SIP Mutual Fund: ஓய்வு பெறும் போது கையில் ரூ.2.5 கோடி... மாதம் ரூ.7300 முதலீடு போதும்

Retirement Planning With SIP Mutual Fund: ஓய்வு பெறும் போது யாரையும் சாராமல், தனது தேவைகளை தானே கவனித்துக் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்றால், புத்திசாலித்தனமான முதலீட்டு உத்திகள் தேவை. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 2, 2024, 01:53 PM IST
  • SIP குறிப்பிட்ட ஒரு நிலையான தொகையை பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும் செயல்முறை
  • மாதாந்திர SIP மூலம் ஓய்வூதிய திட்டமிடல்.
  • மிகச்சிறிய முதலீடுகள் கூட நீண்ட கால முதலீடாக தொடரும் போது மிகப் பெரிய அளவில் வளரலாம்.
SIP Mutual Fund: ஓய்வு பெறும் போது கையில் ரூ.2.5 கோடி... மாதம் ரூ.7300 முதலீடு போதும் title=

Retirement Planning With SIP Mutual Fund: ஓய்வு பெறும் போது யாரையும் சாராமல், தனது தேவைகளை தானே கவனித்துக் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்றால், புத்திசாலித்தனமான முதலீட்டு உத்திகள் தேவை. குறிப்பாக ஒரு நபர் 55 வயதிற்குள் ரூ. 2.5 கோடி என்ற அளவில் பெரிய கார்பஸை உருவாக்குவது என்பதை இலக்காக ஆக்கிக் கொண்டால், அதற்கான திட்டமிடலை, எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறீர்களோ அவ்வளவு எளிதாக உங்கள் இலக்கை அடைய முடியும். 

உங்கள் வயது 25, 30 அல்லது 35 வயதாக இருக்கும் நிலையில், 2.5 கோடி ரூபாய் கார்பஸை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டால், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்பதை ஆராய்வோம்.

SIP என்னும் பரஸ்பர நிதிய முதலீடு

ஓய்வூதியத் திட்டமிடல் என்பதை தாமதமாகத் தொடங்குவதை விட, முன்னதாக தொடங்கி முதலீடு செய்யத் தொடங்குவது நல்லது. நீங்கள் ஓய்வூதிய கார்பஸ் அல்லது குழந்தைகள் கல்வி, திருமணம் என பிற நிதி இலக்குகளைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், உங்கள் அனைத்து நிதித் தேவைகளுக்கும் முறையான முதலீட்டுத் திட்டம் என்னும் எஸ்ஐபி பொருத்தமானதாக இருக்கும். இது தினசரி, வாராந்திர, மாதாந்திர அல்லது ஆண்டுதோறும், குறிப்பிட்ட ஒரு நிலையான தொகையை பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும் செயல்முறையாகும்.

நீண்ட கால முதலீடுகள்

மிகச்சிறிய முதலீடுகள் கூட நீண்ட கால முதலீடாக தொடரும் போது மிகப் பெரிய அளவில் வளரலாம் என்பதால், இளமையிலேயே முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். SIP முதலீட்டை, குறைந்தபட்ச மாதாந்திர முதலீட்டை ரூ. 500 என்ற அளவில் கூட தொடங்கலாம். மேலும், இதில் கிடைக்கும் வருமானம் கூட்டு வட்டியின் பலனிக் கொடுக்கிறது. ஆண்டு சராசரி வருமானம் குறைந்தபட்சம் 12% என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். ஆனால், சில சிறந்த நிதியங்கள் 20% - 25% என்ற அளவில் கூட வருமானத்தை கொடுக்கின்றன.

மாதாந்திர SIP மூலம் ஓய்வூதிய திட்டமிடல்

முறையான முதலீட்டுத் திட்ட (SIP) முதலீட்டாளர்கள் தினசரி, வாராந்திர, மாதாந்திர, அரையாண்டு அல்லது ஆண்டு போன்ற வழக்கமான இடைவெளியில் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்வதன் மூலம் நீண்ட காலத்தில் பெரும் நிதியை உருவாக்கலாம்

1. 25 வயதில் மாதாந்திர SIP தொடங்கினால், 30 ஆண்டு தொடர் முதலீட்டில், அதவது 55 வயதிற்குள் ரூ.2.5 கோடி கார்பஸைக் குவிக்கலாம். கூட்டு வட்டி வருமானத்தில் பலனும் அதிகபட்சமாக இருக்கும்.

2. 30 வயதில் மாதாந்திர SIP தொடங்கினால், 25 ஆண்டு தொடர் முதலீட்டில், அதவது 55 வயதிற்குள் ரூ.2.5 கோடி கார்பஸைக் குவிக்கலாம்.

3. 35 வயதில் மாதாந்திர SIP தொடங்கினால், 20 ஆண்டு தொடர் முதலீட்டில், அதவது 55 வயதிற்குள் ரூ.2.5 கோடி கார்பஸைக் குவிக்கலாம். இது மிகவும் சவாலானது என்றாலும், சாத்தியமற்றது அல்ல.

மேலும் படிக்க |  Mutual Fund: எளிதில் கோடீஸ்வரர் ஆக... வருமானத்தை அள்ளி வழங்கும் FMP திட்டங்கள்

25 வயதில் SIP மாதாந்திர முதலீட்டுத் தொகை

25 வயதில் முதலீட்டை தொடங்கிய நபர், 55 வயதிற்குள் 2.5 கோடி ரூபாய் நிதி இலக்கை அடைய மாதாந்திர SIP முதலீடாக, ரூ.7,300 முதலீடு செய்ய வேண்டும். 2.5 கோடி ஓய்வூதியம் பெறுவதற்கான இலக்கை அடைய சுமார் 30 ஆண்டுகள் ஆகும். ஆண்டு வருமான குறைந்த பட்சமாக 12 சதவிகிதம் என கணக்கிட்டால் கூட, இந்த கால கட்டத்தில் உங்கள் முதலீடு ரூ. 26,28,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட மூலதன ஆதாயங்கள் ரூ. 2,31,40,371 ஆகவும், மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய கார்பஸ் ரூ.2,57,68,371 ஆகவும் இருக்கும்.

30 வயதில் SIP மாதாந்திர முதலீட்டுத் தொகை

30 வயதில் முதலீட்டை தொடங்கிய நபர், 55 வயதிற்குள் 2.5 கோடி ரூபாய் நிதி இலக்கை அடைய மாதாந்திர SIP முதலீடாக, ரூ.13,500 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இந்த காலகட்டத்தில், முதலீடு ரூ. 40,50,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட மூலதன ஆதாயங்கள் ரூ. 2,15,68,074 ஆகவும், மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய கார்பஸ் ரூ.2,56,18,074 ஆகவும் இருக்கும்.

30 வயதில் SIP மாதாந்திர முதலீட்டுத் தொகை

30 வயதில் முதலீட்டை தொடங்கிய நபர், 55 வயதிற்குள் 2.5 கோடி ரூபாய் நிதி இலக்கை அடைய மாதாந்திர SIP முதலீடாக, ரூ.25,500 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இந்த காலகட்டத்தில், முதலீடு ரூ.61,20,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட மூலதன ஆதாயங்கள் ரூ.1,93,58,272 ஆகவும், மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய கார்பஸ் ரூ.2,54,78,272 ஆகவும் இருக்கும்.

குறிப்பு: பரஸ்பர நிதிய முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. எனவே, முதலீட்டு முறைகள் குறித்து நிதி ஆலோசகருடன் விரிவாக ஆலோசனை செய்து அதுகுறித்து விரிவாக தெரிந்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | வெரி சிம்பிள் SIP முதலீடு செய்யுங்கள்! பணத்தை அள்ளுங்கள்! ஆனால் இதை தெரிந்து கொள்ளுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News