National Pension Scheme: தேசிய ஓய்வூதிய அமைப்பு என்பது அரசாங்கம் மூலம் நடத்தப்படும் ஓய்வூதியத் திட்டமாகும். இந்த திட்டத்தில் அரசாங்கம் ஓய்வூதியதாரர்களுக்கு நன்மை அளிக்கும் கூடுதல் அம்சங்களையும் பலன்களையும் சேர்த்து வருவதால், இந்த சேமிப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டம் நாளுக்கு நாள் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது. இந்த திட்டம் சந்தையுடன் இணைக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட பங்களிப்பு திட்டமாக உள்ளது. இது சந்தாதாரர்கள் ஓய்வூதியத்திற்காக சேமிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய ஓய்வூதிய அமைப்பு
துவக்கத்தில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய சேமிப்பின் ஒரு பகுதியாகவும், பணி ஓய்வுக்குப் பிந்தைய காலத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மக்களின் சேமிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காகவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. எனினும், மே 2009 முதல், NPS திட்டம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் விரிவிபடுத்தப்பட்டது.
- பெரிய அளவில் ஓய்வூதிய நிதியை உருவாக்க எண்ணும் நபர்களுக்கு தேசிய ஓய்வூதிய அமைப்பு குறைந்த செலவு கொண்ட முதலீட்டு வசதியாக பார்க்கப்படௌகிறது.
- NPS இல் வருமான வரியின் பிரிவு 80C இன் கீழ், ஒரு நிதியாண்டில் ரூ. 1.5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு வரி விலக்கும் கிடைக்கின்றது. இது தவிர,
- பிரிவு 80CCD (1B) இன் கீழ், ரூ. 50,000 வரையிலான வருடாந்திர முதலீட்டுக்கு இதில் வரிவிலக்கும் கிடைக்கின்றது.
- மொத்தத்தில் என்பிஎஸ்-ல் முதலீடு செய்வதன் மூலம், என்பிஎஸ் உறுப்பினர்கள் (NPS Members) ஒரு வருடத்தில் ரூ.2 லட்சம் வரை வரிவிலக்கு பெறலாம்.
பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பணத்தின் மதிப்பும் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் மாத ஓய்வூதியமான மட்டும் 1 லட்சம் ரூபாய் கிடைத்தால் எப்படி இருக்கும்? இது சாத்தியமா என்ற கெள்வி மனதில் தோன்றலாம். என்பிஎஸ் சந்தாதாரர்களுக்கு (NPS Subscribers) இது சாத்தியமே. மாத ஓய்வூதியமான 1 லட்சம் ரூபாய் கிடைக்க, மாதா மாதம் எவ்வளவு டெபாசிட் செய்ய வேண்டும்? அதை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
ரூ. 1 லட்சம் ஓய்வூதியம் பெறுவதற்கான முழுமையான முதலீட்டு கணக்கீட்டை இங்கே காணலாம்:
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒருவர் 30 வயதில் NPS திட்டத்தில் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் முதலீடு செய்யத் தொடங்கினார் என்று வைத்துக்கொள்வோம். அவரது முதலீட்டில் கிடைக்கும் வட்டி வருமானம் ஆண்டுக்கு 10 சதவீதம் என மதிப்பிடப்பட்டால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த ஓய்வூதியத் தொகை அவரது கணக்கில் ரூ.2.28 கோடியாக இருக்கும்.
NPS இல் முதலீடு செய்யத் தொடங்கும் வயது: 30 ஆண்டுகள்
என்பிஎஸ்-ல் மாதாந்திர முதலீடு: ரூ.10 ஆயிரம்
30 ஆண்டுகளில் மொத்தமாக முதலீடு செய்யும் தொகை: ரூ.36 லட்சம்
முதலீட்டின் மூலம் கிடைக்க்கும் மதிப்பிடப்பட்ட வருமானம்: ஆண்டுக்கு 10 சதவீதம்
30 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த கார்பஸ் தொகை: ரூ 2,27,93,253 (2.28 கோடி)
ஆனுவிட்டியில் குறைந்தபட்சம் 40 சதவிகிதம் முதலீடு செய்வது அவசியம். இங்கு 55 சதவீதமாக கணக்கிட்டுள்ளோம்.
வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்யும் தொகை: 55 சதவீதம்
வருடாந்திர வருமானம்: 10 சதவீதம்
மொத்தத் தொகையின் மதிப்பு: ரூ. 1,02,56,964 (1.02 கோடி)
மாதாந்திர ஓய்வூதியம்: ரூ 1,04,469 (ரூ 1 லட்சம்)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ