Sensex 1115 points down: பங்குச் சந்தையில் படு வீழ்ச்சி, சிவப்பு நிறத்தில் சிக்கித் தவிக்கும் பங்குகள்!!

உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இந்திய பங்குச் சந்தைகள் இன்று பெரும் வீழ்ச்சியைக் கண்டன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 24, 2020, 08:04 PM IST
  • மும்பை பங்குச் சந்தையான BSE Sensex 1,114.82 புள்ளிகள், அதாவது 2.96 சதவீதம் சரிந்து 36,553.60 புள்ளிகளில் முடிந்தது.
  • NIFTY-யும் 326.30 புள்ளிகள், அதாவது 2.93 சதவீதம் சரிந்து 10,805.55 ஆக முடிந்தது.
  • இந்திய ரூபாய் 32 பைசா குறைந்து அமெரிக்க டாலருக்கு நிகராக 73.89 ஆக முடிந்தது.
Sensex 1115 points down: பங்குச் சந்தையில் படு வீழ்ச்சி, சிவப்பு நிறத்தில் சிக்கித் தவிக்கும் பங்குகள்!! title=

புதுடெல்லி: இந்திய பங்குச் சந்தைகள் இன்று பெரும் வீழ்ச்சியைக் கண்டன. உலகளாவிய பங்குச் சந்தைகளில் பலரும் அதிக அளவிலான பங்குகளை விற்றுள்ள நிலையில், வியாழக்கிழமை தொடர்ந்து ஆறாவது அமர்வாக சந்தைகள் சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையான BSE Sensex 1,114.82 புள்ளிகள், அதாவது 2.96 சதவீதம் சரிந்து 36,553.60 புள்ளிகளில் முடிந்தது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையான NIFTY-யும் 326.30 புள்ளிகள், அதாவது 2.93 சதவீதம் சரிந்து 10,805.55 ஆக முடிந்தது.

இந்துஸ்தான் யூனிலீவர் தவிர, அனைத்து சென்செக்ஸ் பங்குகளும் சிவப்பு நிறத்திலேயே முடிவடைந்தன. இன்டெஸ்இண்ட் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், M&M, டெக் மஹிந்திரா, TCS, டாடா ஸ்டீல், ICICI வங்கி, இன்போசிஸ், Axis Bank, பஜாஜ் ஃபின்சர்வ், SBI, பாரதி ஏர்டெல் ஆகியவை மோசமான சரிவைக் கண்ட பங்குகளில் முதலிடங்களில் இருப்பவையாகும். இவை அனைத்தும் சுமார் 7 சதவிகித சரிவைக் கண்டன.

முந்தைய அமர்வில், Sensex 65.66 புள்ளிகள் அதாவது 0.17 சதவீதம் குறைந்து 37,668.42 ஆகவும், NIFTY 21.80 புள்ளிகள் அதாவது 0.20 சதவீதம் சரிந்து 11,131.85 ஆகவும் முடிவடைந்தது.

ALSO READ: Gratuity: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள்

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Investors) புதன்கிழமை நிகர அடிப்படையில் 3,912.44 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்றதாக பரிமாற்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், இந்திய ரூபாய் (Indian Rupee) 32 பைசா குறைந்து அமெரிக்க டாலருக்கு நிகராக 73.89 ஆக முடிந்தது.

உலகளாவிய எண்ணெய் அளவுகோல் Brent Crude பீப்பாய்க்கு 0.22 சதவீதம் குறைந்து 41.68 அமெரிக்க டாலராக வர்த்தகத்தில் இருந்தது.

ஐரோப்பாவில் வெளிவந்த பொருளாதாரத் தரவுகள் மிக மோசமான நிலையில் இருந்ததும், பல நாடுகளில் COVID தொற்று நோயின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளதும் உலகளாவிய பங்குச் சந்தைகளில் காணப்படும் வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். 

ALSO READ: ஆயுள் காப்பீட்டு திட்டங்களை வழங்கும் indian post... நன்மைகள் என்ன?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News