எஸ்பிஐ வட்டி விகித உயர்வு: பொதுத் துறையில் நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) நீங்களும் கடன் பெற்றிருந்தாலோ, அல்லது பெற இருந்தாலோ, இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வங்கியில் இருந்து ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. வங்கி, பெஞ்ச்மார்க் பிரைம் லெண்டிங் ரேட்டில் (பிபிஎல்ஆர்) 70 அடிப்படை புள்ளிகளை அதிகரித்துள்ளது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, எஸ்பிஐ-யில் கடன் வாங்குபவர்களின் இஎம்இ அதிகரிக்கும். முன்னதாக, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 1.40 சதவீதம் உயர்த்தியது. இந்த மாற்றம் மூன்று வெவ்வேறு காலங்களில் செயல்படுத்தப்பட்டது.
பிபிஎல்ஆர் 70 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டது
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து, அரசு மற்றும் தனியார் வங்கிகள் கடன் வட்டி விகிதத்தில் மாற்றங்களைச் செய்து வருகின்றன. இதனால் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் ஆகும் செலவு அதிகரிக்கிறது. இருப்பினும், நிலையான வைப்புத்தொகைக்கான (எஃப்டி) வட்டி விகிதங்களும் வங்கிகளால் அதிகரிக்கப்படுகின்றன. 70 அடிப்படை புள்ளிகள் அதிகரித்த பிறகு, எஸ்பிஐயின் பிபிஎல்ஆர் அடிப்படையிலான கடனுக்கான வட்டி விகிதம் 13.45 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | SBI Hikes MCLR Rates: கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிப்பு
புதிய கட்டணங்கள் செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வந்துள்ளன
பிபிஎல்ஆருடன் இணைக்கப்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்துவது (ரீபேமண்ட்) முன்பை விட இப்போது கடினமாகியுள்ளது. ஏனெனில் உயர்வுக்கு முன் பிபிஎல்ஆர் விகிதம் 12.75 சதவீதமாக இருந்தது. இப்போது இது அதிகமாகியுள்ளது.
முன்னதாக ஜூன் மாதத்தில் இந்த விகிதம் மாற்றப்பட்டது. பெஞ்ச்மார்க் பிரைம் லெண்டிங் ரேட்டின் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்து புதிய விகிதங்கள் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்த தகவல் எஸ்பிஐ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நுகர்வோர் கடன்களின் வட்டி விகிதங்கள் BPLR-இன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்பிஐயின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, கடன் வாங்குபவர்களின் இஎம்ஐ மீதான சுமை அதிகரிக்கும். கடன் வாங்குபவர்கள் இப்போது முன்பை விட அதிக வட்டி விகிதத்தில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | SBI Account: எஸ்பிஐ வங்கியில் புதிய கணக்கு தொடங்குகிறீர்களா? வங்கிக்கு போக வேண்டாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ