ரயில் டிக்கெட் ரத்து செய்தால்.. பணத்தை திரும்ப பெற புதிய விதிகள்!

அங்கீகாரம் இல்லாதவர்கள் அல்லது ஸ்கிரிப்டிங் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை பணத்தைத் திரும்பப் பெறாமல் வெளியிடலாம் என்று ரயில்வே துறை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Feb 12, 2023, 10:33 AM IST
  • பயணிகளின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமாக ஓடிபி அனுப்பப்படும்.
  • ரத்துசெய்த தொகையானது வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் திருப்பியளிக்கப்படும்.
  • வாடிக்கையாளர்/பயணிகள் தொகையை திரும்ப பெறுவதற்கு ஓடிபி-யை பகிர்ந்துகொள்ள வேண்டும்.
ரயில் டிக்கெட் ரத்து செய்தால்.. பணத்தை திரும்ப பெற புதிய விதிகள்! title=

இந்திய ரயில்வே தற்போது ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளுக்கான பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.  அங்கீகாரம் இல்லாதவர்கள் அல்லது ஸ்கிரிப்டிங் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை பணத்தைத் திரும்பப் பெறாமல் வெளியிடலாம் என்று ரயில்வே துறை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.  இரண்டாம் வகுப்பு (2எஸ்) முன்பதிவு டிக்கெட் வைத்திருப்பவர்கள், பயணத்திற்கு முன் தங்கள் பிஎன்ஆர் நிலையை சரிபார்க்க வேண்டும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.  2S முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்கள் பிஎன்ஆர் விசாரணையில், 'ரூட் கிளாஸ் டெலீட்டட்/வழித்தடத்திற்கான கொடுக்கப்பட்ட வகுப்பின் முன்பதிவு டெலீட்டட்' என்று வந்தால் முழுப் பணத்தையும் திரும்பப் பெற அந்த டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ அரியர் பற்றிய முக்கிய அப்டேட்

ஓடிபி அடிப்படையில் ரயில் டிக்கெட்டுகளுக்கான பணத்தைத் திரும்பப்பெறும் புதிய முறையை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியது.  ரத்துசெய்யப்பட்ட அல்லது முழுமையாக காத்திருப்புப் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட இ-டிக்கெட்டுகளுக்கு பணத்தைத் திரும்பப்பெறும் முறையைக் நோக்கமாகக் கொண்டுள்ளது.  இந்த புதிய முறையை இந்திய ரயில்வே பொதுத்துறை நிறுவனம், இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஆர்சிடிசி) செயல்படுத்தும்.  பயணிகளின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமாக ஓடிபி அனுப்பப்படும்.  வாடிக்கையாளர்/பயணிகள் தொகையை திரும்ப பெறுவதற்கு ஓடிபி-யை பகிர்ந்துகொள்ள வேண்டும்.  ரத்துசெய்த தொகையானது வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் திருப்பியளிக்கப்படும்.

1) ஐஆர்சிடிசி-யில் இரயில் இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது சரியான மொபைல் நம்பரை வழங்க வேண்டும்.

2) இரயில் இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது மொபைல் எண்ணை சரியாகப் பதிவு செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

3) ஐஆர்சிடிசி அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மட்டுமே வாடிக்கையாளருக்கு இரயில் இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்னரே டிக்கெட் வாங்கியிருந்தால் பணத்தைத் திரும்பப்பெறும் விதியின்படி செலுத்த வேண்டிய தொகை பயணிகளுக்குத் திருப்பியளிக்கப்படும்.  இருப்பினும், முன்பதிவு செய்யும் போது வசூலிக்கப்படும் சேவை வரியின் மொத்தத் தொகையும் பயணிகளுக்குப் பணமாகத் திருப்பித் தரப்படாது.  ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு டிக்கெட் வாங்கி ரத்து செய்தால், வாங்கும் போது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். 

மேலும் படிக்க | பாலிசிதாரர்கள் கவனத்திற்கு... எல்ஐசி வழங்கும் வாட்ஸ்அப் சேவை - முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News