ரூ.40 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை - நகைப்பிரியர்கள் ஷாக்

தங்கம் விலை மீண்டும் 40 ஆயிரத்தை நெருங்கியிருப்பதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 13, 2022, 06:51 PM IST
  • மீண்டும் உயரும் தங்கம் விலை
  • ரூ.40 ஆயிரத்தை நெருங்குவதால் அதிர்ச்சி
  • தங்கம் விலை உயர்வுக்கு என்ன காரணம்?
ரூ.40 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை - நகைப்பிரியர்கள் ஷாக்   title=

பெட்ரோல் விலை ஒருபுறம் ஏறிக்கொண்டே செல்ல, மறுபுறம் தங்கம் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. சென்னையில் விற்பனையான 24 கேரட் ஒரு கிராம் சுத்த தங்கம் ரூ.5, 395 க்கு விற்பனையானது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 4996 ரூபாய்க்கும், 8 கிராம் தங்கம் 39968 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.  40 ஆயிரத்தை நெருங்கியிருக்கும் தங்கத்தின் விலை மக்களை கிறுகிறுக்க வைத்துள்ளது. கடந்த சில மாதங்களில் குறைந்த தங்கத்தின் விலை மீண்டும் விலை உயரத் தொடங்கியிருப்பது சாதாரண மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

மேலும் படிக்க | தங்கம் விலை சற்றே குறைவு, பொதுமக்களுக்கு ஆறுதல்

கடந்த 2 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை 4,825 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 4996 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதாவது கிராமுக்கு 171 ரூபாய் 10 நாட்களில் உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் 1368 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் உச்சக்கட்டத்தில் இருந்ததால், அந்த விவகாரம் தங்கம் விலையிலும் எதிரொலித்தது. மார்ச் மாதம் கிடுகிடு உயர்வை சந்தித்த தங்கம் மீண்டும் குறையத் தொடங்கியது. தற்போது மீண்டும் விலை உயர்வை சந்தித்து வருகிறது. இதற்கும் ரஷ்யா - உக்ரைன் விவகாரமே காரணம் என பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இன்னும் கூடுதலாக பொருளாதார தடைகளை விதிக்க திட்டமிட்டிருப்பதன் எதிரொலியாக இந்த விலை ஏற்றம் இருப்பதாக கூறியுள்ள பங்குச் சந்தை நிபுணர்கள், பணவீக்கம் காரணமாக பாதுகாப்பான முதலீட்டை நோக்கி வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் நகர்வதும் தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என விளக்கமளித்துள்ளனர். மேலும், சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருக்கும் லாக்டவுனால் கமாடிட்டி பொருட்களுக்கு டிமாண்ட் அதிகரித்திருக்கிறஹைதராபாத்தில் ஏடிஎம்-ல் தங்கம் - ஜூவல்லரி கடைகளுக்கு ஆப்புது. இதுவும் தங்கம் விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாக சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க | ஹைதராபாத்தில் ஏடிஎம்-ல் தங்கம் - ஜூவல்லரி கடைகளுக்கு ஆப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News