தங்கத்தில் முதலீடு செய்ய சில வழிமுறைகள்!

பல்வேறு விதமாக தங்கங்களில் முதலீடு செய்வதன் மூலம் நமது பொருளாதாரத்தை நிலைநிறுத்தி கொள்ளலாம்.  

Written by - RK Spark | Last Updated : May 16, 2022, 04:53 PM IST
  • தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதும் சிறந்ததாக பார்க்கப்படுகிறது.
  • நம்பிக்கையான முதலீடுகளில் தங்கமும் ஒன்று.
  • சில வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.
தங்கத்தில் முதலீடு செய்ய சில வழிமுறைகள்! title=

தங்கம் ஒரு மிகப்பெரிய சொத்தாக எப்போதும் பார்க்கப்படுகிறது.  பணப்பிரச்சனை காலங்களில் பலருக்கு தங்கம் தான் மிகப்பெரிய உதவியாக இருந்து வருகிறது.  தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதும் ஒரு நல்ல முடிவாகவே பார்க்கப்படுகிறது.  ஏனெனில் இவை எப்போதும் விலை குறையாது என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருந்து வருகிறது.  

மேலும் படிக்க | Post Office FD: அதிக வருமானம் கொடுக்கும் அஞ்சலக FD திட்டம்

உங்களுக்கு நம்பிக்கையான நகைக்கடைகளில் தங்க நகைகளை வாங்குவது ஒரு சிறந்த வழியாகும்.  இருப்பினும் நகைகளை வாங்கும்போது விலை, தரம், தூய்மை மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும். இதற்கு மாற்றாக நீங்கள் தங்கத்தை நகைக்கடை அல்லது வங்கியில் இருந்து நாணயங்கள் மற்றும் பார்களாக வாங்கி கொள்ளலாம்.

தங்கத்தை முதலீடு செய்ய சில வழிகள்:

- சவரன் கோல்டு பத்திரங்கள் ஆர்பிஐ மூலம் தவணைகளாக வழங்கப்படுகிறது.  வங்கிகள், தபால் அலுவலகங்கள் அல்லது பங்கு சந்தைகள் மூலம் எஸ்ஜிபிகளில் முதலீடு செய்து கொள்ளலாம்.  இது ஒரு நீண்ட கால முதலீடாகும்.

- தங்க ஈடிஎப்கள் மூலம் தங்கத்தில் முதலீடு செய்ய மிக குறைந்த கட்டணத்தில் ஆன்லைனில் சில ப்ரோக்கர் தளங்களை பயன்படுத்தி முதலீடு செய்து கொள்ளலாம்.  இந்த ஈடிஎப்கள் பிஸிக்கல் கோல்டு, எஸ்ஜிபிகள், கோல்டு நிறுவனங்கள் மற்றும் நிதிகளில் முதலீடு செய்கின்றன.

- டிஜிட்டல் தங்கம் என்பது டிஜிட்டல் வடிவத்தில் சுத்தமான தங்கத்தில் முதலீடு செய்வதாகும்.  முதலீட்டாளரின் கணக்கில் தங்கம் சேமித்து வைக்கப்படுகிறது, மேலும் இதனை முதலீட்டாளர் எடுத்துக்கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு

ஒவ்வொரு முதலீட்டு முறையிலும் விற்பனை மற்றும் வாங்குவதை பொறுத்து வரிகள் விதிக்கப்படுகிறிது. தங்கத்தில் முதலீடு செய்யும் முறையைத் தீர்மானிக்கும் முன் உங்கள் வரி ஆலோசகரை அணுகுவது நல்லது.

மேலும் படிக்க | எதற்காக டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை நாம் எடுக்க வேண்டும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News