ZEEL மற்றும் NCLT ஆணை குறித்து பரவும் போலி மீடியா அறிக்கைகள்: உண்மை விவரம் இதோ

ZEEL இஜிஎம் தொடர்பான என்சிஎல்டி ஆர்டரைப் பற்றி தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்திகள், சரியான விவரங்களோ அல்லது உண்மையோ இல்லாதவை. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 30, 2021, 10:19 PM IST
ZEEL மற்றும் NCLT ஆணை குறித்து பரவும் போலி மீடியா அறிக்கைகள்: உண்மை விவரம் இதோ title=

ZEEL குறித்த NCLT ஆர்டர் பற்றி பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் ஆதாரமற்றவை. ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) இஜிஎம் தொடர்பான என்சிஎல்டி ஆர்டரைப் பற்றி தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்திகள், சரியான விவரங்களோ அல்லது உண்மையோ இல்லாதவை. 

ZEEL EGM தொடர்பாக NCLT எந்த ஒரு உத்தரவையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தகது. 

என்சிஎல்டி விசாரணை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்ட ZEEL செய்தித் தொடர்பாளர், "இந்த விவகாரம் தொடர்பாக, நிறுவனத்தின் போர்ட், அதற்காக ஒதுக்கப்பட்ட சட்டபூர்வமான நேரத்தில் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. என்சிஎல்டியின் அடுத்த விசாரணை 2021 அக்டோபர் 4 ஆம் தேதி நடக்கவுள்ளது. நிறுவனம் பங்குதாரர்களின் நலன் மற்றும் சட்டப்படி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும்" என்று கூறினார். 

சமீபத்தில், ZEEL, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியாவுடன் தனது மெகா இணைப்பை அறிவித்தது.

இணைக்கப்பட்ட நிறுவனத்தில், SPNI இன் தாய் நிறுவனமான சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் 1.575 பில்லியன் அமெரிக்க டாலர்களை தன் பங்கிலிருந்து அளிக்கும். இது இந்தியாவில் பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருக்கும்.

ZEE என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) இயக்குநர்கள் குழு, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI) & ZEEL ஆகியவற்றுடன் இணைவதற்கு ஏகமனதாக ஒப்புதல் அளித்தது. ZEEL-SPNI மெகா இணைப்பு ஒப்பந்தம், பங்குதாரர்களுக்கு மிகவும் இலாபகரமான ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது.

நிதி அளவுருக்களில் மட்டுமல்ல, மூலோபாய மதிப்பிலும் இரு தரப்பினரும் அதிக லாபகரமான மற்றும் ஒருவருக்கொருவர் சாதகமான அம்சங்களை பகிர்ந்துகொள்வார்கள். 

LSO READ: ZEEL போர்டில் மாற்றம் செய்ய வேண்டும் என இன்வெஸ்கோ அடம் பிடிக்கும் காரணம் என்ன

காண்டெண்ட் உருவாக்கத்தில் ZEEL இன் வலுவான நிபுணத்துவம் மற்றும் கடந்த 3 தசாப்தங்களில் உருவாக்கப்பட்ட அதன் ஆழ்ந்த நுகர்வோர் இணைப்பு, பொழுதுபோக்கு அம்சங்களில் (கேமிங் மற்றும் விளையாட்டு உட்பட) SPNI-க்கு உள்ள வெற்றிகரமான அனுபவம் ஆகியவை, இணைக்கப்பட்ட நிறுவனம் மற்றும் அதன் மேலாண்மை குழுவுக்கு மகத்தான மதிப்பை சேர்க்கும். இதன் மூலம் பங்குதாரர்களின் மதிப்பு பன்மடங்கு அதிகரிக்கும்.

பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த நிபுணத்துவம் கொண்ட மிகவும் திறமையான நிபுணர்களின் உதவியுடன், அனைத்து பங்குதாரர்கள் மற்றும் நிறுவனத்தின் சிறந்த நலன்கள் எப்போதும் மனதில் வைக்கப்படுகிறது.

 ஒன்றிணைக்கப்பட்ட நிறுவனத்தின் மதிப்பு மற்றும் இரண்டு கூட்டு நிறுவனங்களுக்கிடையில் உள்ள மகத்தான ஒருங்கிணைப்புகள் வணிக வளர்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அதன் எதிர்கால வெற்றிகளில் பங்குதாரர்கள் பயனடையவும் உதவும்.
 
சட்ட மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின்படி, தேவையான கட்டத்தில், நிறுவனத்தின் மதிப்பிற்குரிய பங்குதாரர்களுக்கு அவர்களின் ஒப்புதலுக்காக முன்மொழிவு வழங்கப்படும்
 
இந்த பெரிய பெருநிறுவன வளர்ச்சியுடன், இணைக்கப்பட்ட நிறுவனம் விரைவான வளர்ச்சியையும் அதன் அனைத்து பங்குதாரர்களுக்கும் மிகப்பெரிய மதிப்பை உருவாக்கும் குறிப்பிடத்தக்க வாய்ப்பையும் ஏற்படுத்தும்.

ALSO READ: ZEEL-Sony Merger: இணையும் இரு மீடியா ஜாம்பவான்கள், முக்கிய அம்சங்கள் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News