New Technology In Infrastructure : உலகில் முதன்முறையாக 300 கி.மீ நீள தானியங்கி சாலை கட்டப்பட உள்ளது. இந்த சாலையில் வாகனம் செல்லாது, சாலையே நகர்ந்து செல்லும். தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நாடாக விளங்கி வரும் ஜப்பான், தற்போது மற்றொரு தொழில்நுட்ப புரட்சியை செய்யவுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவை ஒசாகா நகருடன் இணைக்கும் வகையில் சுமார் 310 கிமீ தூரம் செல்லும் சாலையை அமைக்க உள்ளது இந்த சாலை.
எஸ்கலேட்டரைப் போன்று இந்தச் சாலை தானாகவே அதிவேகமாக நகரும் மற்றும் பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்பவும் இந்த சாலை பயன்படும்.
ஜப்பானின் தொழில்நுட்பம்
தொழில்நுட்பத்தில் ஜப்பான் எப்போதும் முன்னணியில் இருக்கும் நாடு. தற்போது ஜப்பானில் மூன்று வகையான பிரச்சனைகள் நிலவுகின்றன. ஜப்பானில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், இளம் வயதினரின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது. இதன் காரணமாக சரக்கு லாரிகளை ஓட்டக்கூடிய பயிற்சி பெற்ற ஓட்டுநர்களுக்கு ஜப்பானில் பற்றாக்குறை உள்ளது.
ஏற்றுமதி அதிகரிக்கவில்லை
வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை உயர்த்த, ஜப்பான் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இருந்தாலும் போக்குவரத்து சிக்கல்களால் ஏற்படும் பிரச்சனைகள் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் முட்டுக்கட்டையாக இருக்கிறது.
பசுமை இல்ல வாயு வெளியேற்றம்
டீசல் மற்றும் பெட்ரோல் உபயோகத்தால் பசுமை இல்ல வாயு பிரச்சனை அதிகரித்து வருகிறது. எனவே ஒரே கல்லில் மூன்று மங்காயை அடித்து, மூன்று முக்கிய பிரச்சனைகளையும் தீர்க்கும் வகையில் தானாகவே இயங்கும் சாலைகளை கட்டமைக்கும் பணியில் ஜப்பான் மும்முரமாக இறங்கியுள்ளது.
24 மணி நேரமும் செயல்படும் தானியங்கி சாலை
ஜப்பான் நாட்டின் பாரம்பரிய சரக்கு போக்குவரத்து 2020 ஆம் ஆண்டில் 1.43 பில்லியன் டன்களாகஇருந்தது, இது 2030 ஆம் ஆண்டில் 1.4 பில்லியன் டன்களாக குறையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜப்பானுக்கு இத்தகைய தானியங்கி சாலைக்கான தேவை அதிகரித்துள்ளது.
இந்த கன்வேயர் பெல்ட் 24 மணி நேரமும் இரவும் பகலும் வேலை செய்யும். பொருட்கள் நிரப்பப்பட்ட கொள்கலன்கள் இந்த சாலையில் வைக்கப்படும் மற்றும் அந்த கொள்கலன்கள் தானாகவே நகர்ந்து சென்று சேர வேண்டிய இடத்தை அடையும்.
மேலும் படிக்க | EPFO அளித்த மாஸ் GIS அப்டேட்: இந்த ஊழியர்களுக்கு சம்பளத்தில் ஏற்றம்
சரக்கு போக்குவரத்தை விரைவுபடுத்த ஏற்பாடுகள்
ஜப்பானிய அரசாங்கம் இந்த திட்டத்தை விரைவாகவே விரிவுபடுத்திவிடும் என தி ஷாங்காய் போஸ்ட் கூறுகிறது. இந்த தானியங்கி சாலைகள், ஜப்பான் முழுவதும் சரக்கு போக்குவரத்தை சீராகச் செல்வதை உறுதி செய்யும். ஒரு டன் வரை சரக்குகளை வைக்கக்கூடிய இந்த சாலையின் நியமிக்கப்பட்ட பகுதியில் சரக்குகளை சேமிக்க இடம் இருக்கும். இந்த தானியங்கி சாலை அமைக்கப்பட்ட பிறகு, தினமும் 25,000 ஓட்டுநர்கள் செய்யும் வேலை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பணியாளர் பற்றாக்குறை
வேலைக்கு ஆள் கிடைக்காமல் சிரமப்படும் ஜப்பானில் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் விரைவில் அமல்படுத்தப்படுவது வழக்கம். இந்த தானியங்கி சாலை இருபுறமும் மூடப்படும். கன்வேயர் பெல்ட் நெடுஞ்சாலைகளின் கீழ், தரைப் பாதைகள், மோட்டார் பாதைகள் போன்றவற்றில் கட்டப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் டெட்சுவோ சைட்டோ தெரிவித்துள்ளார். இந்த தானியங்கி சாலையின் இருபுறமும் மனிதர்களோ, விலங்குகளோ மோதாமல் இருக்க, சிறப்பு சுற்றுச்சுவர் அமைக்கப்படும். இதனுடன், அதன் செயல்பாட்டிற்காக பல கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்படும்.
பொதுவாக ஒரு அரசாங்கம் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை உருவாக்குவதாக அறிவிக்கும் போது, அது உருவகமாக இருக்கும். ஜப்பானைப் பொறுத்தவரை, இது மிகவும் உண்மையானது என்று சொன்னால் அது மிகையாகாது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ