ரயில்வேக்கான மானிய கோரிக்கைகள் குறித்த விவாத்தில் பதிலளித்த கோயல், இரண்டு ஆண்டுகளில் ரயில் விபத்து காரணமாக எந்தவொரு பயணிகளும் இறக்கவில்லை என்றும், பயணிகளின் பாதுகாப்பில் ரயில்வே மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.
அரசு மற்றும் தனியார் துறைகள் ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் நாடு அதிக வளர்ச்சியை நோக்கி முன்னேறவும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும் என்றார்.
இந்திய ரயில்வே ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிபடக் கூறினார். ஆனால் ரயில்வே மேலும் சிறப்பாக செயல்பட தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்றார்.
ALSO READ | 2000 ரூபாய் நோட்டு இன்னும் அச்சிடப்படுகிறதா.. மத்திய அரசு கூறியது என்ன..!!!
"இந்திய ரயில்வே ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது. இது ஒவ்வொரு இந்தியரின் சொத்து, அது எந்த வித மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கும்" என்று அமைச்சர் மேலும் கூறினார். ரயில்வே எப்பொதும் இந்திய அரசாங்கத்திடம் தான் இருக்கும் என உறுதி கூறினார்.
2019-20 நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்த ரயில்வே முதலீடுகள், 2021-22 நிதியாண்டில் ரூ .2.15 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
"நாங்கள் பயணிகளின் பாதுகாப்பில் முழுமையாக கவனம் செலுத்துகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் பயணிகள் இறப்பு ஏதும் ஏற்படவில்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ரயில் விபத்து காரணமாக கடைசியாக 2019 மார்ச் மாதம் மரணம் நேரிட்டது" என்று அமைச்சர் கூறினார்.
ALSO READ | புதிய ஊதிய விதிகள் உங்கள் சம்பளத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR