New Wage Code: சம்பள வர்க்கத்துக்கு சூப்பர் நியூஸ், EPF-ல் சேரும் 1 கோடி ரூபாய்

New Wage Code: ஊழியர்களின் டேக் ஹோம் சேலரி, பிஎஃப், கிராஜுவிட்டி ஆகியவற்றில் பெரிய மாற்றங்கள் இருக்கும். முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 30, 2022, 07:19 PM IST
  • புதிய ஊதியக் குறியீட்டில் நிறுவனத்திற்கான செலவு (CTC) பற்றி பல தரப்பட்ட விவாதங்கள் நடந்து வருகின்றன.
  • நாட்டில் விரைவில் நான்கு தொழிலாளர் குறியீடுகள் அமல்படுத்தப்படும்.
  • தற்போது 90 சதவீத மாநிலங்கள் வரைவு விதிகளை தயாரித்து விட்டன.
New Wage Code: சம்பள வர்க்கத்துக்கு சூப்பர் நியூஸ், EPF-ல் சேரும் 1 கோடி ரூபாய் title=

புதிய ஊதியக் குறியீடு: புதிய ஊதியக் குறியீட்டில் நிறுவனத்திற்கான செலவு (CTC) பற்றி பல தரப்பட்ட விவாதங்கள் நடந்து வருகின்றன. நாட்டில் விரைவில் நான்கு தொழிலாளர் குறியீடுகள் அமல்படுத்தப்படும். தற்போது 90 சதவீத மாநிலங்கள் வரைவு விதிகளை தயாரித்து விட்டன. 

2022-ம் ஆண்டில் புதிய ஊதியக் குறியீடு அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தொழிலாளர் அமைச்சகம் செய்துள்ளது. இது நடந்தால், அது தனியார் பணியாளர்களின் டேக் ஹோம் ஊதியம், அதாவது கையில் கிடைக்கும் சம்பளம், பிஎஃப் மற்றும் பணிக்கொடையை முற்றிலும் மாற்றிவிடும். நிபுணர்களின் கூற்றுப்படி, மாத சம்பளம் குறையும், ஆனால் இபிஎஃப்-இல் அதிக நிதி இருக்கும். இதன் மூலம் ஓய்வு காலத்தில் அதிக பணம் கிடைக்கும்.

புதிய ஊதியக் குறியீடு கணக்கீடு

புதிய ஊதிய சட்டத்தில் அடிப்படை சம்பளம் மாதம் 25 ஆயிரம் ரூபாயாக இருக்கும். அந்த கணக்கில் ஓய்வு பெறும்போது இபிஎஃப் தொகை ரூ.1,16,62,366 ஆக இருக்கும். இங்கு ஆண்டு அதிகரிப்பு 5 சதவீதமாக எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இபிஎஃப் நிதி மேலும் அதிகரிக்கும்.

new wage code

மேலும் படிக்க | New Wage Code:1 ஜூலை முதல் சம்பளம், வார விடுமுறை என அனைத்திலும் மாற்றம் 

புதிய ஊதியக் குறியீடு பிஎஃப் பலன்கள்: 

மாதச் சம்பளம் 50 ஆயிரம் ரூபாயாக இருந்தால் அடிப்படை ஊதியம் 15 ஆயிரம் ரூபாயாக இருக்கும். அப்போது ஓய்வு பெறும்போது பிஎஃப் தொகை ரூ.69,97,411 ஆக இருக்கும்.

New Wage Code likely to be implemented from july 1

புதிய ஊதியக் குறியீடு: காஸ்ட் டு கம்பனி 

CTC என்பது ஒரு நிறுவனம் தனது பணியாளருக்குச் செய்யும் செலவு ஆகும். இது பணியாளரின் முழுமையான சம்பள தொகுப்பு ஆகும். சிடிசி-யில் மாதாந்திர அடிப்படை ஊதியம், ரியம்பர்ஸ்மெண்ட் ஆகியவை அடங்கும். அதே நேரத்தில், பணிக்கொடை, வருடாந்திர வேரியபிள் ஊதியம், வருடாந்திர போனஸ் போன்றவை ஆண்டு அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. 

சிடிசி-இன் தொகையானது, பணியாளரின் டேக் ஹோம் சம்பளத்திற்கு சமமாக இருக்காது. சிடிசி பல கூறுகளைக் கொண்டுள்ளது, எனவே இது வேறுபட்டது. 

சிடிடி = மொத்த சம்பளம் + பிஎஃப் + பணிக்கொடை

அடிப்படை சம்பளம்

அடிப்படை சம்பளம் என்பது ஒரு ஊழியரின் அடிப்படை வருமானமாகும். இது ஊழியர்களின் மட்டத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பணியாளரின் பதவி மற்றும் அவர் பணிபுரியும் தொழிலுக்கு ஏற்ப மாறுபடும்.

மொத்த சம்பளம்

வரி விலக்கு இல்லாமல் அடிப்படை ஊதியம் மற்றும் அலவன்ஸ்களை சேர்த்து வழங்கப்படும் சம்பளம் மொத்த சம்பளம் எனப்படும். இதில் போனஸ், ஓவர் டைம் ஊதியம், விடுமுறை ஊதியம் மற்றும் பிற வகைப்பட்ட கொடுப்பனவுகள் அடங்கும்.

மொத்த சம்பளம் = அடிப்படை சம்பளம் + எஹ்ஆர்ஏ + மற்ற கொடுப்பனவுகள்

நிகர சம்பளம்

நிகர சம்பளம் டேக் ஹோம் சம்பளம் என்றும் அழைக்கப்படுகிறது. வரியைக் கழித்த பிறகு கிடைக்கும் சம்பளம் நிகர வருமானம் எனப்படும்.
நிகர சம்பளம் = அடிப்படை சம்பளம் + எஹ்ஆர்ஏ + கொடுப்பனவுகள் - வருமான வரி - இபிஎஃப் - தொழில்முறை வரி

என்ன கொடுப்பனவுகள் சேர்க்கப்பட்டுள்ளன

நிறுவனம் பணியாளருக்கு அவர்கள் செய்யும் வேலைக்குப் பதிலாக கொடுப்பனவுகளை வழங்குகிறது. இது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடலாம்.

- எஹ்ஆர்ஏ : வீட்டு வாடகை கொடுப்பனவு ஊழியருக்கு வாடகை வீட்டிற்கான செலவுக்காக வழங்கப்படுகிறது.

- எல்டிஏ: பயணப்படி என்பது பணியாளரின் உள்நாட்டுப் பயணச் செலவு ஆகும். இதில் உணவு, ஹோட்டல் கட்டணம் சேர்க்கப்படுவதில்லை.

- போக்குவரத்துக் கொடுப்பனவு: அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்லும் போது ஏற்படும் செலவுகளுக்காக பணியாளருக்கு போக்குவரத்துக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

- அகவிலைப்படி: டிஏ என்பது வாழ்க்கைப் படியாகும். இது பணவீக்கத்திற்கு ஏற்ப வருமானத்தை ஈடு செய்ய வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் இதற்கு தகுதியானவர்கள் ஆவர்.

- பிற கொடுப்பனவுகளில் சிறப்பு கொடுப்பனவு, மருத்துவ கொடுப்பனவு மற்றும் ஊக்கத்தொகை எனப்படும் இன்செண்டிவ் ஆகியவை அடங்கும்.

வேறு என்ன சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளன

நிபுணர்களின் கூற்றுப்படி, பல நிறுவனங்களில் பணியாளர்களின் சிகிச்சை, தொலைபேசி செலவுகள், செய்தித்தாள் பில் ஆகியவற்றைப் பணியாளருக்கு திருப்பிச் செலுத்துவதற்கான ஏற்பாடு உள்ளது. இந்த தொகை சம்பளத்தைத் தவிர தனித்தனியாக கிடைக்கும். எனினும், இவற்றுக்கான ரசீதுகளை செலுத்தியே இவற்றை பெற முடியும். வருமான வரிச் சட்டத்தின் கீழ், ஒவ்வொரு ரீயெம்பர்ஸ்மெண்டுக்கும் ஒரு வரம்பு வரை வரிவிலக்கு உண்டு.

மேலும் படிக்க | New Wage Code: ஜூலை 1 முதல் புதிய சட்டம் அமல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News