மக்கள் பலரும் தங்களது வேலைப்பளுவின் காரணமாக வீடுகளில் சமைத்து சாப்பிட நேரமில்லாமல் ஆன்லைன் மூலம் உணவுகளை ஆர்டர் செய்ய தொடங்கிவிட்டனர். வேலைக்கு செல்பவர்கள் மட்டுமில்லாமல் கல்லூரியில் படிப்பவர்கள் என பலரும் தங்களுக்கு பிடித்தமான உணவு பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகின்றனர். வெளியில் ஹோட்டலுக்கு செல்வதை அலைச்சலாக நினைக்கும் பலரும் விரும்பிய உணவை இருந்த இடத்திலிருந்து கொண்டு ஆர்டர் செய்ய ஆன்லைன் டெலிவரியை விரும்புகின்றனர். உணவுகளை ஆன்லைன் மூலம் டெலிவரி செய்வதற்கென்றே பல நிறுவனங்கள் உள்ளது. ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி தளமான ஸ்விக்கி அதன் பயனர்களிடமிருந்து பிளாட்ஃபார்ம் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியுள்ளது. கார்ட் மதிப்பைப் பொருட்படுத்தாமல், நிறுவனம் இப்போது ஒரு ஆர்டருக்கு பிளாட்ஃபார்ம் கட்டணமாக ரூ.2 வசூலிக்க தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை 1 முதல் ஊழியர்களின் சம்பளம் 4% வரை உயர வாய்ப்பு!
ஸ்விக்கி நிறுவனம் உணவு ஆர்டர் செய்வதற்கு பயனர்களிடம் ரூ.2 கூடுதலாக வசூலித்தாலும் இந்த இயங்குதள கட்டணம் இன்ஸ்டாமார்ட் பயனர்களுக்கு பொருந்தாது என்று ஐஏஎன்எஸ் கூறியுள்ளது. கட்டணம் வசூலிப்பது குறித்து ஸ்விக்கி நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பிளாட்ஃபார்ம் கட்டணம் என்பது உணவு ஆர்டர்களில் வசூலிக்கப்படும் பெயரளவிலான நிலையான கட்டணமாகும். இந்த கட்டணம் எங்கள் இயங்குதளத்தை இயக்கவும், மேம்படுத்தவும், தடையற்ற பயன்பாட்டு அனுபவத்தை வழங்கவும், ஆப்ஸ் அம்சங்களை மேம்படுத்தவும் உதவுகிறது" தெரிவித்துள்ளார். ஸ்விக்கி நிறுவனத்தின் வளர்ச்சியை பற்றி கூறுகையில், ஹைதராபாத்தில் உள்ள மக்கள் புனித ரம்ஜான் மாதத்தில் ஸ்விக்கியில் 10 லட்சம் பிரியாணிகள் மற்றும் 4 லட்சம் ஹலீம் தட்டுகளை ஆர்டர் செய்ததாக ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது.
ரம்ஜான் காலத்தில் பலரும் நோம்பு இருப்பதால் ஹலீம், சிக்கன் பிரியாணி மற்றும் சமோசா போன்ற பாரம்பரிய விருப்பமான உணவுகள் ரம்ஜான் காலத்தில் மிகவும் பிரபலமான உணவுகளாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பிரியாணியின் தலைநகராக விளங்கும் ஹைதராபாத் இந்த ரம்ஜானில் 10 லட்சம் பிரியாணிகளை ஸ்விக்கி தளத்தில் ஆர்டர் செய்திருக்கிறது. கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கையில் இந்த ஆண்டு 20 சதவீதம் ஆர்டர் அதிகரித்துள்ளது. ரம்ஜான் சிறப்பு உணவான ஹலீம், சிக்கன், பலமுரு பொட்டல், பெர்ஷியன் ஸ்பெஷல் ஹலீம் மற்றும் உலர் பழம் ஹலீம் உட்பட ஒன்பதுக்கும் மேற்பட்ட வகைகளுக்கு 4,00,000 ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. அதிலும் மட்டன் ஹலீம் நகரத்தின் விருப்பமான உணவு வகையாக உள்ளது. அதேபோல மால்புவா, ஃபிர்னி மற்றும் ரப்டி போன்ற பண்டிகை சிறப்பு ஆர்டர்கள் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.
ரம்ஜான் நோன்பு வைப்பவர்கள் நோன்பை முடிக்கும்போது பேரீச்சம்பழம் மற்றும் பிற உலர் பழங்களை கொண்ட வாடிக்கையாளர்கள் தங்கள் நோன்புகளை முறிப்பதற்காக பேரீச்சம்பழம் மற்றும் பிற உலர் பழங்களை உள்ளடக்கிய இப்தார் உணவை பெறுவதற்காக பலரும் இன்ஸ்டாமார்ட் பக்கம் சென்றுள்ளனர். இந்த ரம்ஜானில் சுமார் அரை மில்லியனுக்கும் அதிகமான உலர் பழங்கள் மற்றும் பேரீச்சம்பழங்களுக்கான ஆர்டர்கள் செய்யப்பட்டு உள்ளது. இது பேரிச்சம்பழங்களுக்காக மட்டுமே செய்யப்பட்ட ஆர்டர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புடன் இருந்ததாக நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஸ்விக்கி மற்றும் அப்னா இன்ஸ்டாமார்ட் கூட்டாண்மையை அறிவித்துள்ள நிலையில் 10,000 வேலைவாய்ப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. ஸ்விக்கியின் உணவு விநியோக சேவைகள் 500 நகரங்களில் கிடைக்கின்றன மற்றும் அதன் இன்ஸ்டாமார்ட் சேவைகள் தற்போது 25-க்கும் மேற்பட்ட நகரங்களில் கிடைக்கின்றது.
மேலும் படிக்க | அரசு ஊழியர்கள் ஓவர்டைம் சம்பளம் கோர முடியாது: உச்சநீதிமன்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ