SBI MF புதிய திட்டம்: SIP மூலம் முதலீடு, பெரிய அளவில் வருமானம்... விவரம் இதோ

SBI Mutual Fund NFO: அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனமான எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட்  (SBI Mutual Fund) ஈக்விட்டி பிரிவில் புதிய துறைசார் நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 17, 2024, 10:25 AM IST
  • SBI MF: முதலீட்டாளர்கள் ரூ.5000 முதல் முதலீட்டை துவக்கலாம்.
  • இதன் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ் என்ன?
  • இதில் யார் முதலீடு செய்யலாம்?
SBI MF புதிய திட்டம்: SIP மூலம் முதலீடு, பெரிய அளவில் வருமானம்... விவரம் இதோ title=

SBI Mutual Fund NFO: முதலீட்டில் ஆர்வம் உள்ள நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கானது. அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனமான எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட்  (SBI Mutual Fund) ஈக்விட்டி பிரிவில் புதிய துறைசார் நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்பிஐ எம்எஃப்-ன் (SBI MF) புதிய திட்டமான எஸ்பிஐ நிஃப்டி இந்தியா நுகர்வு குறியீட்டு நிதியின் (SBI Nifty India Consumption Index Fund) சப்ஸ்க்ரிப்ஷன் அக்டோபர் 16 முதல் திறக்கப்பட்டது. அது அக்டோபர் 25, 2024 அன்று நிறைவடையும். இந்த ஓப்பன் எண்டட் ஃபண்டில், கன்ஸ்யூமர், நான்-ட்யூரபிள், ஹெல்த்கேர், ஆட்டோ, டெலிகாம் சர்வீசஸ், ஃபார்மா, ஹோட்டல், மீடியா அண்ட் எண்டர்டெயின்மெண்ட் போன்ற ஹவுஸ்ஹோல்ட் நுகர்வு நிறுவனங்களின் பல்வகைப்பட்ட போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

SBI MF: முதலீட்டாளர்கள் ரூ.5000 முதல் முதலீட்டை துவக்கலாம்

எஸ்பிஐ நிஃப்டி இந்தியா நுகர்வு குறியீட்டு நிதியில் குறைந்தபட்சம் ரூ. 5000 மற்றும் அதன் பிறகு ரூ 1 இன் மடங்குகளில் முதலீட்டை தொடங்கலாம் என்று எஸ்பிஐ எம்எஃப் தெரிவித்துள்ளது. இதில், முதலீட்டாளர்கள் தினசரி, வாராந்திர, மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர SIP (Systematic Investment Plan) விருப்பத்தைப் பெறுவார்கள். ஹர்ஷ் சேதி இந்த திட்டத்தின் நிதி மேலாளர் ஆவார்.

SBI MF: இதன் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ் என்ன?

- இதன் பெஞ்ச்மார்க், நிஃப்டி இந்தியா கன்சம்ப்ஷன் குறியீடு (Nifty India Consumption Index). 
- இந்தத் திட்டம்  நிஃப்டி இந்தியா கன்சம்ப்ஷன் குறியீட்டில் சேர்க்கப்பட்டுள்ள பங்குகளில் குறைந்தபட்சம் 95 சதவீதமும் அதிகபட்சமாக 100 சதவீதமும் முதலீடு செய்யும். 
- இது தவிர, அரசாங்க பத்திரங்களில்  (G-Secs, SDLs, Treasury Bills போன்றவை) 5 சதவிகிதம் வரை முதலீடு செய்யும்.

மேலும் படிக்க | அகவிலைப்படி உயர்வுக்கு பின் அக்டோபர் சம்பளத்தில் அதிரடி ஏற்றம்: ஊதிய உயர்வு கணக்கீடு இதோ

SBI MF: இதில் யார் முதலீடு செய்யலாம்?

Capital Appreciation in Long Term: நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து மூலதன மதிப்பை கூட்ட விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வழியாக இருக்கும் என்று மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கூறுகின்றன. இதில், நிஃப்டி இந்தியா கன்சம்ப்ஷன் குறியீட்டில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களின் பத்திரங்களில் முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மெண்ட் (SBI Funds Management), எம்டி மற்றும் சிஇஓ ஷம்ஷேர் சிங், ‘இந்தியா உலகின் சிறந்த நுகர்வோர் சந்தைகளில் ஒன்றாக மாறி வருவதால், நுகர்வோர் பொருட்கள், சில்லறை விற்பனை, சுகாதாரம், ஆடம்பர பொருட்கள், FMCG, விமான போக்குவரத்து மற்றும் இ-காமர்ஸ் போன்ற துறைகள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அனைவருக்கும் பல நன்மைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.’ என்று கூறினார்.

‘SBI Nifty India Consumption Index Fund முதலீட்டாளர்கள் உள்நாட்டு நுகர்வுத் துறையில் உள்ள நிறுவனங்களின் பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள்’ என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த வகையில், இந்தியாவின் நுகர்வு வழி சந்தை வெற்றியில் கலந்துகொண்டு அதம் மூலம் பயனடைய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வழியாக இருக்கும் என அவர் மேலும் கூறினார்.
 
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்த குட் நியூஸ்: அகவிலைப்படி 3% உயர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News