தொடர்ந்து ஏழாவது நாளாக பெட்ரோல் விலை இன்றும் குறைவு கண்டுள்ளது. நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல் விலை 14-15 பைசா குறைக்கப்பட்டு டீசல் விலை 15-17 பைசா குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ₹ 78.19-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நேற்றைய விலை (₹ 78.34)-விட 0.15 பைசா குறைவு ஆகும். முன்னதாக கடந்த ஜனவரி 11-ஆம் தேதி பெட்ரோல் விலை ₹ 79.15-ஆக இருந்தது. அதன் பின்னர் தொடர்ந்து குறைவு கண்டு வரும் பெட்ரோல் விலை இன்று ₹ 78.19-ஆக பதிவாகியுள்ளது. டீசல் விலையினை பொறுத்தவரையில்., ஒரு லிட்டர் விலை ₹ 72.50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நேற்றைய விலை (₹ 72.67)-விட 0.17 பைசா குறைவு ஆகும். முன்னதாக கடந்த ஜனவரி 11-ஆம் தேதி டீசல் விலை ₹ 73.26-ஆக இருந்தது. அதன் பின்னர் தொடர்ந்து குறைவு கண்டு வரும் டீசல் விலை இன்று ₹72.50-ஆக பதிவாகியுள்ளது.
புதுடில்லியில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை₹75.09ஆகவும், டீசல் ₹ 68.45-ஆகவும் விற்கப்படுகிறது. மும்பையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை. 80.68 மற்றும் டீசல் ஒரு லிட்டருக்கு. 71.77 ஆகும்.
குறித்த அந்த ஏழு நாட்களில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாடு முழுவதும் 90-100 பைசாக்களால் மலிவானது.
நாட்டின் எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கிற்கு மத்திய கிழக்கு நாடுகளையே சார்ந்துள்ளன. குறிப்பாக ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
நாட்டின் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் உள்நாட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தவறாமல் மதிப்பாய்வு செய்கின்றன. எரிபொருள் நிலையங்களில் காலை 6 மணி முதல் விலை திருத்தங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பெட்ரோல், டீசல் விலைகளானது கடந்த ஜூன் 17, 2017 முதல் நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இது ஒவ்வொரு வாரமும் பெட்ரோல், டீசல் விலையை மறுசீரமைக்கும் முந்தைய நடைமுறையிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட நடைமுறையாகும்.