புது டெல்லி: பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ (NSE) நிஃப்டி 50 குறியீடுகள் இன்றைய பிற்பகல் நிலவரப்படி பெரும் சரிவை கண்டுள்ளது. தனியார் துறை வங்கி பங்குகளில் கடுமையான அழுத்தம் ஏற்படுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து உலகளாவிய முதலீட்டாளர்களை பெரும் அச்சத்தில் ஆழ்தியுள்ளது.
சென்செக்ஸ் குறியீடு 1,966.04 புள்ளிகளாக சரிந்து 28,613.05 ஐ எட்டியது, மேலும் நிஃப்டி பெஞ்ச்மார்க் 560 புள்ளிகள் குறைந்து மூன்று ஆண்டுகளில் குறைந்த அளவை, அதாவது 8,407.05 ஆக இருந்தது. எச்.டி.எஃப்.சி, கோடக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank) மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை சென்செக்ஸில் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதுவரை இந்த ஆண்டில் நிஃப்டி 30 சதவீதமாகவும், சென்செக்ஸ் 29.38 சதவீதமாகவும் சரிந்தது.
இருப்பினும் வர்த்தகத்தின் போது சில சந்தைகளின் இழப்பு சில நிமிடங்களில் மீண்டன. பிற்பகல் 3:27 மணிக்கு, சென்செக்ஸ் 1,389 புள்ளிகள் அல்லது 4.54 சதவீதம் குறைந்து 29,190 ஆகவும், நிஃப்டி 407 புள்ளிகள் அல்லது 4.5 சதவீதம் சரிந்து 8,559 ஆகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையை பொறுத்த வரை 11 துறை அளவீடுகளும் குறைந்த வர்த்தகத்தில் இருந்தன, நிஃப்டி-யில் தனியார் வங்கி குறியீட்டில் 8 சதவீதத்திற்கும் அதிகமான சரிவு ஏற்பட்டது. இதில் வங்கி, நிதி சேவைகள், பொதுத்துறை நிறுவனம், ரியால்டி மற்றும் ஆட்டோ துறை குறியீடுகளும் தலா 4 முதல் 7 சதவீதம் வரை சரிந்தன.
பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள, இந்த வகையான வீழ்ச்சி மீண்டும் மீண்டு வர சுமார் 10-13 மாதங்கள் ஆகும்.
நிஃப்டி இழப்பில் இண்டஸ்இண்ட் வங்கி முதலிடம் பிடித்தது; இதன் பங்கு 32 சதவீதம் சரிந்து ரூ .409 ஆக இருந்தது. பாரதி இன்ஃப்ராடெல், பஜாஜ் நிதி, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பின்சர்வ், கோட்டக் மஹிந்திரா வங்கி, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகியவை 6-17 சதவீதம் சரிந்தன.
மறுபுறம், ஜீ என்டர்டெயின்மென்ட், ஐடிசி, யெஸ் பேங்க் மற்றும் டிசிஎஸ் ஆகியவை குறிப்பிடத்தக்க லாபத்தைப் பெற்றன.
மொத்த சந்தையில் பல வர்த்தகர்களுக்கு பெரும் ஏமாற்றம் இருந்தது. ஏனெனில் மும்பை பங்கு சந்தியில் 1,930 பங்குகள் வீழ்ச்சியடைந்தன. 335 பங்குகள் மட்டுமே முன்னேற்றம் கண்டன.