Loan Moratorium News: Good News- இந்த தேதிக்குள் கணக்கில் தொகை செலுத்தப்படும்!!

வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு உதவுவதற்காக 2020 மார்ச் 1 முதல் ஆறு மாதங்களுக்கு கடனை திருப்பிச் செலுத்துவதற்கான தடையை ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 28, 2020, 11:14 AM IST
  • அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களும் திட்டத்தின் விதிகளால் வழிநடத்தப்படும்.
  • நவம்பர் 5 ஆம் தேதிக்குள் கடன் வாங்கியவர்களின் கணக்குகளில் பணம் செலுத்தப்படும்.
  • வீட்டுக் கடன்கள், கல்வி கடன்கள், கிரெடிட் கார்டு பாக்கிகள், வாகன கடன்கள், MSME கடன்கள் ஆகியவை இதில் அடங்கும்.
Loan Moratorium News: Good News- இந்த தேதிக்குள் கணக்கில் தொகை செலுத்தப்படும்!! title=

தொற்றுநோய்களுக்கு மத்தியில் மோடி அரசிடமிருந்து கடன் வாங்கியவர்களுக்கு பெரிய பண நிவாரணம் கிடைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank) ரூ .2 கோடி வரையிலான கடன்களுக்கான வட்டிக்கு வட்டி திட்டத்திற்கான தொகை வித்தியாசத்தை செலுத்துவதற்கான மத்திய அரசின் திட்டத்தை அறிவித்துள்ளது.

2020 மார்ச் 1 முதல் தொடங்கிய ஆறு மாத கால அவகாச காலத்திற்கு ரூ .2 கோடி வரையிலான கடன்களுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ததை அமல்படுத்துமாறு வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களையும் ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டது.

“அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களும் திட்டத்தின் விதிகளால் வழிநடத்தப்படவும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தேவையான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்படுகின்றன” என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

ALSO READ:Diwali gift: 2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி

இந்த தேதிக்கு முன் தொகை செலுத்தப்பட வேண்டும்

-நவம்பர் 5 ஆம் தேதிக்குள் கடன் வாங்கியவர்களின் கணக்குகளில் பணம் செலுத்தும் பணியை முடிக்குமாறு கடன் வழங்கும் நிறுவனங்களை மத்திய அரசாங்கம் (Central Gevernment) கேட்டுக் கொண்டது.

- திட்டத்தின் படி, மார்ச் 27, 2020 அன்று ரிசர்வ் வங்கியால், கடன் வாங்கியவர் கடன் திருப்பிச் செலுத்துவதில் அளிக்கப்பட்ட சலுகையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பயன்படுத்தியிருந்தாலும், அதைப் பற்றி பொருட்படுத்தாமல், குறிப்பிட்ட காலத்திற்கான கூட்டு வரி மற்றும் தனி வரியின் வித்தியாசத் தொகையை, கடன் வழங்கும் நிறுவனங்கள் அந்தந்த கணக்குகளில் செலுத்த வேண்டும்.

- தொகையை வரவு வைத்த பிறகு கடன் வழங்கும் நிறுவனங்கள் மத்திய அரசிடமிருந்து தொகையை திரும்பப் பெறலாம்.

-அக்டோபர் 23 ஆம் தேதி, குறிப்பிட்ட கடன் கணக்குகளில் கடன் வாங்கியவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு கூட்டு வட்டி மற்றும் தனி வட்டிக்கு இடையிலான வேறுபாட்டை எக்ஸ்-கிராஷியா செலுத்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் அறிவித்தது.

யார் இதை பெற தகுதியானவர்கள்?

-வீட்டுக் கடன்கள் (Home Loan), கல்வி கடன்கள், கிரெடிட் கார்டு பாக்கிகள், வாகன கடன்கள், MSME கடன்கள், நுகர்வோர் நீடித்த கடன்கள் மற்றும் நுகர்வு கடன்கள் ஆகிய கடன்களைப் பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் வருவார்கள்.

- தடைக்காலத் திட்டத்தை உபயோகிக்காத மற்றும் கடன்களைத் தொடர்ந்து திருப்பிச் செலுத்தியவர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.

வழக்கமான வணிக நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்டதால் உருவான நிதி சிக்கல்களிலிருந்து சிறிது நிவாரணம் அளிக்க, வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு உதவுவதற்காக 2020 மார்ச் 1 முதல் ஆறு மாதங்களுக்கு கடனை திருப்பிச் செலுத்துவதற்கான தடையை ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

ALSO READ: Loan Moratorium: கடன் தவணை சலுகையில் வட்டிக்கு வட்டி செலுத்துவதிலிருந்து விலக்கு..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News