புதுடெல்லி: பணத்தை எடுக்க இப்போதெல்லாம் அனைவரும் ATM-க்கு செல்வது வழக்கம்தான். ஆனால், சில சமயங்களில் ATM-களின் வாசலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால், இப்போது உங்களுக்கு பணம் எடுக்க வேறு சில வழிகளும் கிடைக்கின்றன.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்கள் Automated Deposit cum Withdrawal Machine (ADWM) மூலம் வங்கியில் பணத்தை டெபாசிட்டும் செய்யலாம், எடுக்கவும் செய்யலாம்.
ADWM என்று பிரபலமாக அழைக்கப்படும் SBI பண டெபாசிட் இயந்திரம் ஒரு ATM இயந்திரம் போன்றதுதான். இதன் மூலம், ATM கம் டெபிட் கார்ட் வழியாக, உங்கள் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய முடியும். இந்த இயந்திரத்தின் மூலம், நீங்கள் வங்கிக்கு செல்லாமலேயே உங்கள் கணக்கில் பணத்தை போட முடியும். பரிவர்த்தனை ரசீது அதாவது டிரான்சாக்ஷன் ரெசிப்ட், உங்கள் புதுப்பிக்கப்பட்ட கணக்கு நிலுவையையும் வழங்குகிறது.
Why stand in ATM queue when you have ADWM to your rescue? Use our ADWM and withdraw cash quickly.#ADWM #CashWithdrawal #ATMTransaction #SBI #StateBankOfIndia pic.twitter.com/Ypb1RjxErz
— State Bank of India (@TheOfficialSBI) September 22, 2020
ALSO READ: நாளை முதல் மாற இருக்கும் 10 முக்கிய மாற்றங்கள்; இது உங்களை நேரடியாக பாதிக்கும்!!
வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்கவும் (Cash withdrawal) இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தலாம். அதை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
-உங்கள் வட்டாரத்தில் உள்ள SBI ADWM ஐக் கண்டறியவும்.
-உங்கள் டெபிட் கார்டையும் எடுத்துச் செல்லவும்.
-ADWM இல் டெபிட் கார்டைச் செருகி, 'banking’ ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.
-உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வுசெய்க.
-‘Next’ பொத்தானை அழுத்தவும்.
-உங்கள் ATM PIN எண்ணை உள்ளிடவும்.
-இப்போது அங்கிருக்கும் ஆப்ஷன்களில் இருந்து 'Cash Withdrawal’-ஐத் தேர்ந்தெடுக்கவும்.
-நீங்கள் எடுக்க விரும்பும் தொகையைத் தேர்ந்தெடுக்கவும்.
SBI-யின் தானியங்கி வைப்பு மற்றும் பணம் கொடுக்கும் இயந்திரம் உங்கள் பணத்தை அளிக்கும்.
ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கார்டு இல்லாத டெபாசிட்டுக்கு ரூ .49,900 என்றும், டெபிட் கார்டுகள் மூலம் ரூ .2 லட்சம் என்றும் வரம்பு உள்ளது என்பதை SBI ADWM இயந்திர பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டும். கணக்குக்கு PAN கார்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும் இன்றியமயாததாகும்.
ALSO READ: இனி டெபிட் கார்டு இல்லாமல் ATM-ல் பணம் எடுக்கலாம் - எப்படி தெரியுமா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR