நீங்க கடலுக்குள் சென்றாலும் எளிமையாக தொடர்பு கொள்ளலாம்; BSNL-லின் புதிய திட்டம்!

BSNL வியாழக்கிழமை செயற்கைக்கோள் அடிப்படையிலான இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) உபகரண சேவையை அறிமுகப்படுத்தியது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 11, 2020, 07:13 AM IST
நீங்க கடலுக்குள் சென்றாலும் எளிமையாக தொடர்பு கொள்ளலாம்; BSNL-லின் புதிய திட்டம்! title=

BSNL வியாழக்கிழமை செயற்கைக்கோள் அடிப்படையிலான இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) உபகரண சேவையை அறிமுகப்படுத்தியது. 

நீங்கள் தொடர்பு கொள்ளும் பாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் என்ற குரல் உங்களை பொறுமை இழக்க செய்கிறதா?... ஒரு முக்கியமான அழைப்பின் போது அவரது வார்த்தைகளை சரியாக கேட்கமுடியவில்லையா?.. இனி இது போன்ற சிக்கல்கள் உங்களுக்கு ஏற்படாது. ஏனென்றால்,  மொபைல் கோபுரம் இல்லாத இடங்களில் கூட இனி நெட்வொர்க் கிடைப்பதற்கான புதிய திட்டத்தை BSNL கொண்டு வந்துள்ளது. 

அரசு நடத்தும் பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான (Public sector telecom company) பி.எஸ்.என்.எல் (BSNL) வியாழக்கிழமை செயற்கைக்கோள் அடிப்படையிலான இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) உபகரண சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் இந்த சேவையை நாட்டின் கடல் எல்லைக்குள் மற்றும் மொபைல் கோபுரங்கள் இல்லாத இடங்களில் பயன்படுத்தலாம். எனவே, எந்த சூழ்நிலையிலும், நிறுவனத்தின் சேவை முன்பை விட சிறப்பாக இருக்கும்.

ALSO READ | டிஜிட்டல் இந்தியாவை தொடர்ந்து, Wi-Fi புரட்சி; இனி டீ கடையில் கூட Wi-Fi கிடைக்கும்!

இது குறித்து BSNL வெளியிட்டுள்ள அறிக்கையில், இது உலகின் முதல் செயற்கைக்கோள் அடிப்படையிலான IoT நெட்வொர்க் (satellite-based IoT network) என்று தெரிவித்துள்ளது. அமெரிக்க நிறுவனமான ஸ்கைலோவுடன் (America Skylo) இணைந்து இந்த சேவையை BSNL தொடங்கியுள்ளது. இந்த சாதனங்களை இந்தியாவில் பயன்படுத்த ஸ்கைலோ தயார் செய்துள்ளது.

ஒவ்வொரு யூனிட்டிற்கும் ரூ.10,000 செலவாகும்

BSNL தலைவரும் நிர்வாக இயக்குநருமான PK.பூர்வார் (P.K. Purwar) கூறுகையில், அரசு நிறுவனம் மட்டுமே ஸ்கைலோவின் உபகரணங்களை பெற முடியும் என  கூறியுள்ளது. இதன் ஒவ்வொரு யூனிட்டிற்கும் ரூ.10,000 செலவாகும். வாடிக்கையாளர்கள் இந்த சதுர வடிவ சாதனத்தை நாடு முழுவதும் எங்கும் எடுத்துச் சென்று தங்கள் ஸ்மார்ட்போன்களுடன் இணைத்து தொடர்பு கொள்ளலாம். 2021 ஆம் ஆண்டில் கோவிட் -19 தடுப்பூசியை திறம்பட வழங்குவதற்கான தளவாடத் துறைக்கு முக்கிய தரவுகளை வழங்கவும் ஸ்கிலோ உதவும் என்று அவர் கூறினார்.

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் புதிய திட்டத்தை கொண்டு வருகிறது

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) உங்களுக்காக மிகவும் நன்மை பயக்கும் மற்றும் மலிவு ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. BSNL பெரும்பாலும் அதன் பயனர்களுக்கு புதிய திட்டங்களை கொண்டு வருகிறது. இந்த முறை BSNL நாள் ஒன்றுக்கு ரூ.250-க்கும் குறைவான 3GB தரவு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இருப்பினும், தனியார் நிறுவனம் ஒவ்வொரு நாளும் 3GB டேட்டாவிற்கு ரூ.400 மற்றும் அதற்கு மேற்பட்ட திட்டங்களை வழங்குகிறது. நிறுவனத்தின் இந்த ப்ரீபெய்ட் பேக்கின் செல்லுபடியாகும் தன்மை 30 நாட்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பயனர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், தற்போது STV 247 ஒரு விளம்பர சலுகையின் கீழ் 40 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. 

ALSO READ | Whatsapp Carts: இந்த புதிய அம்சத்தின் மூலம் எப்படி ஷாப்பிங் செய்வது என்று உங்களுக்குத் தெரியுமா?

அதாவது பயனர்கள் இந்த ரீசார்ஜ் பேக்கில் 40 நாட்களுக்கு 120GB டேட்டாவைப் பெறுவார்கள். மற்ற நிறுவனங்கள் இந்த விலையில் 50 GB-க்கு குறைவான தரவை வழங்குகின்றன. இந்த சலுகையை விரைவில் அனுபவிக்கவும், ஏனெனில் STV 247 உடனான இந்த விளம்பர சலுகை நவம்பர் 30, 2020 வரை செல்லுபடியாகும்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News