இன்றைய உலகில் பல துறைகள் முற்றிலும் டிஜிட்டலாக மாறி வருகின்றன. இவை நமது வேலையை சுலபமாக மாற்றுகின்றன. வங்கிதுறையும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை பெற்றுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பண பரிவர்த்தனையில் எளிமையையும், வசதியையும் கொண்டுவந்துள்ளது. தினசரி எளிதான பண பரிமாற்றம் முதல், வீட்டில் இருந்தபடியே புதிய கணக்குகளைத் திறப்பது வரை வங்கி தொடர்பான வேலைகள் தற்போது எளிதாகி உள்ளன. ஆன்லைன் மூலம் KYC தொடர்பான வேலைகளை முடிப்பது வரை பல செயல்முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தனி நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை தினசரி பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | ரூ.20 ஆயிரத்தில் தொடங்கிய தொழில்-இப்போ 200 கோடி மதிப்பு! இந்த கதையை படிங்க..
இருப்பினும் வங்கி கணக்குகளை திறப்பது எளிதானது என்றாலும், அதனை பராமரிப்பது மிகவும் சிக்கலான ஒன்று ஆகும். பல வங்கி கணக்குகளை நிர்வகிப்பது சில நன்மைகளை அளிக்கும் அதே வேளையில், பல சவால்களுடன் வருகிறது. இரண்டுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்துள்ளதால் என்ன என்ன சிக்கல்கள் ஏற்படும் மற்றும் அதனை எவ்வாறு சரி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இரண்டுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்பதில் இருக்க கூடிய முக்கிய சிக்கல்களில் ஒன்று குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிப்பதாகும். தற்போது பெரும்பாலான வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையை கட்டாயப்படுத்துகின்றன.
மேலும் இதனை பராமரிக்க தவறினால் வங்கியால் அபராதக் கட்டணங்களும் விதிக்கப்படுகின்றன. இரண்டுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருக்கும் போது, இது போன்ற சில தவறுகள் நமக்கே தெரியாமல் நடந்து விடுகிறது. மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் அதிகரிப்பு காரணமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இரண்டுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்பது இந்த மோசடி நடவடிக்கைகளில் சிக்குவதை எளிதாக்குகின்றன. எனவே, கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது மற்றும் சாத்தியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயங்களில் ஒன்று வங்கிக் கணக்குகளின் செயலற்ற தன்மை ஆகும். இரண்டு அல்லது மூன்று வங்கி கணக்குகள் இருந்தால் அவற்றில் சிலவற்றை மட்டுமே அடிக்கடி பயன்படுத்துவோம். மேலும் சில கணக்குகளை அவ்வப்போது மட்டுமே பயன்படுத்துவோம். இதனால் நீண்ட நாட்களுக்கு செயல்படாமல் இருக்கும் கணக்குகளை வங்கிகள் செயலிழக்கச் செய்யலாம். அந்த சமயத்தில் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர கூடுதல் கட்டணங்கள் செலுத்த வேண்டி இருக்கும். இதைத் தவிர்க்க, அனைத்து வங்கி கணக்குகளிலிம் சீரான இடைவெளியில் பரிவர்த்தனைகளைச் செய்வது நல்லது.
பொதுவாக சில வங்கிச் சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டாலும், சில சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இந்த கட்டணங்கள் குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம். நிறைய வங்கி கணக்குகளை வைத்திருக்கும் போது சிறிய தொகையை நாம் கருத்தில் கொள்வது இல்லை. இரண்டு முதல் மூன்று வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது எளிதாக இருந்தாலும், சில நபர்களுக்கு சவாலாக இருக்கலாம். உங்களின் நிதி தேவைகளை பொறுத்து வங்கி கணக்குகளை வைத்து கொள்வது நல்லது. மேலும், மோசடியிலிருந்து பாதுகாக்க நல்ல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது பயனளிக்கும்.
மேலும் படிக்க | PPF மற்றும் EPF -ல் ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாமா? விதிகள் என்ன சொல்கிறது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ