ஓய்வூதியம் பெறுபவர்கள் கட்டாயம் இதை செய்யாவிட்டால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்!

டிஜிட்டல் லைஃப் சான்றிதழை நீங்கள் ஆன்லைனில் பிடிஎஃப் வடிவில் டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ளலாம் மற்றும் உங்களது டிஜிட்டல் லைஃப் சான்றிதழின் நிலையையும் சரிபார்க்கலாம்.  

Written by - RK Spark | Last Updated : Nov 23, 2022, 08:47 AM IST
  • லைஃப் சான்றிதழ் என்பது ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் சான்றிதழாகும்.
  • வாழ்க்கைச் சான்றிதழை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் சமர்ப்பிக்கலாம்.
  • ஓய்வூதியம் பெரும் ஒவ்வொரு நபரும் ஆயுள் சான்றிதழை வழங்க வேண்டும்.
ஓய்வூதியம் பெறுபவர்கள் கட்டாயம் இதை செய்யாவிட்டால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்! title=

ஓய்வூதியதாரர்கள் அவர்களின் லைஃப் சான்றிதழைச் சமர்ப்பிக்கவில்லை என்றால் தங்களது ஓய்வூதிய நிதியைப் பயன்படுத்த முடியாது என்று கூறப்பட்டுள்ளது.  டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் அல்லது வாழ்க்கைச் சான்றிதழை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் சமர்ப்பிக்கலாம் மற்றும் வங்கி அல்லது திட்டத்தின் போர்ட்டலுக்குச் சென்றும் ஆன்லைனில் லைஃப் சான்றிதழைச் சமர்ப்பித்து கொள்ளலாம்.  ஓய்வூதியம் பெரும் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆயுள் சான்றிதழை வழங்க வேண்டும்.  ஒரு வருடம் முடிந்த பிறகு நீங்கள் லைஃப் சான்றிதழை சமர்பிக்காவிட்டால் உங்களுக்கு ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் ஏற்படும், அதனால் உங்களது டிஜிட்டல் லைஃப் சான்றிதழின் நிலையை சரிபார்த்துக்கொள்ளலாம்.

லைஃப் சான்றிதழ் என்பது ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் சான்றிதழாகும், இந்த சான்றிதழில் ஆதார் அட்டையை போன்று ஓய்வூதியதாரர்களின் பயோமெட்ரிக் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.  டிஜிட்டல் லைஃப் சான்றிதழை அடிப்படையாக வைத்து தான் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது, இது ஓய்வூதியதாரர் உயிருடன் தான் இருக்கிறார் என்பதற்கான சான்றாகும்.  டிஜிட்டல் லைஃப் சான்றிதழை உருவாக்கும் போது நீங்கள் தவறான தகவலைக் கொடுத்தால், அது நிராகரிக்கப்படலாம்.  டிஜிட்டல் லைஃப் சான்றிதழை நீங்கள் ஆன்லைனில் பிடிஎஃப் வடிவில் டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ளலாம் மற்றும் உங்களது டிஜிட்டல் லைஃப் சான்றிதழின் நிலையையும் சரிபார்க்கலாம்.  இதற்கு உங்களிடம் ஜீவன் பிரமானுக்கான ஆதார் எண் அல்லது விஐடி இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | 25 வயதிலேயே கோடீஸ்வரராகனுமா? அப்போ LIC ஓட இந்த திட்டம் போதும்

மொபைலில் ஜீவன் பிரமான் செயலியை பதிவிறக்கம் செய்யும் வழிமுறை:

1) செயலியை பதிவிறக்க, முதலில் https://jeevanpramaan.gov.in க்குச் செல்ல வேண்டும்.
 .
2) இப்போது மின்னஞ்சல் ஐடி, கேப்ட்சாவை உள்ளிட்டு டவுன்லோடு கோரிக்கையை ஏற்கவும்.

3) பிறகு மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட ஓடிபியை உள்ளிடவும்.

4) ஓடிபி உள்ளிட்ட பிறகு, டவுன்லோடு மொபைல் ஆப் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

5) மின்னஞ்சலில் பெறப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் apk ஃபைலை டவுன்லோடு செய்யலாம்.

மேலும் படிக்க | 6 லட்சம் ஆதார் அட்டைகளை ரத்து செய்த UIDAI.. காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News