ஒரு பெற்றோரின் பொறுப்பு, குழந்தை கருவுறுதலில் இருந்து தொடங்குகிறது என பெரியவர்கள் கூறுவர். இதை உண்மை என்றும் சில பெற்றோர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். அந்த குழந்தையை சுகாதாரமாக பார்த்துக்கொள்வதில் இருந்து, அதற்கான நிதி நிலைமையை செழுமை படுத்துவது வரை, அனைத்தும் பெற்றோர்கள் கைகளில்தான் இருக்கிறது. இந்த குழந்தையின் தற்போதையை தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமன்றி, அக்குழந்தை வளர்ந்தவுடன் அதற்கு ஏற்படும் நிதி தேவைகளையும் பெற்றோர்கள் நிவர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது. பள்ளி செலவு, கல்லூரி செலவு, மருத்துவ செலவு என அனைத்தையும் சமாளிக்க சேமிப்புகள் உதவும். அவை என்னென்ன தெரியுமா?
கல்வி செலவுகளுக்கன முதலீடு:
அனைவருக்கும் கல்வி என்பது மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக, மிடில் கிளாசில் இருப்பவர்களுக்கு கல்வி இல்லை என்றால் எதிர்காலத்தில் கடினம்தான். எனவே, குழந்தைகளுக்கு தரமான கல்வியை கொடுப்பதற்கு அவர்களுக்கான கல்வி திட்டங்களில் முதலீடு செய்யலாம். இது, குழந்தைகளின் கல்வி குறித்த செலவுகளை பூர்த்தி செய்வது மட்டுமன்றி, அவர்களுக்கு வேறு எந்த எதிர்பாராத நிதி தேவைகள் ஏற்பட்டாலும் அதை நிறைவேற்ற உதவும்.
மேலும் படிக்க | குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..
சுகன்யா சம்ரிதி யோஜனா:
இந்த திட்டம் பெண் குழந்தையை பெற்றவர்களுக்கு உதவும். இதன் பெயர், சுகன்யா சம்ரிதி யோஜனா தொட்டர்ம். இது, அரசால் தொடங்கப்பட்டிருக்கும் ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தில் வரிச்சலுகைகள் உள்ளன. இது, குழந்தைகளின் கல்வி மட்டுமன்றி அவர்களின் திருமண காலத்திலும் உதவும். பிற திட்டங்களோடு ஒப்பிடுகையில், இந்த திட்டத்தில் மொத்தம் 8.2 சதவிகித அதிக முதலீடு கிடைப்பதாக கூறப்படுகிறது.
மியூஷுவல் ஃபண்டுகளில் முதலீடு:
இது, குழந்தைகளுக்கான முதலீடாக மட்டுமன்றி, பொதுவாக நம் எதிர்காலத்திற்காகவுமே நல்ல முதலீடாக இருக்கும். குழந்தகளின் உயர்கல்வி செலவுகள், வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கான செலவுகளை இதனால் பேலன்ஸ் செய்து கொள்ளலாம்.
ஆயுள் காப்பீட்டு திட்டம்:
குழந்தை இருந்தாலும், இல்லை என்றாலும் ஆயுள் காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்வது நல்லது. இது, குழந்தைகளின் கல்வி, திடீர் மருத்துவ செலவுகள் உள்ளிட்ட செல்வுகளை பூர்த்தி செய்ய உதவும். இந்த முதலீட்டினால் எதிர்காலம் குறித்த கூடுதல் பாதுகாப்பு கொடுக்கும் வகையில் இருக்கும். இதில், அதிக ரிட்டர்ன் கொடுக்கும் திட்டங்களை தேர்வு செய்யலாம்.
பாதுகாவலர்களை நியமிக்கவும்:
சொத்துகள் இருக்கிறது என்றால், அதற்கான உயில்களை எழுதி வைத்துவிட்டு அதற்கு பாதுகாவலர்களை நியமிக்கலாம். இதை, உங்களின் குழந்தைகளின் நலன் கருதி செய்ய வேண்டும். எதிர்கால நிதி நிலைமைகளை கருத்தில் கொண்டும், உங்கள் குழந்தைகளின் எதிர்கால பணத்தேவைகளை பூர்த்தி செய்யவும் இதை செய்யலாம்.
மேலும் படிக்க | PM முத்ரா கடன் திட்டம்... ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்... விண்ணப்பிக்கும் முறை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ