Work From Home: தொழிலாளர் நல அமைச்சகம் தயாரித்துள்ள புதிய சட்ட வரைவு..!!!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, Work From Home, அதாவது வீட்டில்  இருந்து கொண்டே அலுவலக பணியை மேற்கொள்வது என்பது  தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 3, 2021, 01:41 PM IST
  • தொழிலாளர் நல அமைச்சகம் சட்ட வரைவை வெளியிட்டது
  • இந்த வருடம் ஏப்ரல் முதல் சட்டம் நடைமுறைக்கு வரக்கூடும்
  • தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களுக்கு பல சலுகைகள் கிடைக்கும்
Work From Home: தொழிலாளர் நல அமைச்சகம் தயாரித்துள்ள புதிய சட்ட வரைவு..!!! title=

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, Work From Home, அதாவது வீட்டில்  இருந்து கொண்டே அலுவலக பணியை மேற்கொள்வது என்பது  தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.  பல இடங்களில் வர்த்தக நடவடிக்கை தொடங்கி விட்டாலும், பல அலுவலகங்களில் இது இன்னும் கடைபிடிக்கப்படுகிறது.

வீட்டிலிருந்து வேலை செய்வதால், கொரோனா வைரஸ் தொற்று பரவலில் (Corona Virus) இருந்து தப்பிப்பதோடு, வேறு சில நன்மைகளும் உள்ளன. இதனால், சாலைகளில் ஏற்படும் வாகனங்களின் நெரிசலைக் குறைவாக உள்ளதுடன், மாசுபாட்டையும் குறைக்க வழி வகுத்தது எனலாம். இப்போது அரசு ஒரு புதிய தொழில்துறை வழிமுறைகளை உருவாக்கி, மூலம் வீட்டிலிருந்து வேலை செய்யும் வழக்கத்தை நிரந்தரமாக ஆக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (Labour Ministry) Work from Home முறையை நிரந்தரமாக்குவதற்கான வரைவைத் தயாரித்துள்ளது. இந்த வரைவின் படி, சேவைத் துறைகளுடன் தொடர்புடையவர்கள், வீட்டிலிருந்து வேலை செய்ய விண்ணப்பிக்கலாம்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வீட்டிலிருந்து வேலை செய்வது (Work From Home) தொடர்பான வரைவு சட்டம் நடைமுறைக்கு வரக்கூடும். இந்த சட்ட வரைவின் கீழ், ஊழியர்கள் வீட்டிலிருந்து அலுவலக வேலைகளைச் செய்வதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

இது செயல்படுத்தப்பட்டால், தகவல் தொழில்நுட்பத் துறை (IT) ஊழியர்களுக்கு பல்வேறு வசதிகள் கிடைக்கும். அவர்கள் வேலை நேரம் தொடர்பான சில சலுகைகளையும் பெறலாம். சட்ட வரைவில்,  ஐ.டி துறையில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கான அம்சங்களுக்கும் சேர்க்கப்பட்டிருக்கும். சேவைத் துறையின் தேவைகளுக்கு ஏற்பவும் சட்டத்தில் பாதுகாப்பு அமசங்கள் சேர்க்கப்பட உள்ளன

புதிய தொழில்துறை வரைவு சட்டம் (New Industrial Relations Code) குறித்து நிறுவனங்கள், தொழிலாளர் அமைப்புகள் மற்றும் பொது மக்களிடமிருந்து அரசாங்கம் ஆலோசனைகளை வரவேற்றுள்ளது. எந்தவொரு நபரும், இந்த சட்ட வரைவு தங்கள் பரிந்துரைகளை ஜனவரி 30 க்குள் மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்திற்கு அனுப்பலாம். இந்த பரிந்துரைகளை ஆராய்ந்த பின்னர், ஏப்ரல் மாதம் முதல் அரசாங்கம் இந்த சட்ட வரைவை அமல் படுத்தும்.

ALSO READ | Work From Home வசதியானது தான்.. ஆனால் பாதிப்புகளும் உண்டு..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News