இந்த ஊரடங்கு காலத்தில் தனது பயனர்களுக்கு சில அத்தியாவசிய விஷயங்களை கண்டறிய உதவும் புதிய அம்சங்களுடன் Google Pay app அதாவது கூகுள் பண பரிமாற்ற செயலி...!
கோவிட் -19 பரவலுக்கு எதிராக இந்தியா போராடிக் கொண்டிருக்கும் வேளையில், Google Pay-ல் புதிய ஆப்ஷன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பயனர்கள் சமூக தொலைதூரத்தை கவனதில் கொள்ளும்போது அவர்களின் வாழ்க்கை எளிதாகிறது.
கூகிள் பேவில் சேர்க்கப்பட்ட புதிய அம்சத்தின் மூலம், பயனர்கள் வசிக்கும் பகுதியில் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் கடைகள் எவையெவை, அந்த வட்டாரத்தில் திறந்திருக்கும் கடைகள் எவை என்பதைஎல்லாம் தெரிந்து கொள்ள உதவும். இந்த வசதி தற்போது இந்தியாவின் 35 நகரங்களில் கிடைக்கிறது.
கூகிள் பே ஒரு அறிக்கையில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துவது குறித்து தகவல் அளித்தது. "கூகிள் ஸ்டோரில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த அம்சத்தின் மூலம் அருகிலுள்ள ஸ்டோர்ஸ், மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் கடைகள் எவை , மேலும் அருகிலேயே திறந்துள்ள உள்ள கடைகள் எவை, என்பது போன்ற விவரங்களை எல்லாம் பயனர்கள் தெரிந்து கொள்ள முடியும். முன்னதாக ஒரு சில நகரங்களில் மட்டுமே இந்த அம்சங்கள் பயனில் இருந்தன. ஆனால் இப்போது இந்தியா முழுவதும், உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 35 நகரங்களில் இந்த வசதிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கூடுதலாக, வணிக நிறுவனங்கள் இப்போது தங்கள் வணிக நேரங்களையும் அதில் குறிப்பிடலாம். கடைகளில் சமூக இடைவெளிகளை பின்பற்றும் நடவடிக்கைகள் உள்ளனவா என்ற தகவல், மற்றும் தற்போது அத்தியாவசியப் பொருட்கள் இருப்பில் உள்ளனவா என்ற தகவல்களையும் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். இதோடு மட்டுமல்லாமல், மும்பையில் உள்ள பயனர்கள், தாங்கள்தேர்ந்தெடுக்கும் கடை கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருக்கிறதா என்பதை கூட தெரிந்து கொள்ள முடியும்.
நாடு முழுவதும் உள்ள பயனர்கள் தங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஹெச்பி கேஸ், பாரத் பெட்ரோலியம் அல்லது இண்டேன் ஆகியவற்றிற்கு , இதன் மூலமே முன்பதிவு செய்து கூகிள் பே பயன்பாட்டின் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யலாம் . இந்த மூன்று நிறுவனத்தின் சேவைகளையும் இப்போது Google Pay இன் அனைத்து பயனர்களுக்கும் நேரடியாக பெற முடியும்.
இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான மொபைல் பயனர்கள் டிஜிட்டல் முறையில் தொகையை செலுத்த கூகிள் பே உதவுகிறது.அதில் மொபைல் ரீசார்ஜ் பில்லுக்கு பணம் செலுத்துதல் , ஒருவருக்கொருவர் பணம் கொடுக்கல் வாங்கல் செய்பவர்கள் , மற்றும் வணிகர்களின் பண பரிமாற்றங்கள் போன்ற கட்டணத் தேவைகளின் சேவைகளை ஒருங்கிகிணைந்த சேவையாக google pay app ல் கிடக்கிறது. கோவிட் -19
போராட்ட முயற்சிகளுக்கு உதவியாக, கூகிள் பே, கொரோனா வைரஸ் பாதித்த இடத்தை கண்டறியும் ஸ்பாட் வசதியும் அறிமுகப் படுத்தியுள்ளது. இது பயனர்களுக்கு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய, உத்தியோகபூர்வ பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வழங்குகிறது. மேலும் நிவாரணப் பணிகளை ஆதரிப்பதற்காக நன்கொடைகளை ஏற்றுக்கொள்ளும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கூகிள் பே அம்சம் அறிமுகப்படுத்தப்பட்ட 35 நகரங்களின் பட்டியலில் வாரணாசி, லக்னோ, காஜியாபாத், பிரயாக் ராஜ், கான்பூர், நொய்டா மற்றும் உத்திர பிரதேசத்தில் கிரேட்டர் நொய்டா, பீகாரில் பாட்னா, லூதியானா, பஞ்சாபில் சாஹிப்சாதா அஜித் சிங் நகர் மற்றும் மும்பை, நாக்பூர், நவி மும்பை, மகாராஷ்டிராவில் பிம்ப்ரி-சின்ச்வாட். ஆகியவை இடம் பெற்றுள்ளன.
-(மொழியாக்கம்) வானதி கிரிராஜ்.