ரேஷன் கார்டு அப்டேட்: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயன் தரும். அதன்படி தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் கருவிழி அடையாள முறை மூலம் பொருள்கள் விநியோகம் செய்யும் நடைமுறை முதற்கட்டமாக திருவல்லிக்கேணியில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் திருவல்லிக்கேணி நியாயவிலைக் கடைகளில் முதல் முறையாக நேற்று கருவிழி அடையாள முறை மூலம் பொருள்கள் விநியோகம் தொடங்கியது. இந்த திட்டத்தை அமைச்சர் சக்கரபாணி மற்றும் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஆகியோர் தொடக்கி வைத்தனர். நியாய விலைக் கடைகளில் ‘பயோ-மெட்ரிக்’ முறை முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், கருவிழி அடையாள முறை விரைவில் அமல்படுத்தப்படும். மேலும், பாக்கெட்டுகளில் அரிசி வழங்கும் முறையும் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சா் சக்கரபாணி கூறியிருந்தார்.
மேலும் படிக்க | பான் கார்டு வைத்திருப்போர் கவனதிற்கு! இதை உடனடியாக செய்யுங்கள்!
இது குறித்து அமைச்சா் அர.சக்கரபாணி கூறியதாவது., வயது மூப்பு மற்றும் விரல் ரேகை பதிவு செய்ய இயலாத இனங்களில் கண் கருவிழியைச் சரிபார்க்கும் முறை மூலம் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்குவது மகாராஷ்டிரம், அஸ்ஸாம், தெலங்கானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதேபோல, தமிழகத்திலும் இந்த செயல்பாட்டைக் கொண்டு வரும் வகையில் முன்னோட்டமாக ஒரு ஊரகப் பகுதியிலும், ஒரு நகரப் பகுதியிலும் செயல்படுத்தப்படும்.
கண் கருவிழி பதிவு
பல நாட்களாக விரல் ரேகை பதிவு சரிபார்த்தலில் சிக்கல் ஏற்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, விரல் ரேகை மின்னணு பதிவேட்டிற்கு பதிலாக கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்களைப் பெறும் முறை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கான பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று நேற்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | mAadhaar பயன்படுத்த பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ