Contactless Payment: இனி கார்டோ, பணமோ வேண்டாம், பணம் செலுத்த watch இருந்தால் போதும்

கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு, தொடர்பு இல்லாத மற்றும் டிஜிட்டல் கட்டணம் முறை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இதுவரை மக்கள் டச் அண்ட் பே (Touch and Pay) மற்றும் யுபிஐ கட்டண முறையை மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் இப்போது கை கடிகாரத்தின் உதவியுடன் கட்டணம் செலுத்தும் முறை வந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 15, 2021, 06:23 PM IST
  • ஒரு கை கடிகாரத்தின் உதவியுடன் நீங்கள் இனி பணம் செலுத்தலாம்.
  • SBI, Axis வங்கி இந்த வசதியைக் கொண்டுவந்துள்ளன.
  • தொடர்பில்லா கட்டண வசதிக்கு இது மிகப்பெரிய உந்துதலைக் கொடுக்கும்.
Contactless Payment: இனி கார்டோ, பணமோ வேண்டாம், பணம் செலுத்த watch இருந்தால் போதும்  title=

இப்போது வீட்டை விட்டு வெளியேறும்போது பணம் அல்லது கிரெடிட் அல்லது டெபிட் கார்டை உங்கள் பர்சில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆம், இப்போது நீங்கள் பணம் செலுத்துவதற்கு மொபைலையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை. பெட்ரோல் போடவோ, அல்லது பொருட்களை வாங்கவோ, எதுவாக இருந்தாலும், ஒரு கை கடிகாரத்தின் உதவியுடன் நீங்கள் இதை செய்து விட முடியும். இந்த சிறந்த தொழில்நுட்பத்தைப் பற்றி இங்கே காணலாம்.

இப்போது வாட்ச் மூலம் கட்டணம் செலுத்தலாம் 

கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு, தொடர்பு இல்லாத மற்றும் டிஜிட்டல் கட்டணம் முறை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இதுவரை மக்கள் டச் அண்ட் பே (Touch and Pay) மற்றும் யுபிஐ கட்டண முறையை மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் இப்போது கை கடிகாரத்தின் உதவியுடன் கட்டணம் செலுத்தும் முறை வந்துள்ளது. அவை அணியக்கூடிய கட்டண சாதனங்கள் (wearable payment devices) என்றும் அழைக்கப்படுகின்றன

எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன

சமீபத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை டிஜிட்டல் கட்டணங்களை ஊக்குவிக்க wearable payment devices கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளன. கட்டணம் செலுத்தும் கருவிக்கு அருகில் வாட்சை கொண்டு சென்றவுடன் கட்டணம் செலுத்தப்படும் விதத்தில் இந்த இரண்டு வங்கிகளும் கை கடிகாரங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. 

ALSO READ: Salary Hike Rasipalan: யாருடைய சம்பளம் அதிகரிக்கும், பதவி உயர்வு யாருக்கு கிடைக்கும்

ரூ .5000 வரை கட்டணம் செலுத்தலாம் 
சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank) தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகளின் வரம்பை ரூ .2000 லிருந்து ரூ .5000 ஆக உயர்த்தியுள்ளது. அதாவது, ரூ .5000 வரை பணம் செலுத்துவதற்கு நீங்கள் பின் எண்ணை உள்ளிட தேவையில்லை. வைஃபை கார்டு அல்லது அணியக்கூடிய சாதனங்களின் உதவியுடன் பணம் செலுத்தலாம்.

இந்த தொழில்நுட்பம் புதியதல்ல

அணியக்கூடிய கட்டண சாதனத்தின் தொழில்நுட்பம் இப்போது இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த தொழில்நுட்பம் புதியதல்ல. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில், ஸ்மார்ட்வாட்சின் உதவியுடன் பணம் செலுத்தப்படுகிறது. கட்டணம் செலுத்தும் ஆப்ஷன் ஏற்கனவே ஆப்பிள், சாம்சங் மற்றும் ஃபிட்பிட் ஆகியவற்றின் ஸ்மார்ட்வாட்ச்களில் உள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு முடிவு

கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோய்க்குப் பிறகு, பெரும்பாலான மக்கள் கட்டணத்தை பணமாகவே அல்லது கார்ட் மூலமோ செலுத்த தயங்குகிறார்கள். இப்போது உலகெங்கிலும் உள்ள மக்கள் டிஜிட்டல் மற்றும் தொடர்பு இல்லாத கட்டணங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.

ALSO READ: ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படவுள்ள 5 வருமான வரி விதிகளின் விவரம் இதோ

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News