Lok Sabha Election 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த தேர்தல் தேதிகள் தற்போது வெளியாகி உள்ளன. மொத்தம் ஏழு கட்டமாக இந்தியாவில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பின் போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது, இந்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தல் பல வகையில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இந்தியா போன்ற மிகப்பெரிய பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொது தேர்தலை நடத்துவது பெரிய சவாலான விஷயம். இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பணம் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்த நிச்சயம் அனுமதிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைத்தும் விஷயங்களும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க | அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்! வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?
இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடைபெற தேர்தல்களில் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான புதிய வழிகளை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்துள்ளது எனவும், அதன் படியும் இனி கண்காணிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். ஓட்டிற்கு பணம் கொடுக்கப்பட்டால் தேர்தல் ஆணையத்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறி உள்ளார். மேலும் பேசிய தேர்தல் ஆணையர், தேர்தலின் போது பெரியது மட்டும் இல்லாமல் சிறிய பண பரிவர்த்தனைகளை கண்காணிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறு சிறு ஆன்லைன் பரிவர்த்தனைகளையும் தேர்தல் முடியும் வரை வங்கிகள் கண்காணிக்கும். ஒரு வங்கி கணக்கில் இருந்து 1000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகள் அதிகமாக கண்காணிக்கப்படும் என்று கூறியுள்ளார். ஒருவரது வங்கி கணக்கில் இருந்து சந்தேகப்படும் படி ரூ.1000 அல்லது ரூ.2000 அனுப்பினால் தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொள்ளும்.
தேர்தல் சமயங்களில் பல முறைகேடுகள் நடந்திருப்பது நிறைய முறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் நேரத்தில் அதிகமான பணம் தேர்தல் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு இதனை தடுக்க தேர்தல் ஆணையம் முழு வீச்சில் இறங்கி உள்ளது. தேர்தல் நடவடிக்கைகளின் போது பரிவர்த்தனைகளை கண்காணிக்க ஒவ்வொரு வங்கியும் பல முறைகளை பின்பற்றப்படுகின்றன. வங்கிகள் தேர்தல் முடியும் வரை அனைத்து பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கும். சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை அடையாளம் காண புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதிக அளவிலான பரிவர்த்தனைகள், வழக்கத்திற்கு மாறான பரிவர்த்தனை ஆகியவை இதில் அடங்கும்.
இவை தவிர பரிவர்த்தனை வரம்பும் தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகளின் உதவியுடன் தேர்தல் ஆணையமும் வங்கி கணக்குகளை கண்காணித்து வருகிறது. இதுமட்டுமின்றி, சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை தணிக்கை செய்யவும் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற சந்தேகத்திற்கிடமான தேர்தல் நடவடிக்கைகள் குறித்து வங்கி மற்றும் தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஊக்க தொகை வழங்கவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தல் முடியும் வரை பெரிய பரிவர்த்தனை ஏதேனும் நடந்தால், அது தொடர்பான விசாரணை நடந்த முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பண பரிமாற்ற வரம்பு
இது தவிர தேர்தல்களின் போது வங்கியில் இருந்து அளவுக்கு அதிகமாக மேல் பணத்தை எடுத்தாலோ அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்தாலோ அந்த குறிப்பிட்ட வாடிக்கையாளரை பற்றிய விவரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும். இதன் மூலம், முறையான கணக்கு வைத்திருப்பவர்களால் பரிவர்த்தனைகள் நடைபெறுகிறதா இல்லையா என்பது உறுதி செய்யப்படும். ஒருவேளை தவறு நடைபெற்று இருந்தால் தண்டனை கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ