Senior Citizen Saving Scheme: அஞ்சல் அலுவலகம் மாத வருமானத்தைத் தரும் பல முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அஞ்சல் அலுவலகத்தின் அத்தகைய திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம். இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கு நிலையான மாத வருமானத்தை வழங்குகிறது. அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அரசாங்கம். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்க்தில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த திட்டத்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
தபால் அலுவலகத்தின் இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம். முதலீட்டாளர்கள் இதில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் 80C இன் கீழ் விலக்கும் கிடைக்கும்.ஓய்வூதியம் பெறாத 60 வயது நிரம்பியவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஓய்வுக்குப் பிறகு, வழக்கமான வருமானத்தைப் பெறுவதில் உதவி செய்யும் நோக்கில், தபால் துறையின் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டம் விருப்பு ஓய்வு (VRS) எடுத்தவர்களுக்கும் பொருந்தும். இந்த திட்டத்திற்கு அரசு தற்போது 8.2 சதவீத வட்டியை வழங்குகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில், மூத்த குடிமக்கள் ரூ.15 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்தால், ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.10,250 சம்பாதிக்கலாம். 5 ஆண்டுகளில் நீங்கள் வட்டி வருமானமாக ரூ.6,15,000 வரை சம்பாதிப்பீர்கள். உங்கள் ஓய்வூதியப் பணத்தை, அதாவது அதிகபட்சம் ரூ. 30 லட்சத்தை இதில் முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.2,46,000 வட்டி கிடைக்கும். அதாவது மாத அடிப்படையில் ரூ.20,500 மற்றும் காலாண்டு அடிப்படையில் ரூ.61,500 கிடைக்கும்.
மேலும் படிக்க | வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது எப்படி
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்ட வருமானம்: ஒரு கணக்கீடு
1. மொத்தமாக முதலீடு செய்யப்பட்ட பணம்: ரூ.30 லட்சம்
2. முதலீட்டு காலம்: 5 ஆண்டுகள்
3. வட்டி விகிதம்: 8.2%
4. முதிர்வில் கிடைக்கும் வருமானம்: ரூ 42,30,000
5. வட்டி வருமானம்: ரூ 12,30,000
6. காலாண்டு வருமானம்: ரூ.61,500
7. மாத வருமானம்: ரூ 20,500
8. ஆண்டு வட்டி வருமானம் - 2,46,000
SCSS திட்டத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள்
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் இந்திய அரசால் நடத்தப்படும் சிறு சேமிப்பு திட்டமாகும். இதில், வருமான வரிச் சட்டப் பிரிவு 80சியின் கீழ், முதலீட்டாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்குப் பலனைப் பெறலாம். இதில் ஒவ்வொரு ஆண்டும் 8.2% வட்டி வருமானம் கிடைக்கும். இதில், 3 மாதங்களுக்கு ஒருமுறை வட்டி பணம் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மற்றும் ஜனவரி முதல் தேதியில் வட்டி வருமானம் முதலீட்டாளர்களின் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்.
தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டக் கணக்கை கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு மூடலாம். முதிர்ச்சிக்கு பிறகும், நீங்கள் விரும்பினால், இந்தத் திட்டத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ