Reliance AGM Mukesh Ambani: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, பல மூத்த உலகளாவிய மூலோபாய மற்றும் நிதி முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் சில்லறை விற்பனையில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என தெரிவித்தார். ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் சமீபத்தில் கத்தாரின் அரசு நிறுவனத்தில் இருந்து ஒரு பில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது. தற்போதைய மதிப்பீட்டின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டிருந்தால், பட்டியலிடப்பட்ட முதல் 4 யூனிட்டுகளில் ரிலையன்ஸின் சில்லறை வணிகம் இடம்பெற்றிருக்கும் என்று அவர் கூறினார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குதாரர்களிடம் உரையாற்றிய முகேஷ் அம்பானி, "ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் மதிப்பீடு மூன்று ஆண்டுகளுக்குள் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மதிப்பு உருவாக்கம் நடக்கும் விதத்தில், உலக அளவில் போட்டி இல்லை. பல முன்னணி உலகளாவிய மூலோபாய மற்றும் நிதி முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் சில்லறை விற்பனையில் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். அவர்களுடன் எங்களின் முன்னேற்றம் குறித்து சரியான நேரத்தில் உங்களுக்கு தெரிவிப்பேன்" என்றார்.
QIA ஒரு சதவீத பங்குகளை வாங்கியது
கத்தார் முதலீட்டு ஆணையம் (QIA) சமீபத்தில் 100 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர் லிமிடெட் (RRVL)-இல் ரூ. 8,278 கோடி (ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்து சுமார் ஒரு சதவீதப் பங்குகளை வாங்கியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குள் அதன் மதிப்பீடு இரட்டிப்பாகியுள்ளது என்று முகேஷ் அம்பானி கூறினார். ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் ரூ.100 கோடி பரிவர்த்தனை என்ற மைல்கல்லை கடந்துள்ளது. சில்லறை சந்தையின் மூத்த நிறுவனமாக அறியப்படும் ரிலையன்ஸ், நாடு முழுவதும் சுமார் 18,040 கடைகளை நடத்துகிறது.
மேலும் படிக்க | Reliance AGM தொடங்குவதற்கு முன்னரே ஏற்றம் காணும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்
இரு மடங்காகிவிட்டது
2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நிறுவனத்தின் நிதி திரட்டலின் போது, எங்கள் சில்லறை வணிகத்தின் மதிப்பீடு ரூ.4.28 லட்சம் கோடியாக இருந்தது என்று அம்பானி குறிப்பிட்டார். மூன்று ஆண்டுகளுக்குள், உலகளாவிய கொரோனா தொற்றுநோய் இருந்தபோதிலும், அதன் மதிப்பீடு கிட்டத்தட்ட இருமடங்கு ஆகிவிட்டது என்றார். "இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், ரிலையன்ஸ் ரீடெய்ல் பட்டியலிடப்பட்டால், அது நாட்டின் முதல் நான்கு நிறுவனங்களிலும், உலகளாவிய லேபிளில் உள்ள முதல் 10 சில்லறை விற்பனை நிறுவனங்களிலும் இடம்பிடிக்கும்" என்றார்.
குளிர்பான உற்பத்தி
இதனுடன், அம்பானி குடும்பத்தின் குளிர்பான வணிகத்திலும் அதிக கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிகிறது. அதாவது, கடந்த ஆண்டு உள்நாட்டு குளிர்பான பிராண்டான காம்பா கோலாவை வாங்கிய பிறகு, ரிலையன்ஸ் ரீடெய்ல் அதன் உற்பத்தியை அதிகரித்து ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட உலக சந்தைகளில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் கடந்த ஆண்டு ப்யூர் டிரிங்க்ஸ் குழுமத்திடம் இருந்து ரூ. 22 கோடிக்கு கேம்பா கோலா (Campa Cola) பிராண்டை வாங்கிய பிறகு அதனை மீண்டும் அறிமுகப்படுத்தியது. இப்போது இந்த குளிர்பான தயாரிப்பு, கோகோ கோலா மற்றும் பெப்சிகோ போன்ற உலகளாவிய பிராண்டுகளுடன் போட்டியிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் அதன் இருப்பை பதிவு செய்யத் தொடங்கியுள்ளது.
இஷா அம்பானியின் பேச்சு
ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் இயக்குநர் இஷா அம்பானி இதுகுறித்து கூறுகையில், "இந்தியாவின் பிரத்யேக சுவையுடன் கூடிய கேம்பா கோலாவை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம், வாடிக்கையாளர்கள் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்திய சந்தையில் அதன் உற்பத்தியை அதிகரித்து, உலகச் சந்தைக்கும் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இது ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து தொடங்கும்.
ரிலையன்ஸ் ரீடெய்லின் FMCG பிரிவான Reliance Consumer Products, கேம்பா கோலாவின் உற்பத்தி மற்றும் பேக்கேஜிங்கிற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையை தளமாகக் கொண்ட சிலோன் பெவரேஜஸ் இன்டர்நேஷனலுடன் ஒரு மூலோபாய பார்ட்னர்ஷிப்பில் நுழைந்தது. கோகோ கோலா மற்றும் பெப்சிகோ போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் நுழைவதற்கு முன்பு கேம்பா கோலா நாட்டில் பிரபலமான குளிர்பான பிராண்டாக இருந்தது. ஆனால் தொண்ணூறுகளில் அதிகரித்த போட்டியால், அதன் பொலிவை இழந்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ