பிரதமர் மோடி துவக்கி வைக்கும் அதிவேக ரயில் RapidX... 12 நிமிடங்களில் 17 கி.மீ..!

நாட்டின் முதல் அதிவேக பிராந்திய ரயில் ரேபிட்எக்ஸ் (RapidX) ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (20 அக்டோபர் 2023) இரவு 11.15 மணிக்கு உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தில் தொடங்கி வைக்கிறார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 19, 2023, 08:20 AM IST
பிரதமர் மோடி துவக்கி வைக்கும் அதிவேக ரயில் RapidX... 12 நிமிடங்களில் 17 கி.மீ..! title=

நாட்டின் முதல் RapidX ரயிலுக்கான காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. நாட்டின் முதல் பிராந்திய ரயில் ரேபிட்எக்ஸ் (RapidX) ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (20 அக்டோபர் 2023) இரவு 11.15 மணிக்கு உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தில் தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக, இந்த சேவை 17 கிலோமீட்டர் நீளம் கொண்ட தூரத்திற்கானது. இதில் ஐந்து நிலையங்கள் இருக்கும். தொடக்க விழாவிற்கான பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு ரயில்வே நிர்வாகம் கடந்த சில நாட்களாக இரவு பகலாக உழைத்து வருகிறது. அவர்களுடன் எஸ்பிஜி குழுவும் முகாமிட்டு தீவிரமான முன்னேற்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளது. சம்பவ இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. போலீஸ் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

RapidX மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும்

தில்லி மீரட் அதிக வேக ரயிலின் முதல் கட்டத்தில், 17 கிமீ தூரத்துற்கான சேவை தொடங்கப்பட உள்ளது. இதில் உள்ள ஐந்து நிலையங்களில் சாஹிபாபாத், காசியாபாத், குல்தார், துஹாய் மற்றும் துஹாய்-டிப்போ ஆகியவை அடங்கும். அதன் சேவைகள் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் கிடைக்கும். இது மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும். ராபிட்எக்ஸ் ரயில் சாஹிபாபாத்தில் இருந்து துஹாய் டிப்போ வரையிலான 17 கிமீ தூரத்தை வெறும் 12 நிமிடங்களில் கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒரு பெட்டி 

ரேபிட்எக்ஸ் ரயில் சேவை குறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ரயிலில் ஒரு பெட்டி பெண்களுக்காக ஒதுக்கப்படும். இருபுறமும் முதல் ரயில் மாலை 6 மணிக்கும், கடைசி ரயில் இரவு 11 மணிக்கும் இயக்கப்படும் எனவும் அதிகாரி தெரிவித்தார். அழகான இருக்கைகள், அதி வேக பயணம் உள்ளிட்ட பல வசதிகள் இதில் காணப்படுகின்றன.

பொது மக்களுக்கான சேவைகள் சனிக்கிழமை முதல் தொடங்கும்

 பொது மக்களுக்கான சேவைகள் சனிக்கிழமை முதல் தொடங்கப்படும். திறப்பு விழாவுக்கு முன், என்சிஆர்டிசி புதன்கிழமை ரயிலின் சோதனை ஓட்டத்தை நடத்தியது. இதில் ஊடக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் மற்றும் RapidX ரயிலின் மெய்நிகர் பிரீமியர் ஷோவை கண்டு ரசித்தனர்.

மேலும் படிக்க |  தீபாவளிக்கு முன் ‘9’ புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்!

ஒவ்வொரு ரயிலிலும் 6 பெட்டிகள்

ஒவ்வொரு RapidX ரயிலிலும் 6 பெட்டிகள் உள்ளன, அதில் சுமார் 1700 பயணிகள் ஒன்றாகப் பயணிக்க முடியும். ஒவ்வொரு ஸ்டாண்டர்ட் கோச்சிலும் 72 இருக்கைகளும், பிரீமியம் கோச்சில் 62 இருக்கைகளும் உள்ளன. ஒவ்வொரு ரேபிட்எக்ஸ் ரயிலிலும் ஒரு பெட்டி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது, இது பிரீமியம் கோச்சுக்குப் பிறகு இரண்டாவது பெட்டியாகும். ரயிலின் மற்ற பெட்டிகளிலும் பெண்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, ஒவ்வொரு பெட்டியிலும் ஊனமுற்ற பயணிகள்/மூத்த குடிமக்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

RapidX ரயிலில் பிரீமியம் கோச்சும் உள்ளது

ஒவ்வொரு ரேபிட்எக்ஸ் ரயிலிலும் ஒரு பிரீமியம் கோச் இருக்கும், அதில் சாய்வு இருக்கைகள், கோட் ஹூக்குகள், மேகசின் ஹோல்டர்கள் மற்றும் ஃபுட்ரெஸ்ட்கள் போன்ற பல கூடுதல் பயணிகளை மையப்படுத்திய அம்சங்கள் இருக்கும். டெல்லியில் இருந்து மீரட் செல்லும் முதல் கோச்சும், மீரட்டில் இருந்து டெல்லி செல்லும் கடைசி கோச்சும் பிரீமியம் கோச்சாக இருக்கும்.

என்சிஆர் மக்களுக்கு கிடைக்கும் வசதிகள் 

பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆர்ஆர்டிஎஸ்) என்பது அதிவேக, அதிவேக போக்குவரத்து அமைப்பாகும், இது என்சிஆர் குடியிருப்பாளர்களுக்கு இப்பகுதியில் தடையின்றி பயணிக்க உதவும், மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயங்கும். டெல்லி-காசியாபாத்-மீரட் இடையே 82 கிமீ நீளமுள்ள முதல் வழித்தடம் கட்டப்பட்டு வருகிறது.

அதிவேக ரயில் கட்டணம்

ரேபிட்எக்ஸ் ரயில்களில் பயணிக்கும் பயணிகள், சாஹிபாபாத் முதல் காஜியாபாத்தில் உள்ள துஹாய் டிப்போ வரையிலான 17 கிமீ முன்னுரிமைப் பிரிவில் நிலையான கோச் இருக்கைக்கு ₹20-50 கட்டணம் செலுத்த வேண்டும், அதே சமயம் பிரீமியம் கோச்சினைத் தேர்ந்தெடுப்பவர்கள் ஒரு இருக்கைக்கு ₹40-100 செலுத்த வேண்டும் என, தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து கழகம் (NCRTC) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

டெல்லி - காசியாபாத்-மீரட் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  வழித்தட  முனையம்

டெல்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து வழித்தட   முனையத்தின்  17 கிலோ மீட்டர் தொலைவிலான  முன்னுரிமைப் பிரிவு தொடங்கப்படும். இது காசியாபாத், குல்தார் மற்றும் துஹாய் நிலையங்கள் வழியே  சாஹிபாபாத்தை துஹாய் பணிமனையை இணைக்கும். டெல்லி – காசியாபாத் - மீரட் வழித்தடத்திற்கு 2019 மார்ச் 8-ம் தேதி பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும் படிக்க | நவீன வசதிகளுடன் ஜொலிக்கும் வந்தேபாரத் ரயில்களில் செய்யப்பட்டுள்ள மாறுதல்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News