கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட Paytm.. அதில் உள்ள பணம் என்ன ஆகும்..!!!

பேடிஎம்(Paytm ) தொடர்ந்து கொள்கை விதிகளை மீறி வருவதாக கூறி, அதன் செயலி கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 18, 2020, 04:18 PM IST
  • பேடிஎம்(Paytm ) தொடர்ந்து கொள்கை விதிகளை மீறி வருவதாக கூறி, அதன் செயலி கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
  • பல இந்திய மாநிலங்களில் ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் இன்னும் சட்டப்பூர்வமாக உள்ளது என்பதைக் கவனிக்க வேண்டியது அவசியம்.
  • மேலும் கூகிள் பிளே ஸ்டோர் (Google Play store) கொள்கைகளுக்கு இணங்க, இந்த செயலிகள் இருக்க வேண்டியதும் அவசியம்.
கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட Paytm.. அதில் உள்ள பணம் என்ன ஆகும்..!!! title=

Paytm என்பது, இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பேமெண்ட் சேவை ஆகும். மிகப் பெருய ஸ்டார் அப் நிறுவனமான பேடிஎம் (Paytm) நிறுவனம் கூகிள் ப்ளே ஸ்டோர் கொள்கை விதிகளை  மீறுவதாக கூறி, கூகிள் நிறுவனம் பேடிஎம் செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. 

எனினும் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு டிஜிட்டல் முறையிலான பேமெண்டில் அதிகம் பயன்படுத்தப்படும் பேடிஎம் (Paytm) செயலி விரைவில் கூகிள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் கொண்டு வரப்படும் எனவும் அதில் உள்ள வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும், வாடிக்கையாளர்கள் அதனை தொடர்ந்து பயன்படுத்தலாம் எனவும் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

கட்டுப்பாடற்ற சூதாட்டம் மற்றும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக, Paytm முதல் விளையாட்டு பந்தயம் தொடர்பான சேவை,   கூகிளின் கொள்கைகளை மீறியதால்,  Paytm, ப்ளே ஸ்டோரில் இருந்து  தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

மேலும் படிக்க | தனியாரால் புறக்கணிக்கப்படும் வட சென்னைவாசிகள், ஆபத்பாந்தவனாகும் BSNL..!!!

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்புவது தொடர்பாக, பிரபலமான ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ (Disney+) ஹாட்ஸ்டார் (Hotstar)  உள்ளிட்ட பல செயலிகளுக்கும் கூகிள் எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபலமான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டிகள் தொடங்க் உள்ள நிலையில்,ஆன்லைன் சூதாட்டங்களை அனுமதிக்கும் கூகிள் கெமிங் ஆப்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவில் சட்டவிரோதமானது.

இருப்பினும், பல இந்திய மாநிலங்களில் ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் இன்னும் சட்டப்பூர்வமாக உள்ளது என்பதைக் கவனிக்க வேண்டியது அவசியம். மேலும் கூகிள் பிளே ஸ்டோர் (Google Play store)  கொள்கைகளுக்கு இணங்க,  இந்த செயலிகள் இருக்க வேண்டியதும் அவசியம்.

மேலும் படிக்க | NEET 2020 : முடிவுகள் விரைவில்.. கட் ஆஃப் மார்க் என்னவாக இருக்கும்..!!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News