இந்தியாவில் ஜம்மு காஷ்மீரில் லித்தியம் புதையல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 5.9 மில்லியன் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், எதிர்காலத்தில் லத்தியம் மூலப் பொருட்களுக்காக வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. எலக்டிரிக் கார் மற்றும் பேட்டரி தயாரிப்புக்கு லித்தியம் தேவை. அதுவும் எலக்டிரிக் கார்கள் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் லித்தியத்தின் தேவை என்பது இப்போது இருப்பதை விட பன்மடங்கு அதிகரித்துவிடும். இந்தியாவைப் பொறுத்தவரை இப்போதைய சூழலில் லித்தியம் பேட்டரிகள் அனைத்தும் சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
மேலும் படிக்க | லித்தியம் சுரங்கம்: ஜம்மு காஷ்மீரை சூழப்போகும் ராணுவ மற்றும் சூழலியல் பேராபத்துகள்
ஆனால், எலக்டிரிக் வாகனங்கள் பயன்பாடு இந்தியாவில் பெருமளவு அதிகரிக்கும்போது அந்த நாடுகளில் பேட்டரி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அப்போது மற்ற நாடுகளை சார்ந்திருக்காமல் இந்தியாவிலேயே லித்தியம் பேட்டரி தயாரிக்க வேண்டிய சூழல் உருவாகும். அதற்கு தயாராக வேண்டும் என்ற முனைப்பில் இந்தியாவில் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மூலம் லித்தியம் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் லித்தியம் படிமம் இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த சூழலில், ஜம்மு காஷ்மீரில் ஒரே இடத்தில் 5.9 மில்லியன் டன் லித்தியம் படிமம் இருப்பதை ஆய்வாளர்கள் அண்மையில் உறுதி செய்தனர். இந்த கண்டுபிடிப்பு இந்திய ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய தாக்கத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் லித்தியம் படிமத்தை பிரித்தெடுப்பதில் உலக நாடுகள் 60 விழுக்காடு சீனாவையே சார்ந்திருக்கின்றன. அங்கு ஏற்கனவே லித்தியம் படிமத்தை பிரித்தெடுப்பதற்கான மிகப்பெரிய அளவிலான கட்டமைப்புகள் இருக்கின்றன. இந்தியா உள்ளிட்ட உலகில் எந்தவொரு நாட்டிடமும் இத்தகைய கட்டமைப்புகள் இல்லை. இனி வரும் காலத்தில் மேற்கொள்ளப்பட்டாலும், சீனா ஒரு படி எப்போதும் முன்னால் இருக்கும். ஆனால், சீனாவிடமே கூட உலகிலேயே அதிகளவிலான லித்தியம் இல்லை. இப்போது வரை மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வுகளின்படி, உலகிலேயே பொலிவியா நாட்டில் அதிகளவு லித்தியம் உள்ளது. அந்நாட்டில் 21 மில்லியன் டன் லித்தியம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
20 மில்லியன் லித்தியம் அர்ஜெண்டினாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 3வது இடத்தில் 12 மில்லியன் லித்தியத்துடன் அமெரிக்கா உள்ளது. 11 மில்லியன் லித்தியத்துடன் சிலி 4வது இடத்திலும், 7.9 மில்லியன் லித்தியம் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா 5வது இடத்திலும், 6.8 மில்லியன் கொண்டிருக்கும் சீனா 6வது இடத்திலும், 7வது இடத்தில் 5.9 மில்லியன் லித்தியத்துடன் இந்தியாவும் இருக்கின்றன.
மேலும் படிக்க | லித்தியம் அதிகம் இருக்கும் டாப் 5 நாடுகள்
மேலும் படிக்க | ’லித்தியம் புதையல்’ ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிப்பு..! 5.9 மில்லியன் டன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ