ரயில் டிக்கெட் கன்பர்ம் ஆன பின்னர் பணம் செலுத்தும் வசதி.... IRCTCயின் i-Pay!

IRCTC's new  i-Pay payment gateway: ன்ஃபார்ம் டிக்கெட் அல்லாமல் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் என்றால், டிக்கெட் கன்ஃபார்ம் ஆன பின்னர் மட்டுமே உங்கள் கணக்கிலிருந்து, பணத்தை கழிக்கும் வசதி IRCTCயின் ஐபே என்னும் பேமெண்ட் கேட்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 18, 2024, 06:48 AM IST
ரயில் டிக்கெட் கன்பர்ம் ஆன பின்னர் பணம் செலுத்தும் வசதி.... IRCTCயின்  i-Pay!  title=

IRCTC's new  i-Pay payment gateway: பல சமயங்களில் நாம் ரயில்வே டிக்கெட்டை புக் செய்யும் போது, கன்பர்ம் டிக்கெட் கிடைக்காமல், வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் புக் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அப்போது, நாம் முழுமையாக பணத்தை செலுத்தி தான், டிக்கெட்டினை வாங்கி இருப்போம். டிக்கெட் கனப்ர்ம் ஆகவில்லை என்றால், பின்னர் நாம் டிக்கெட்டை கான்சல் செய்த பிறகு பணம் நமக்கு திரும்ப கிடைக்கும். இந்நிலையில், இந்திய ரயில்வேயின் IRCTC இணையதளத்தில், பணத்தை உடனடியாக செலுத்தாமல் ஈ- டிக்கெட்டுகளை புக் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

டிக்கெட் கன்ஃபார்ம் ஆன பின்னர் மட்டுமே கணக்கிலிருந்து பணத்தை கழிக்கும் வசதி

ஆம்... கன்ஃபார்ம் டிக்கெட் அல்லாமல் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் என்றால், டிக்கெட் கன்ஃபார்ம் ஆன பின்னர் மட்டுமே உங்கள் கணக்கிலிருந்து, பணத்தை கழிக்கும் வசதி IRCTCயின் ஐபே என்னும் பேமெண்ட் கேட்வேயில் (i-Pay payment gateway) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆட்டோ பே (Auto Pay)என்றும் அழைக்கப்படுகிறது. யூனிஃபைட் பேமெண்ட் இன்டர்பேஸ் என்னும் யு பி ஐ, கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துபவர்கள் இந்த வசதியை பெறலாம். நீங்கள் வாங்கும் டிக்கெட், கன்ஃபார்ம் ஆன பின்னரே, அதாவது டிக்கெட்டுக்கான PNR எண் ஒதுக்கப்பட்ட பின், உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும். அதுவரை பணம் ஏதும் கழிக்கப்படாது.

ஐ ஆர் சி டி சி யின் ஐபே ஆட்டோ பே வசதியின் மூலம் யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும்?

மிக அதிக மதிப்புடைய ஈ டிக்கெட் புக் செய்யும் தனி நபர்கள், சாதாரண அல்லது தட்கல் முறையில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வாங்குபவர்கள் இதனால் பயனடைவார்கள். இவர்களுக்கு ஐ ஆர் சி டி சி யின் ஐபே ஆட்டோ பே வசதி பெரிதும் பயன் உள்ளதாக இருக்கும். இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் ( Indian Railway Catering and Tourism Corporation Ltd.) என்னும் ஐ ஆர் சி டி சி இணையதளத்தின் பேமெண்ட் கேட்வேயின் ஆட்டோ பே அம்சம், யுபிஐ, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்துவதை எளிதாக்குகிறது.

தட்கல் வெயிடிங் லிஸ்ட் இ - டிக்கெட் 

தட்கல் வெயிடிங் லிஸ்ட் இ-டிக்கெட் வாங்கிய நிலையில்,  ரயில்வே சார்ட் தயாரித்த பிறகும் வெயிடிங் லிஸ்டில் இருந்தால், ரத்து செய்வதற்கான கட்டணம், IRCTC யின் பிற கட்டணங்கள் மட்டுமே பயனரின் கணக்கிலிருந்து கழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய IRCTC iPay இன் ஆட்டோபே அம்சத்தைப் பயன்படுத்திய நிலையில், கன்பர்ம் டிக்கெட்டுகளை ஒதுக்க முடியவில்லை என்றால், பணம் உடனடியாகத் திரும்பப் பெறப்படும்.

மேலும் படிக்க | EPF Withdrawal: பிஎஃப் பணத்தை பணி ஓய்வுக்கு முன் எடுக்க முடியுமா? இதற்கான விதிகள் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News