வாட்ஸ் ஆப் இமெயிலில் கூட சம்மன் வரும்.. இனி எங்கே போனாலும் தப்பிக்க முடியாது..!!

வாட்ஸ்அப், மின்னஞ்சல், ஃபேக்ஸ்  மூலம் சம்மன் அனுப்பவும் காசோலைகளுக்கான காலகெடுவை நீட்டிக்கவும் SC அனுமதித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 10, 2020, 09:51 PM IST
  • மனுதாரரின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று நீதி மன்ற பிரிவு தெளிவுபடுத்தியது.
  • காசோலையின் காலக்கெடுவை ரிசர்வ் வங்கி தனது சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கலாம் என நீதிமன்றம் கூறியது.
  • கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால், தபால் நிலையம் செல்வது சாத்தியம் அல்ல என்பதால் SC இவ்வாறு கூறியுள்ளது
வாட்ஸ் ஆப் இமெயிலில்  கூட சம்மன் வரும்.. இனி எங்கே போனாலும் தப்பிக்க முடியாது..!! title=

வாட்ஸ்அப்(WhatsApp), மின்னஞ்சல்(email), ஃபேக்ஸ் (fax) மூலம் சம்மன் அனுப்ப SC அனுமதித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த லாக்டவுன் அறிவிக்கப்பட்டதன் காரணமாக,  காசோலைகளின் செல்லுபடியாகும் தேதியை ரிசர்வ் வங்கி நீட்டிக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.

சட்ட நடைமுறையில் சம்மன் மற்றும் நோட்டீஸ்கள் அனுப்புவது இன்றியமையாத நடவடிக்கையாக உள்ளது.

வழக்கு தொடர்பாக வழங்கப்படும் சம்மன் மற்றும் நோட்டீஸ்களை வாட்ஸ்அப், இ-மைல் அல்லது ஃபேக்ஸ் மூலம் அனுப்ப அனுமதி அளித்துள்ளது

தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே S.A. Bobde தலைமையிலான நீதிமன்ற பிரிவு, நோட்டீஸ், சம்மன் மற்றும் மனுக்கள் ஆகியவற்றை அனுப்ப தபால் நிலையங்களுக்கு செல்வது சாத்தியமில்லை என்பதை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றது. நீதிபதிகள் ஏ எஸ் போபண்ணா மற்றும் ஆர் சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய நீதிமன்ற பிரிவு, வாட்ஸ்அப், மற்றும் பிற தொலைபேசி மெசஞ்சர் சேவைகள் மூலம் நோட்டீஸ் மற்றும் சம்மன் அனுப்பப்பட்ட அதே நாளில் இ-மைலும் அனுப்பப்பட வேண்டும் என்று கூறியது.

ALSO READ | தினமும் கொஞ்சம் தேங்காய் போதும்… நெருங்கி வர அஞ்சி நோய்  ஓடும்…. !!!!

 

மனுதாரரின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று நீதி மன்ற பிரிவு தெளிவுபடுத்தியது.

"வாட்ஸ் அப்பில் தோன்றும் இரண்டு நீல நிற டிக் குறிகள், மனுதாரர் அல்லது சம்பந்தப்பட்ட நபர், குறிப்பிட்ட சம்மன் அல்லது நோட்டீஸை கண்டதாக கருத்தில் கொள்ளப்படும்" என்று நீதிமன்ற பிரிவு குறிப்பிட்டது.

சம்மன் மற்றும் நோட்டீஸை அனுப்ப வாட்ஸ்அப்பை  மற்றும் குறிப்பிட வேண்டும் என கோரிய அட்டார்னி ஜெனரலின் கோரிக்கையை நீதி மன்ற பிரிவு நிராகரித்தது. வாட்ஸ்அப்பை மட்டும் குறிப்பிடுவது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்காது என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த லாக்டவுன் அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் காசோலைகள் செல்லுபடியாகும் காலகெடுவை ரிசர்வ் வங்கி நீட்டிக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.

ALSO READ | AIR INDIA நிறுவனம் TATA குழுமம் வசம் செல்லுமா... !!!

 

ரிசர்வ் வங்கியின் வழக்கறிஞரான மூத்த வழக்கறிஞர் வி கிரி, முந்தைய விசாரணையில் வழங்கப்பட்ட உத்தரவை பின்பற்றி,  காசோலை (cheque)  செல்லுபடியாகும் காலகெடுவை மாற்றி அமைக்கும் உத்தரவை பிறப்பித்ததாக நீதி மன்ற பிரிவிடம் தெரிவித்தார்.

காசோலையின் காலக்கெடுவை  ரிசர்வ் வங்கி தனது சூழ்நிலைக்கு ஏற்ப  மாற்றி அமைக்கலாம் என நீதிமன்றம் கூறியது.

Trending News