Infosys Chairman N. R. Narayana Murthy Grandson Become India's Billionaire : விந்தையான விஷயங்கள் நடைபெறுவதற்கு பஞ்சமே இல்லாத நாடு, இந்தியா. நம் நாட்டில்தான் ஒரே பாட்டில் ஒருவர் பணக்காரர் ஆவதும், ஒரே இரவில் பணக்காரன் ஒருவன் ஏழை ஆவதும் நடைபெறும். அந்த வகையில், தற்போது புதுமையான விஷயம் ஒன்று கையில் சிக்கியுள்ளது. இந்தியாவின் பணக்காரர்கள் தர வரிசை பட்டியலில் திடீரென்று, ஒரு 4 மாத குழந்தையின் பெயர் இடம் பெற்றிருந்தது. இதை பார்த்த மக்கள், “அது எப்படி சாத்தியம்..” என மனம் குழம்பி நின்றிருக்க, அதன் பின்னர்தான் முழு சங்கதி என்ன என்பது தெரிந்திருக்கிறது. இதற்கு பின்னால் என்ன நடந்தது? முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
பணக்கார பட்டியலில் இடம் பெற்ற 4 மாத குழந்தை..
இந்தியாவின் பணக்கார பில்லியனர்களின் பெயர் கொண்ட பட்டியல், சமீபத்தில் வெளியானது. இதில், மக்கள் அனைவரும் எதிர்பார்த்த முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, ஷிவ் நாடார், ராதகிருஷ்ணன் தாமினி உள்ளிட்ட பலரின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. இதில், 4 மாத குழந்தையான ஏக்ராஹ் ரோஹன் மூர்த்தி (Ekahrah Rohan Murthy) என்ற பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்த குழந்தை யார்? இந்த 4 மாத குழந்தை எப்படி இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தது? இங்கு பார்ப்போம்..
மேலும் படிக்க | உங்கள் வங்கி சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்க முடியும்?
அதிக பங்குகளை பெற்ற குழந்தை..
இந்த 4 மாத குழந்தை வேறு யாரும் இல்லை, இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமாக இருக்கும், என்.ஆர்.நாராயண மூர்த்தியின் பேரப்பிள்ளைதான். இந்த குழந்தைக்கு, பரிசாக என்.ஆர்.நாராயண மூர்த்தி தனது நிறுவனத்தில் இருந்து 15,00,000 பங்குகளை கொடுத்திருக்கிறார். இது, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 0.04 சதவிகித பங்குகள் ஆகும். நாராயண மூர்த்தி கையில் வைத்திருந்த 0.40 சதவிகித பங்குகளில் இருந்து 0.36 சதவிகிதமாக மாறியுள்ளது.
நாராயண மூர்த்தியின் மகன் ரோஹனிற்கும் அபர்ணா கிருஷ்ணாவிற்கும் பிறந்த குழந்தைதான், ஏகார்க். நாராயண மூர்த்தியின் பேரக்குழந்தையான இது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தது. இந்த குழந்தைக்கு, மகாபாரத கதையில் இடம் பெற்றிருந்த ஒரு அர்ஜுனன் கதாப்பாத்திரத்தை நினைவு படுத்தும் வகையில் ஏகார்க் என பெயரிடப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனம் குறித்து..
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களுள் முதன்மையான நிறுவனமாக இருக்கிறது, இன்ஃபோசிஸ். இந்த நிறுவனத்தின் தலைமையகம் பெங்களூருவில் உள்ளது. 2021ஆம் ஆண்டில், அமெரிக்க சந்தை மதிப்பு படி 100 பில்லியன் டாலர்களை தொட்ட நான்காவது இந்திய டெக் நிறுவனம், இன்ஃபோசிஸ்தான். தற்போது இந்த நிறுவனத்தில் 3 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ