IRCTC டூர் பேக்கேஜ் அறிமுகம், வாங்க சிங்கப்பூர் மலேசியா போகலாம்

IRCTC Malaysia Tour: நீங்கள் அக்டோபர் மாதத்தில் எங்காவது செல்ல திட்டமிட்டிருந்தால், உங்களுக்காக IRCTC ஒரு சிறந்த பேக்கேஜை கொண்டு வந்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 15, 2022, 02:58 PM IST
  • IRCTC டூர் பேக்கேஜ்
  • ஐஆர்சிடிசி ஒரு சிறந்த டூர் பேக்கேஜைக் கொண்டு வந்துள்ளது
  • பேக்கேஜில் என்ன வசதிகள் இருக்கும்
IRCTC டூர் பேக்கேஜ் அறிமுகம், வாங்க சிங்கப்பூர் மலேசியா போகலாம் title=

அக்டோபர் மாதத்தில் நீங்கள் பல வெளிநாட்டுப் பயணங்களுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், உங்களுக்காக ஐஆர்சிடிசி ஒரு சிறந்த பேக்கேஜைக் கொண்டு வந்துள்ளது. இந்த ஐஆர்சிடிசி பேக்கேஜின் பெயர் ஐஆர்சிடிசி சிங்கப்பூர் மலேசியா டூர் எக்ஸ்-பாட்னா ஆகும். இந்த பேக்கேஜின் கீழ் நீங்கள் சிங்கப்பூர், மலேசியாவிற்கு செல்ல முடியும். இந்த சுற்றுலா பேக்கேஜ் அக்டோபர் 13 முதல் தொடங்குகிறது. இதனுடன் நீச்சல், கடற்கரை விளையாட்டு, பைக்கிங் போன்ற பல எக்டிவிடி இந்த சுற்றுப்பயணத்தில் செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

மொத்தம் 7 இரவுகள் மற்றும் 8 பகல்களைக் கொண்ட இந்த பேக்கேஜின் கீழ், சிங்கப்பூரின் கோலாலம்பூரின் சுற்றுலா தலத்தைப் பார்வையிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஐஆர்சிடிசி இன் இந்த பேக்கேஜின் கீழ், பயணிகளுக்கு விமானம் மூலம் பயணிக்க வசதி கிடைக்கும். அதேபோல் தங்குவதற்கான மூன்று நட்சத்திர ஹோட்டலுக்கான ஏற்பாடுகளையும் ஐஆர்சிடிசி (இந்தியத் தொடர்வண்டி உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்) செய்யும். இந்த பேக்கேஜின் கீழ் நீங்கள் பயணம் செய்ய திட்டமிட்டால், இதற்கு பாட்னாவிலிருந்து மட்டுமே விமானம் கிடைக்கும்.

மேலும் படிக்க | இண்டர்நெட் இல்லாமல் டிஜிட்டல் முறையில் எல்பிஜி சிலிண்டர்களை புக் செய்வது எப்படி? 

மறுபுறம் கட்டணம் பற்றி பேசினால், தனியாக பயணம் செய்யும் பயணிகள் ரூபாய் 1,25,202 செலுத்த வேண்டும். அதே சமயம், இரண்டு பயணிகளாக பயணித்தால் டூர் பேக்கேஜில் ஒருவருக்கு ரூ.1,07,268 ஆக செலுத்த வேண்டும். அதிக்குவே மூன்று பேர் என்று பயணம் செய்தால் ஒரு நபருக்கு ரூ.1,07,268 கட்டணமாக செலுத்த வேண்டும். அதேபோல் குழந்தைகளுடன் பயணம் செய்தால், தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். அதன்படி படுக்கையுடன் ரூ.96,180, படுக்கை இல்லாமல் ரூ.85,166 செலுத்த வேண்டும்.

முன்பதிவு செய்வது எப்படி?
இந்த பேக்கேஜின் முன்பதிவு ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான irctctourism.com மூலம் செய்யலாம். இது தவிர, ஐஆர்சிடிசி சுற்றுலா வசதி மையம், மண்டல அலுவலகங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். பேக்கேஜ் தொடர்பான கூடுதல் தகவலுக்கு, ஐஆர்சிடிசி இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.

முக்கிய குறிப்பு: இந்த பேக்கேஜில் நீங்கள் விமானத்தின் வருகை மற்றும் புறப்பாடுக்கான டிக்கெட்டைப் பெறுவீர்கள். இதனுடன், ஹோட்டலில் தங்குவதற்கு இரண்டு மற்றும் மூன்று பகிரப்பட்ட அறைகள் கிடைக்கும். ஒவ்வொரு நாளும் சுற்றுலாப் பயணிகளுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படும். சிங்கப்பூரின் முழு நகரச் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவீர்கள். இரவில் லைட் சஃபாரியையும் அனுபவிப்பீர்கள். இதனுடன், பத்து மலை பார்வையிடும் வாய்ப்பும் கிடைக்கும்.

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலும், எல்லா இடங்களுக்கும் செல்ல வண்டி வசதி கிடைக்கும். இதனுடன், முழு சுற்றுப்பயணத்திற்கும் ஆங்கிலம் பேசும் வழிகாட்டியையும் பெறுவீர்கள். பயணத்தின் போது பயணக் காப்பீட்டின் பலனையும் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | Old Pension Scheme: மத்திய அரசு அளித்த விளக்கத்தால் ஊழியர்களுக்கு அதிர்ச்சி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News