ரிசர்வ வங்கி அளித்த பரிசு: UPI-இல் 5 புதிய வசதிகள் அறிமுகம், விவரம் இதோ... குஷியில் பயனர்கள்!!

RBI New UPI Services: புதிய டிஜிட்டல் கட்டண விருப்பங்கள் UPI பரிவர்த்தனைகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 7, 2023, 03:13 PM IST
  • UPI-இல் 5 புதிய வசதிகள் அறிமுகம்.
  • இந்த ஐந்து வசதிகளும் நுகர்வோருக்கு UPI கட்டண முறைகளை எளிதாக்கும்.
  • புதிய டிஜிட்டல் கட்டண விருப்பங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
ரிசர்வ வங்கி அளித்த பரிசு: UPI-இல் 5 புதிய வசதிகள் அறிமுகம், விவரம் இதோ... குஷியில் பயனர்கள்!! title=

நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) செப்டம்பர் 6 அன்று, அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான மற்றும் நெகிழ்வான டிஜிட்டல் கட்டண முறையை உருவாக்குவதற்கான புதிய யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) கட்டண விருப்பங்களை பற்றி அறிவித்தது. இந்த புதிய வசதிகளில், UPI இல் உரையாடல் அடிப்படையிலான கட்டண முறையான ஹலோ யுபிஐ (Hello UPI), UPI LITE X, Tap & Pay, Credit Line on UPI மற்றும் உரையாடல் அடிப்படையிலான கட்டண முறையான BillPay Connect ஆகியவை அடங்கும். Global Fintech Fest 2023 இல் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த தயாரிப்புகள் UPI க்கு மாதந்தோறும் 100 பில்லியன் பரிவர்த்தனைகள் என்ற இலக்கைக் கடக்க உதவும். NPCI அதன் சமீபத்திய சலுகைகளின் கீழ் வங்கிகளிடமிருந்து உரையாடல் அடிப்படையிலான கட்டணங்கள் (conversational payments) மற்றும் முன்-அனுமதிக்கப்பட்ட கடன்களை (pre-sanctioned credit lines) அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஐந்து வசதிகளும் நுகர்வோருக்கு UPI கட்டண முறைகளை எளிதாக்கும். புதிய டிஜிட்டல் கட்டண விருப்பங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்த புதிய டிஜிட்டல் பேமெண்ட் வசதிகள் என்ன?

Credit Line on UPI: இந்த வசதி அணுகலை விரிவுபடுத்தும். வாடிக்கையாளர்கள் UPI மூலம் வங்கிகளில் இருந்து முன் அனுமதி பெற்ற கடன்களைப் பெற முடியும். UPI மீதான கிரெடிட் லைன், விரைவான பரிவர்த்தனைக்கு கிரெடிட் லைன்களைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்கும் செயல்முறையை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது டிஜிட்டல் வங்கி முறையை சீரமைக்க உதவும்.

BillPay Connect - Conversational Bill Payments: இந்த வசதி மூலம், BillPay Connect செயலியில் ‘Hi’ எனச் செய்தி அனுப்பி பில்களைப் பெறவும், செலுத்தவும் முடியும்.  பணம் செலுத்துவதற்கு அவர்கள் ஸ்மார்ட்போன் போன்ற தங்களின் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களில் குரல் கட்டளைகளைப் பயன்படுத்தலாம். மேலும் உடனடி குரல் உறுதிப்படுத்தலையும் பெறலாம். மக்கள் குரல் உதவியுடன் பில் செலுத்தும் வசதியையும் (voice-assisted bill payments facility ) பெறலாம். நுகர்வோருக்கு பாதுகாப்பு உணர்வை வழங்க, வாடிக்கையாளர்கள், பரிவர்த்தனையின் அங்கீகாரம் மற்றும் சரிபார்ப்புக்கான உடனடி அழைப்பைப் பெறுவார்கள்.

மேலும் படிக்க | UPI பயன்படுத்தி ATM இல் பணம் எப்படி எடுப்பது? வீடியோ பார்த்து தெரிஞ்சிக்கோங்க

Hello! UPI – Conversational Payments on UPI: உரையாடல் வழி கட்டண முறைகள் இந்தியா முழுவதும் UPI அணுகலை விரிவுபடுத்தும். தொலைபேசி அழைப்புகள், UPI ஆப்ஸ் மற்றும் இணையம் அல்லது பிற நெட்வொர்க்குகள் வழியாக தரவை அனுப்பக்கூடிய சாதனங்களைப் பயன்படுத்தி குரல்-இயக்கப்பட்ட UPI கட்டணங்களை செலுத்த (voice-enabled UPI payments ) வாடிக்கையாளர்களை இது அனுமதிக்கும். பயனர்கள் குரல் கொடுத்து UPI பின்னை உள்ளிட்டு பரிவர்த்தனைகளை முடிக்க முடியும். இந்த சேவைக்கான இந்தி மற்றும் ஆங்கில மொழி மாதிரிகளை உருவாக்க NPCI, IIT மெட்ராஸில் உள்ள AI4Bharat உடன் கூட்டு சேர்ந்துள்ளது. விரைவில் பிராந்திய மொழிகளில் இந்த சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

UPI Tap & Pay: நுகர்வோர் தங்கள் கட்டணங்களை செலுத்தி முடிக்க வணிக இடங்களில் உள்ள நியர் ஃபீல்டு கம்யூனிகேஷன் (NFC) செயல்படுத்தப்பட்ட QR குறியீடுகளைத் தட்டினால் போதும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விரைவாக பரிவர்த்தனைகளை முடிக்க முடியும்.

UPI LITE X: தொலைதூரப் பகுதிகள் மற்றும் மோசமான இணைப்பு உள்ள பிராந்தியங்களில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் பழக்கத்தை விரிவுபடுத்த, UPI LITE X ஆனது வாடிக்கையாளர்களை ஆஃப்லைனில் இருக்கும் போதும் பரிவர்த்தனைகளைத் தொடங்கவும் முடிக்கவும் அனுமதிக்கும்.

புதிய அம்சங்கள் வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு உதவும்?

புதிய டிஜிட்டல் கட்டண விருப்பங்கள் UPI பரிவர்த்தனைகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. UPI மீதான கிரெடிட் லைன் தனிநபர்கள் கடனை எளிதாகப் பெறவும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவும். UPI LITE X மற்றும் ஹலோ! UPI வசதிகள், வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனைகளை எளிதாக செய்யும் திறனை வளர்த்து, UPI -யின் வரம்பை விரிவுபடுத்தும். உரையாடல் அடிப்படையிலான பில் கட்டணங்காள் மற்றும் டேப் அண்ட் பே அம்சம் அனைத்து பணப் பரிமாற்றங்களையும் விரைவாகச் செய்து பயனர்களுக்கும் பாதுகாப்பு உணர்வைத் தரும்.

மேலும் படிக்க | இனி பணம் எடுக்க ஏடிஎம் கார்டு தேவையில்லை! புதிய வசதி அறிமுகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News