LIC Plan: ஒருமுறை முதலீடு செய்தால் போதும்! வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம்!

எல்ஐசி-ன் சாரல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பாலிசிதாரர் ஒரு முறை மட்டும் பிரீமியத்தை செலுத்தி வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளலாம்.  

Written by - RK Spark | Last Updated : Sep 4, 2022, 06:21 AM IST
  • எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தின் பெயர் சாரல் ஓய்வூதியத் திட்டமாகும்.
  • ஒரு முறை மட்டும் பிரீமியத்தை செலுத்தி வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளலாம்.
  • இந்த திட்டத்தில் பாலிசிதாரருக்கு இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகிறது.
LIC Plan: ஒருமுறை முதலீடு செய்தால் போதும்! வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம்! title=

இந்தியாவில் பலரும் நம்பிக்கையுடன் முதலீடு செய்யும் நிறுவனங்களில் ஒன்று எல்ஐசி, தற்போது இது மக்களுக்கு ஒரு சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.  இது ஒரு உடனடி வருடாந்திரத் திட்டமாகும், அதாவது பாலிசி எடுத்தவுடனேயே பாலிசிதாரரின் ஓய்வூதியம் தொடங்கும்.  ஓய்வூதியம் பெறுபவர் அவர்களின் விருப்பத்தின் பேரில் ஒவ்வொரு மாதமும், காலாண்டு, அரையாண்டு அல்லது வருடத்திற்கு ஒருமுறை ஓய்வூதியம் பெறலாம்.  எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தின் பெயர் சாரல் ஓய்வூதியத் திட்டமாகும், இது இணைக்கப்படாத ஒற்றை பிரீமியமாகும்.  இந்த திட்டத்தின் கீழ் பாலிசிதாரர் ஒரு முறை மட்டும் பிரீமியத்தை செலுத்தி வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் திட்டம் குறித்து எல்ஐசி நிறுவனம் தரப்பில் கூறுகையில், சாரல் ஓய்வூதியத் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளது.  இந்த திட்டத்தில் பாலிசிதாரருக்கு இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகிறது, அவர்கள் தனக்கு தேவையான ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.  மேலும் இதில் நீங்கள் பாலிசி எடுத்த நாளிலிருந்து ஆறு  மாதங்களுக்குப் பிறகு கடன் வேண்டுமென்றால் பெற்றுக்கொள்ளலாம்.  இந்த திட்டத்தில் கிடைக்கப்பெறும் முதல் ஆப்ஷன் சிங்கிள் லைஃப்க்கானது, பாலிசிதாரர் எடுத்த ஓய்வூதியம் அவரது கணவன் அல்லது மனைவியுடன் இணைக்கப்படும்.  ஓய்வூதியம் பெறுபவர் உயிருடன் இருக்கும் வரை, அவர் தொடர்ந்து அந்த ஓய்வூதிய தொகையை பெற்றுக்கொள்வார், அவர் இறந்த பிறகு பாலிசி எடுப்பதற்காக செலுத்தப்பட்ட அடிப்படை பிரீமியம் அவரது நாமினிக்கு திருப்பி கொடுக்கப்படும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ், இந்த தேதியில் அறிவிப்பு

இந்த திட்டத்தின் இரண்டாவது ஆப்ஷன் ஜாயிண்ட் லைஃப்க்கானது, இதில் கணவன் மனைவி இருவருக்கும் ஓய்வூதியம் இணைக்கப்பட்டுள்ளது.  இதில் கணவன், மனைவி யார் உயிருடனும் இருந்தாலும் ஓய்வூதியம் கடைசி வரை கிடைக்கும், ஒருவர் உயிருடன் இருக்கும்போது எவ்வளவு ஓய்வூதியம் பெறுவார்களோ, அதே ஓய்வூதியத் தொகை அவர்களில் ஒருவரின் மரணத்திற்குப் பிறகும் உயிருடன் இருக்கும் மற்றொரு துணைக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.  இரண்டாவது ஓய்வூதியம் பெறுபவரும் இறந்த பிறகு பாலிசி எடுக்கும்போது யாரை நாமினியாக போட்டார்களா அவர்களுக்கு அந்த தொகை கிடைக்கும்.

நீங்கள் இந்த திட்டத்தை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக எடுத்துக்கொள்ளலாம், www.licindia.in என்ற இணையதளத்தில் நீங்கள் இதனை பார்க்கலாம்.  இந்த திட்டத்தில் குறைந்தபட்ச ஆன்யூட்டி ஆண்டுக்கு ரூ.12,000 ஆகும், அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை.  40 வயது முதல் 80 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தை வாங்கலாம், மாதந்தோறும் ஓய்வூதியத்தை பெற விரும்புபவர்கள் மாதம் குறைந்தது ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.  காலாண்டு ஓய்வூதியம் பெற விரும்புபவர் மாதத்தில் குறைந்தது ரூ.3000 முதலீடு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | 7வது ஊதியக் குழு பரிந்துரை குறித்த வழக்கு செப்டம்பர் 26ம் தேதிக்கு ஒத்தி வைப்பு! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News