LIC Jeevan Azad Plan: ரூ. 25,000 முதலீடு செய்து ரூ. 5,00,000 திரும்ப பெறலாம்!

LIC Jeevan Azad Plan: எல்ஐசி ஜீவன் ஆசாத் திட்டம் குறைந்தபட்சம் 2 பிரீமியங்களை முழுமையாக செலுத்தலாம் மற்றும் பாலிசியை 2 ஆண்டுகளுக்குப் பிறகு சரண்டர் செய்யலாம்.  

Written by - RK Spark | Last Updated : Jan 24, 2023, 10:03 AM IST
  • எல்ஐசி வழங்கும் ஜீவன் ஆசாத் 868 திட்டம்.
  • பாலிசிதாரர்களுக்கு ரூ.3 லட்சம் வரை காப்பீடு பாலிசி.
  • குறைந்தபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சம் ஆகும்.
LIC Jeevan Azad Plan: ரூ. 25,000 முதலீடு செய்து ரூ. 5,00,000 திரும்ப பெறலாம்! title=

LIC Jeevan Azad Plan: இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம்  தனிநபர் சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீட்டை இலக்காகக் கொண்ட ஜீவன் ஆசாத் என்ற புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.  எல்ஐசி வழங்கும் ஜீவன் ஆசாத் 868 திட்டம் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேமிப்புகளை வழங்கி வருகிறது.  எல்ஐசி ஜீவன் ஆசாத் என்பது பங்குபெறாத, இணைக்கப்படாத, தனிநபர், சேமிப்பு ஆயுள் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரீமியம் எண்டோவ்மென்ட் திட்டமாகும்.  இந்த திட்டத்தில் பிரீமியம் செலுத்தும் காலம் பாலிசி காலத்தை விட 8 ஆண்டுகள் குறைவாக இருக்கும்.  பாலிசி காலத்தின் போது பாலிசிதாரர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டால் அவரது குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்படும்.  இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும்போது உங்களுக்கு கடன் வசதியும் கிடைக்கிறது.  பாலிசிதாரர்களுக்கு ரூ.3 லட்சம் வரை மருத்துவம் அல்லாத காப்பீடு பாலிசி வழங்கப்படுகிறது. 

மேலும் படிக்க | திருப்பதி செல்லும் பக்தர்கள் இதை தெரிஞ்சுக்காம போகாதீங்க..! கட்டணங்கள் உயர்வு

எல்ஐசி ஜீவன் ஆசாத் திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சம் ஆகும்.  அதே சமயம் அதிகபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை 15 முதல் 20 ஆண்டு பாலிசி காலக்கெடுவுடன் சேர்க்கப்படும்.  எல்ஐசி ஜீவன் ஆசாத் திட்டத்தில் குறைந்தபட்ச வயது 90 நாட்கள் மற்றும் அதிகபட்ச வயது 50 ஆகும்.  ஆண்டு, அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர இடைவெளியில் நீங்கள் பிரீமியத்தை செலுத்தலாம்.  குறைந்தபட்சம் 2 பிரீமியங்களை முழுமையாக செலுத்தலாம் மற்றும் பாலிசியை 2 ஆண்டுகளுக்குப் பிறகு சரண்டர் செய்யலாம்.  மேலும் நீங்கள் பிரீமியம் செலுத்திய 2 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு இந்த திட்டத்தில் கடன் வசதி வழங்கப்படும். 

எடுத்துக்காட்டாக ஒரு பாலிசிதாரர் 12 வருடங்கள் மற்றும் பாலிசி காலம் முடிந்த பிறகு ஒவ்வொரு வருடமும் முதல் ஆண்டில் ரூ.25,120 மற்றும் இரண்டாம் ஆண்டில் ரூ.24,578 பிரீமியம் செலுத்த வேண்டும்.  மொத்த பிரீமியம் 2,95,478 ஆக செலுத்தப்படும் மற்றும் இந்த திட்டத்தில் உங்களுக்கு முதிர்வு தொகையாக ரூ.5,000,000 கிடைக்கும்.

மேலும் படிக்க | இந்த 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News