கிராமப்புற மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களின் நம்பகமான முதலீட்டு விருப்பமாக தபால் நிலையங்களின் முதலீட்டு திட்டங்கள் உள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான தபால் அலுவலகங்கள் நல்ல வருமானத்தையும், பணத்திற்கு பாதுகாப்பையும் தருகிறது. நீங்கள் சம்பாதித்த பணத்தை எங்காவது பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்து நல்ல வருமானத்தை பெற விரும்பினால், தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) திட்டம் ஒரு நல்ல தேர்வாகும். இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்தாலும், இந்தத் திட்டத்தில் இருந்து பெரிய லாபத்தைப் பெறலாம். இந்தத் திட்டம் பாதுகாப்பு மற்றும் நிதிச் சேமிப்பை வழங்குகிறது.
மேலும் படிக்க | ஆதார் எண் இல்லாமலும் e-Aadhaar டவுன்லோட் செய்யலாம்: முழு செயல்முறை இதோ
இந்திய குடிமகன்கள் எவரும் தபால் அலுவலக கிளை அல்லது வங்கியிலும் கணக்கைத் தொடங்கலாம், குழந்தைகளாக இருக்கும்பட்சத்தில் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் கணக்கைத் திறக்கலாம். அதேசமயம் தபால் அலுவலக பிபிஎஃப் திட்டத்தில் கூட்டுக் கணக்கை திறக்க முடியாது, இவை என்ஆர்ஐ களுக்கு இந்த திட்டத்தை வழங்கவில்லை, இருப்பினும் வயது முதிர்ச்சி அடைந்த என்ஆர்ஐ இந்த பிபிஎஃப் திட்டத்தின் பலன்களை பெறலாம். இந்த திட்டமானது 15 வருட முதிர்வு காலத்துடன் கிடைக்கிறது, முதலீட்டாளர்கள் விருப்பத்தின் பெயரில் இதனை நீட்டித்து கொள்ளலாம்.
முதலீட்டாளர்களுக்கு ஆரம்பத்தில் முதலீடு செய்யப்பட்ட விகிதத்தில் நிலையான வருமானம் வழங்கப்படுகிறது. எனவே வட்டி விகிதங்கள் இறுதியில் குறைக்கப்பட்டாலும் இதுபற்றி முதலீட்டாளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 அல்லது ஒரு நாளைக்கு ரூ.417 என 15 ஆண்டுகள் அல்லது முதிர்வு வரை முதலீடு செய்தால் உங்கள் மொத்த முதலீடு ரூ.22.50 லட்சமாக இருக்கும். ஆண்டுக்கு 7.1 சதவீத கூட்டு வட்டி விகிதத்தில் லாபம் கிடைக்கும், வட்டி ரூ. 18.18 லட்சம் சேர்த்து மொத்தமாக உங்களுக்கு ரூ.40.68 லட்சம் வருமானம் கிடைக்கும்.
மேலும் படிக்க | DA-க்குப் பிறகு ஃபிட்மென்ட் காரணியை உயர்த்த வாய்ப்பு! எவ்வளவு சம்பளம் உயரும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ