமல் காப்பாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த வங்கிகள் நிதி சந்தையில் சில கூடுதல் வசதிகளைப் பெறுகின்றன, மேலும் இந்த வங்கிகள் மீது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் அதிகரிக்கிறது.

இந்தியாவின் வங்கித் துறை

இந்தியாவின் வங்கித் துறை மிகப் பெரியது. இதில் அரசு வங்கிகள், தனியார் வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள் மற்றும் பணம் செலுத்தும் வங்கிகள் போன்ற பல வகையான வங்கிகள் அடங்கும். இவை அனைத்தும் முறையாகச் செயல்படுவதும், மக்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதும் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பொறுப்பாகும்.

மேலும் படிக்க | Budget 2024: PPF முதலீட்டாளர்களுக்கு 2 நல்ல செய்திகள், அதிகமாகிறது வட்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News