Gold Price Today: தொடர்ந்து எகிறும் தங்கம் விலை.. விலை குறையும் வாய்ப்பு உள்ளதா..!!!

தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாகவே  ஏற்ற தாழ்வு காணப்படுகிறது, மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையும், முதலீட்டாளர்களைப் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 30, 2021, 05:10 PM IST
  • தங்கத்தின் மீதான முதலீடுகள் காரணமாக தங்கம் விலையில்தொடர்ந்து மாற்றம் காணப்படும்.
  • ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சென்னையில் கிராமுக்கு 17 ரூபாய் அதிகரித்தது.
  • டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடந்த 5 நாட்களாக 73.14 ரூபாயில் இருந்து 72.86 ரூபாய் என அதிகரித்துள்ளது.
Gold Price Today: தொடர்ந்து எகிறும் தங்கம் விலை.. விலை குறையும் வாய்ப்பு உள்ளதா..!!! title=

தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாகவே  ஏற்ற தாழ்வு காணப்படுகிறது, மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையும், முதலீட்டாளர்களைப் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. இந்நிலையில்  தங்கம் மீது தொடர்ந்து முதலீடுகள் அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitaraman) , பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள நிலையில், தங்கம் மீது முதலீடு செய்வோர் மத்திய பட்ஜெட் அறிக்கையில் என்ன அறிவிப்பு வரப்போகிறது என ஆவலாக காத்திருக்கின்றனர். தங்கத்தின் மீதான முதலீடுகள் காரணமாக தங்கம் விலையில்தொடர்ந்து மாற்றம் காணப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 

இன்று தங்கத்தை விலை (Gold Price) 49,000 ரூபாயை தாண்டியது. MCX சந்தையின் பியூச்சர் வர்த்தகச் சந்தையில்  24 கேரட் தரமுள்ள 10 கிராம் தங்கத்தின் விலை  0.99 சதவீதம் அதிகரித்து 49,106 ரூபாயாக அதிகரித்துள்ளது. 

இதேபோல் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சென்னையில் (Chennai) கிராமுக்கு 17 ரூபாய் அதிகரித்து, 10 கிராம் தங்கம் 46,550 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 4,655 ரூபாய்க்கும், ஒரு சவரன், அதாவது 8 கிராம் தங்கம் 37,240 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது. 

அதேபோல் MCX சந்தையில், வெள்ளியின் விலை பியூச்சர் வர்த்தகச் சந்தையில் 3.21 சதவீத அதிகரித்து ஒரு கிலோ வெள்ளி 69,765 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று, ஒருகிலோ வெள்ளி விலை 70,000 ரூபாயை தாண்டியது. 
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடந்த 5 நாட்களாக  73.14 ரூபாயில் இருந்து 72.86 ரூபாய் என அதிகரித்துள்ளது. 

மத்திய அரசின் தங்க முதலீட்டுப் பத்திரங்களான சவரின் கோல்டு பாண்டு திட்டத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,912 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

ரிசர்வ் வங்கி தனது பத்திர முதலீட்டுத் திட்டத்தில் தங்கம் மீதான விலையை நிர்ணயம் செய்துள்ள நிலையில் தங்கத்தின் விலை 49,000 ரூபாய்  என்ற அளவில் இருந்து குறையச் சில மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ALSO READ | SBI: டெபிட் கார்டு இல்லாமலேயே ATM-ல் பணத்தை எடுக்கலாம்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News