பாரத ஸ்டேட் வங்கி: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தீபாவளியை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. சேமிப்புக் கணக்கிற்கான வட்டியை 30 அடிப்படை புள்ளிகள் (0.30%) உயர்த்துவதாக வங்கி அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட வட்டி விகிதத்தின் பலன் ரூ.10 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட தொகையில் கிடைக்கும். ரூ.10 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தில் தற்போது எந்த மாற்றமும் இல்லை. சிறு டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதமும் வரும் காலங்களில் வங்கியால் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விதி 15 அக்டோபர் 2022 முதல் அமலுக்கு வந்தது
10 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 2.70 சதவீதமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வங்கியின் வட்டி விகிதத்தில் செய்யப்பட்ட இந்த மாற்றம் அக்டோபர் 15, 2022 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்திய பிறகு வங்கியின் சார்பில் வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு எடுக்கப்படுகிறது.
ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி நான்கு முறையில் 1.90 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறும் கடன்கள் விலை உயர்ந்துள்ளன.
மேலும் படிக்க | தமிழகத்தில் இருக்கும் ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை அறிமுகம்
கடன் வட்டி விகிதமும் அதிகரித்தது
வங்கிகள் பெறும் கடன்களின் விலை அதிகமானதால், வங்கிகள் மூலம் அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதமும் அதிகரித்து வருகிறது. முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் ஃபெடரல் வங்கி ஆகியவை பல்வேறு தவணைக்கால கடன்களுக்கான மார்ஜினல் காஸ்ட் அடிப்படையிலான கடன் விகிதத்தை (MCLR) 25 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரித்துள்ளன. ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் எஸ்பிஐ எம்சிஎல்ஆர்-ஐ உயர்த்தியது.
கடந்த நாட்களில் நிலையான வைப்பு (FD வட்டி விகிதங்கள்) மீதான வட்டி விகிதத்தையும் வங்கி உயர்த்தியது. SBI அனைத்து தவணைக்காலங்களுக்கும் FD வட்டி விகிதங்களை 20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ரூ.2 கோடிக்கும் குறைவான நிரந்தர வைப்புத்தொகைக்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.
ரெப்போ விகிதம் என்றால் என்ன?
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன் விகிதம் ரெப்போ ரேட் எனப்படும். ரெப்போ விகிதம் அதிகரிக்கப்பட்டால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் பெறும் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். இது வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி விகிதத்தை அதிகரிக்கும். இது உங்கள் இஎம்ஐ-களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | 7th Pay Commission இரட்டை பொனான்சா: அகவிலைப்படியை தொடர்ந்து பயணப்படியும் உயர்ந்தது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ