Small Saving Schemes: NSC, PPF, சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் (SSY) மற்றும் KVP உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டி விகித திருத்தத்திற்காக பலரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இவற்றின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டால், அது இத்திட்டங்களில் முதலீடு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு பம்பர் செய்தியாக இருக்கும். கூடிய விரைவில் அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டுக்கான விகிதங்கள் மாற்றியமைக்கப்படும்.
இன்று அல்லது நாளை நடைபெறக்கூடிய விகித மறுஆய்வு, முந்தைய காலாண்டின் (ஜூலை-செப்டம்பர் 2023) G-Sec ஈல்டுகளின் அடிப்படையில் செய்யப்படுகிறது. இதற்கிடையில் 2023 அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றப்பட வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள்
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டு அதற்கேற்ப அடுத்த காலாண்டிற்கு முடிவு செய்யப்படுகின்றன. ஜூன் 30, 2023 அன்று நடந்த கடைசி மதிப்பாய்வில், அரசாங்கம் பல சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது. 1 ஆண்டு மற்றும் 2 ஆண்டு அஞ்சல் அலுவலக நேர வைப்புத்தொகைகள் மற்றும் 5 ஆண்டு தொடர் வைப்புத்தொகைகளுக்கான விகிதங்கள் மாற்றப்பட்டன. செப்டம்பர் 2022 -க்கு பிறகு செய்யப்பட்ட நான்காவது அதிகரிப்பாகும் அது. அப்போது, அக்டோபர்-டிசம்பர் 2022 காலாண்டிற்கான சில சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசு உயர்த்தியது. அதற்கு முன்னர் தொடர்ந்து ஒன்பது காலாண்டுகளாக (2020-21 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து 2021-22 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு வரை) விகிதங்கள் மாற்றப்படாமல் இருந்தன.
“சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான (Small Saving Schemes) வட்டி விகிதங்கள் முந்தைய காலாண்டின் ஜி-செக் (அரசுப் பத்திரங்கள்) ஈல்டுகளின் போக்கின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில் இதுவரை 10 ஆண்டு ஜி-செக் 7.0 சதவீதம் மற்றும் 7.2 சதவீதமாக உள்ளது. மேலும் இது 7.1 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 2023க்குப் பிறகு பணவீக்கம் 5-6 சதவீத வரம்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாறாமல் இருக்கும் என எண்ணப்படுகின்றது” என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
தற்போது, சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களின் (Interest Rates) வரம்பு நான்கு சதவீதம் (அஞ்சல் அலுவலக சேமிப்பு வைப்பு) முதல் 8.2 சதவீதம் (மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் / எஸ்சிஎஸ்எஸ்) வரை உள்ளன. PPF ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
செப்டம்பர் 2023 நிலவரப்படி, அக்டோபர்-நவம்பர் காலாண்டில் நிதி அமைச்சகம் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்குகளுக்கான தற்போதைய வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 7.10 சதவீதமாகவே நீட்டிக்கக்கூடும் என என்று எஸ்ஏஜி இன்ஃபோடெக் எம்டி அமித் குப்தா கூறியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | துடைப்பம் தயாரிப்பு: ரூ.60 ஆயிரம் இருந்தால் போதும்... ரூ. 5 லட்சம் சம்பாதிக்கலாம்
SCSS உட்பட எந்த சிறு சேமிப்புத் திட்டங்களும் கோவிட் காலத்தில் சந்தையில் குறிக்கப்படவில்லை, மேலும் சந்தைகளை விட இவற்றின் விகிதங்கள் மிக அதிகமாக இருந்தன. இருப்பினும், கடந்த ஆண்டு செய்யப்பட்ட விகித உயர்வுகளால், சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் தற்போது நீண்ட கால நிலையான வைப்புத்தொகைகளுக்கு (FDs) இணையாக உள்ளன.
“இந்திய ரிசர்வ் வங்கியும் (ஆர்பிஐ) ஏப்ரல் முதல் விகித உயர்வை இடைநிறுத்தியுள்ளது. மேலும் உலகளவில் பணவீக்கம் மெதுவாக குறைந்து வருவதால், ரிசர்வ வங்கி ரெப்போ ரேட்டை மாற்றாமல் அப்படியே நீட்டிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகையால், SCSS உட்பட பிற சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயர்வதற்கான வாய்ப்புகள் இந்த கட்டத்தில் சாத்தியமில்லை, ” என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
சிறு சேமிப்பு திட்டங்களில் தற்போதைய வட்டி விகிதங்கள் என்ன?
நடப்பு ஜூலை-செப்டம்பர் 2023 காலாண்டிற்கான வட்டி விகிதங்கள் பின்வருமாறு:
- சேமிப்பு வைப்பு: 4 சதவீதம்
- 1-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 6.9 சதவீதம்
- 2-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 7.0 சதவீதம்
- 3-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 7 சதவீதம்
- 5-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 7.5 சதவீதம்
- 5-ஆண்டு தொடர் வைப்புத்தொகை: 6.5 சதவீதம்
- தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC): 7.7 சதவீதம்
- கிசான் விகாஸ் பத்ரா (KVP): 7.5 சதவீதம் (115 மாதங்களில் முதிர்ச்சியடையும்)
- பொது வருங்கால வைப்பு நிதி (PPF): 7.1 சதவீதம்
- சுகன்யா சம்ரித்தி கணக்கு (SSY): 8.0 சதவீதம்
- மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS): 8.2 சதவீதம்
- மாத வருமானக் கணக்கு: 7.4 சதவீதம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ