PPF Account Details: நீங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், ஒரு சூப்பரான வாய்ப்பை இங்கே பார்க்கலாம். பிபிஎப் முதலீடு மூலம் நீங்கள் நல்ல மற்றும் பாதுகாப்பான வருவாயை நீங்கள் எட்டலாம்.
பிபிஎப் கணக்கு தொடங்குங்கள்
பிபிஎப் கணக்கை நீங்கள் அருகில் இருக்கும் தபால் நிலையத்துக்கு சென்று ஓபன் செய்ய வேண்டும். 500 ரூபாய் இருந்தால் போதும் பிபிஎஃப் கணக்கை நீங்கள் தொடங்கி விடலாம். PPF கணக்கில், ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் 500 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். நீங்கள் அதை ஒரே நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் வசதிக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக டெபாசிட் செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு
பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி கிடைக்கும். இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். நீங்கள் ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.500 டெபாசிட் செய்ய வேண்டும். இல்லையென்றால், உங்களின் வங்கிக் கணக்கு முடங்கிவிடும். அதை மீண்டும் செயல்பட வைக்க, மீதமுள்ள தொகையை ரூ.50 அபராதத்துடன் சேர்த்து டெபாசிட் செய்ய வேண்டும்.
மீண்டும் முதலீடு செய்யலாமா?
PPF கணக்கின் 15 ஆண்டுகள் நிறைவடைந்ததும், வைப்புத்தொகை மற்றும் வட்டி உட்பட முழுப் பணத்தையும் திரும்பப் பெறுவீர்கள். ஆனால், அந்த நேரத்தில் உங்களுக்கு பணம் தேவையில்லை என்றால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்கள் முதலீடு செய்யலாம் அல்லது அந்த தொகையை நீட்டிக்கலாம்.
ரூ.40 லட்சம் திரும்ப கிடைக்கும்
PPF கணக்கு 15 ஆண்டுகள் நிறைவடைந்ததும் முதிர்வு பெறுகிறது. இந்த நேரத்தில் 40 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்.
மாதம் 1000 ரூபாய் டெபாசிட் செய்தால் - 3 லட்சத்து 15 ஆயிரத்து 572 ரூபாய் கிடைக்கும்
ரூ.2000-ஐ டெபாசிட் செய்தால் ரூ.6 லட்சத்து 31 ஆயிரத்து 135 கிடைக்கும்
டெபாசிட் செய்தால் ரூ.3000 - ரூ.9 லட்சத்து 46 ஆயிரத்து 704 கிடைக்கும்
ரூ.4000-ஐ டெபாசிட் செய்தால் ரூ.12 லட்சத்து 72 ஆயிரத்து 273 கிடைக்கும்
டெபாசிட் செய்தால் ரூ.5000 - ரூ.15 லட்சத்து 77 ஆயிரத்து 841 கிடைக்கும்
10000- 31 லட்சத்து 55 ஆயிரத்து 680 டெபாசிட் செய்தால் கிடைக்கும்
டெபாசிட் செய்தால் ரூ.12000 - ரூ.37 லட்சத்து 86 ஆயிரத்து 820 கிடைக்கும்
டெபாசிட் செய்தால் ரூ.12250 - ரூ.39 லட்சத்து 44 ஆயிரத்து 699 கிடைக்கும்
மேலும் படிக்க | பஞ்சாப் வங்கியின் முக்கிய அறிவிப்பு; செப்டம்பர் 1 முதல் உங்கள் கணக்கு மூடப்படும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ